கிழக்கு இலங்கையில் உள்ள குறிஞ்சகேனி நகரில் இருந்து கின்னியா நகரை நோக்கி 23 பேருடன் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனை அடுத்து கடற்படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த விபத்தில் 4 பள்ளி மாணவர்கள் உள்பட 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
படகு விபத்து தொடர்பாக மனதை உருக்கும் செய்தியொன்று வெளிவந்துள்ளது. முதியவரொருவர் தனது பேரனை பாடசாலைக்கு அனுப்புவதற்காக படகுப் பாதையில் ஏறியிருந்தார்.
பாதை கரையை அடைவதற்கு சொற்ப தூரமே இருந்தது. இரண்டாம் வகுப்பில் படிக்கும் தனது பேரனை பாடசாலைக்கு கூட்டி வந்து கொண்டிருந்தார்.
பாதை தண்ணீரில் மூழ்கி, புரண்டு கொண்டிருக்கையில் தன்னையும் பொருட்படுத்தாமல் பேரனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நீச்சலடித்தார்.
🛑 சமீபத்தில் இலங்கையில் இடம்பெற்ற படகு விபத்தில் நீருக்குள் மூழ்கும் சிறுவனை காப்பாற்றும் ஊர் மக்கள், மனதை உருக வைக்கும் காட்சி!#SriLanka #Trending #Tamilnadu #Tamilnews #Kinniya pic.twitter.com/HcUSZqg07U
— Aaram tv (@jaffna_seithi) November 24, 2021
அதற்குள் பாதை புரண்டதை கண்ட பலரும் தண்ணீரில் குதித்து மூழ்கியிருப்பவர்களை காப்பாற்ற பாடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தச் சமயம் ஓர் இளைஞன் முதியவரிடமிருந்து சிறுவனை வாங்கிக் கொண்டு கரையில் கொண்டு வந்து சேர்த்து விட்டான்.
நீரின் ஆழத்தில் தன்னை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாமல் முதியவர் திணறினார். பலரும் ஒரொவரையொருவர் காப்பாற்ற மேற்கொண்ட பெரும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் அந்த முதியவர் தண்ணீரில் மூழ்கி இறந்து போனார்.
இச்சம்பவம் பெரும் சோகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.