அறிவான குழந்தை பிறக்க தாய் என்னென்ன செய்ய வேண்டும்? | Get an Intelligent Baby in Tamil

அறிவான குழந்தை பிறக்க தாய் என்னென்ன செய்ய வேண்டும்?

பாரம்பர்யமாக சில வழக்கங்களை நம் முன்னோர்கள் கர்ப்பக்காலத்தில் கடைபிடித்து வந்தனர். குழந்தை ஆரோக்கியத்துடன், அறிவுடன் பிறக்கவும் சுக பிரசவம் நடப்பதற்கும் உணவு முறைகள், பராமரிப்பு வழிமுறைகளை சிலவற்றை பின்பற்றி வந்தனர். அவற்றைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

நம்பிக்கை உள்ளவர்கள் இதைப் பின்பற்றி பயன் பெறலாம். உணவுகள், மூலிகைகள் உடல்நலத்தை மேம்படுத்தும்.

என்னென்ன உணவு முறைகள் நல்லது?

கர்ப்பக்காலத்தில் தாய் உட்கொள்ளும்போது, காரம், உப்பு போன்ற சுவைகளை அதிகமாக உண்ணக் கூடாது. அளவாக சாப்பிடுவது நலம்.

செரிமானத்துக்கு பிரச்னை ஏற்படுத்தும் உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

இனிப்பு சுவை உணவையும் சாப்பிட வேண்டும். இயற்கையான இனிப்பு சுவை நல்லது. வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு, நாட்டு சர்க்கரை, பழங்களில் உள்ள இனிப்பு போன்றவை.

பால், நெய், அரிசி போன்ற உணவுகளைச் சாப்பிடலாம்.

உணவுப் பொருளை கஞ்சி வடிவில் சாப்பிடலாம். செரிமானத்தைத் தூண்ட கூடியது.

சுவையான உணவுகளை சாப்பிடுவதும் முக்கியம். சுவை இல்லாத உணவுகளைக் கடமைக்கு என சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.

மாவுச்சத்து, புரத சத்து, நார்ச்சத்து, கொழுப்பு, விட்டமின், தாதுக்கள் ஆகிய சமச்சீர் சத்துகள் கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும்.

மாதம் மாதம் பின்பற்றும் முறைகள்…

இதையும் படிக்க: கர்ப்பிணிகள் காபி, டீ குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் தெரியுமா?

முதல் மாதம்

இந்த மூலிகைக்கு குறுந்தோட்டி, குறுந்தட்டி எனப் பல பெயர்கள் உள்ளன. இந்த மூலிகையின் வேரைப் பாலில் காய்ச்சி ஆறின பின் குடிக்கலாம்.

2-வது மாதம்

பாலில் இனிப்பு சேர்த்து, அதிமதுரம் சேர்த்துக் குடிக்கலாம்.

3-வது மாதம்

பாலில் தேனும் நெய்யும் சேர்த்துக் குடிக்கலாம். தேன் 1 டீஸ்பூன் சேர்த்தாலே போதும். அதிகம் வேண்டாம்.

4-வது மாதம்

பாலுடன் வெண்ணெய் சேர்த்து சாப்பிடுவது நல்லது.

5-வது மாதம்

பாலிலிருந்து கடைந்து எடுத்த நெய்யை, அரிசி அல்லது கோதுமை கஞ்சியில் சேர்த்து சாப்பிடலாம்.

6 மற்றும் 7-வது மாதம்

இனிப்பு சுவை மூலிகைகளை சாப்பிடலாம். நெய்யுடன் இனிப்பு தரும் மூலிகைகளை சேர்த்து சாப்பிடலாம் .

8-வது மாதம்

அரிசி, சிறுதானியம், சம்பா கோதுமை போன்ற கஞ்சிகளில் பால், நெய் சேர்த்து சாப்பிட வேண்டும்.

9-வது மாதம்

பாலுடன் தண்ணீர்விட்டான் கிழங்கு சேர்த்து காய்ச்சி எடுக்கலாம்.

தன்வந்திரி தைலத்தை தொடை, இடுப்பு, கால்கள் பகுதியில் தடவி 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கலாம்.

இதையும் படிக்க: கர்ப்பக்காலத்தில் கட்டாயமாக சாப்பிட கூடாத 13 வகை உணவுகள்

அறுசுவையில் உள்ள நன்மைகளும் பிரச்னைகளும்

புளிப்பு சுவை

கர்ப்பிணிகள் மிக அதிகமாக புளிப்பு சுவையை சாப்பிட்டால், பிறக்கும் குழந்தை ரத்த பித்தம் பிரச்னைக்கு ஆளாகலாம்.

அதிகமான புளிப்பு சுவை, தோல் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

கண்களுக்கும் கெடுதிதான்.

புளிப்பு சுவை அளவாக சாப்பிடுவது நல்லது.

இனிப்பு சுவை

இனிப்பை அதிகமாக எடுத்துக்கொண்டால் உடல்பருமனாகி விடலாம்.

சிறுநீர் தொடர்பான பிரச்னை வரலாம்.

அதிகமான இனிப்பு சுவை இல்லாமல் அளவுடன் சாப்பிடுங்கள். வெள்ளை சர்க்கரை வேண்டாம்.

இதையும் படிக்க: கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் 7 பயம்… உண்மை நிலை என்ன?

உப்பு சுவை

உப்பு அதிகமாக எடுத்துக்கொண்டால் பிறக்கும் குழந்தைக்கு நரை, வழுக்கை, தோல் சுருக்கம் ஆகியவை சீக்கிரம் வரலாம்.

ஊறுகாய், கருவாடு தவிர்க்கலாம்.

அளவாக உப்பை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்துப்பு நல்லது.

துவர்ப்பு சுவை

பாக்கு, ஸ்வீட் பீடா போன்றவற்றை சாப்பிட கூடாது.

காய்கறிகள், பழங்களில் உள்ள துவர்ப்பு சுவை மிகவும் நல்லது.

கசப்பு சுவை

கசப்பு சுவை அதிகம் வேண்டாம். தினந்தோறும் சாப்பிட கூடாது.

அளவுடன் சாப்பிட்டு வரலாம். வாரம் 1-2 முறை சாப்பிடுவது நல்லது. காய்கறிகளில் உள்ள கசப்பு சுவை நல்லது.

காரம் சுவை

அதிகமான கார சுவை குழந்தையை பலமற்றதாக்கிவிடும்.

இதையும் படிக்க: முதல் 3 மாதங்கள்… கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டியதன் காரணம் தெரியுமா?

கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டியவை

மலம், சிறுநீர், வாயு ஆகியவற்றை அடக்க கூடாது. இதன் வேகத்தையும் அடக்க கூடாது.

உட்காரும் இடம் மிக உயரமாக இருக்க கூடாது.

சுகமற்ற, கோணலான, சௌகரியம் இல்லாத இடங்களில் உட்கார கூடாது.

அளவுடன் உடலுழைப்பு இருக்கலாம். அதிகம் வேண்டாம்.

வாகனங்களில் அடிக்கடி, வேகமாக செல்ல கூடாது.

வயிற்றில் அடிக்கடி அழுத்தம் தரும் செயல்களை செய்ய கூடாது.

உடலுக்கு சூட்டைத் தரும் உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள்.

சண்டை, சச்சரவு, கோபம், பொறாமை, அழுகை போன்ற சூழல்களைத் தவிர்க்க வேண்டும்.

அதிகமான பகல் உறக்கம் வேண்டாம். அளவான பகம் உறக்கம் போதும். ஒரு மணி நேரம் வரை தூங்கலாம்.

இதையும் படிக்க: கரு பத்திரமாக இருக்க கர்ப்பிணிகள் எதையெல்லாம் செய்ய கூடாது?

அறிவான குழந்தை பிறக்கத் தாய் சாப்பிட வேண்டியவை

கீரைகள்

காய்கறிகள், பழங்கள்

மீன்

முட்டை

பாதாம்

வால்நட்

வெண்ணெய் பழம் – அவகேடோ

யோகர்ட்

விதைகள்

பீன்ஸ் வகைகள்

இதையும் படிக்க: பிரசவம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்னென்ன? பிரசவ வலியை சமாளிப்பது எப்படி?

Related posts

வெள்ளை படுதல் குணமாக வீட்டு வைத்தியம் மற்றும் ஹோம்மேட் வெஜினல் வாஷ்…

பாதாம் பயன்கள்: குழந்தை முதல் பெரியவர்கள் வரை!

இரட்டைக் குழந்தைகள் பிறக்க என்ன செய்ய வேண்டும்? என்ன சாப்பிட?