கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மாரடைப்பால் உயிரிழந்தார்.
அவரின் உடல் அரசு மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் இருக்கும் பண்ணை வீட்டு வளாகத்தில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் மக்கள் எஸ்.பி.பி.யின் சாதனைகள், அவர் செய்த நன்கொடைகள், நல்ல குணம் பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போது ஒரு தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
எஸ்.பி.பி ஆயிரம் நிலவே வா என தொடங்கி ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி சினிமாவில் புகழின் உச்சத்தை அடைந்துள்ளார். அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவரின் அந்த குரல் ரசிகர்களின் மனங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
1990 ல் வந்த கிழக்கு வாசல் படத்தில் மூன்று பாடல்களை எஸ்.பி.பி பாடியுள்ளார். இப்படத்தின் போது அவர் குரலில் ஆப்ரேசன் செய்திருந்தாராம். அவ்வலியுடன் தான் இப்பாடல்களை பாடிக்கொடுத்தாராம்.
குறிப்பாக பச்சமலை பூவு பாடலின் போது அவருக்கு மிகவும் வலி ஏற்பட்டதாம். இது போன்ற பல தகவல் அவரின் இறப்புக்கு பின்னர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை நெகிழ செய்து வருகின்றது.