பிரேசில் நாட்டில் பிரபல சுற்றுலாத்தலத்தில் பாறை ஒன்று பெயர்ந்து சுற்றுலாப்பயணிகள் மீது விழுந்த சம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தில் இதுவரை ஐவர் ம ரணமடைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் Furnas ஏரி அருகாமையில் canyon wall என்ற பாறை அடுக்கு அமைந்துள்ளது. சுற்றுலாப்பயணிகள் படகுகளில் இதன் அருகாமையில் சென்று சவாரி செய்வது வழக்கம்.
இதில், சம்பவத்தின் போது கோபுரம் போன்ற ஒரு பாறை அடுக்கு திடீரென்று பெயர்ந்து ஏரியில் வி.ழு.ந்துள்ளது. இச்சம்பவத்தில் குறைந்தது இரு படகுகள் அந்த பாறை அடுக்கில் சிக்கியிருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.
எஞ்சிய படகுகள் நூ.லி.ழையில் அந்த வி.ப.த்தில் இருந்து தப்பியுள்ளதாகவே தெரிய வந்துள்ளது. இதுவரை ஐவரின் ச டலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 20 பேர்கள் மாயமானதாக கூறப்படுகிறது.
வி.ப.த்.தில் சிக்கி காய மடைந்தவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது ஒருவர் தலை மற்றும் முகத்தில் கா யங்களுடன் மருத்துவமனையில் ஆ.ப.த்தான நிலையில் உள்ளார். மேலும் 23 பேர் லேசான கா யங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோபுர வடிவான அந்த பாறை பெயர்ந்து விழயிருப்பதை சில படகில் இருந்த பயணிகள் கவனித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அந்த பாறைக்கு அருகே நெருங்க வேண்டாம் என எ.ச்.சரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
— BNO News (@BNONews) January 8, 2022