கர்ப்பமாக இருப்பது என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. அதை அனுபவித்தவர்களிடம் கேட்டால் எவ்வளவு உணர்வுபூர்வமானது என்று சொல்வார்கள். ஆனால், பலருக்கும் தான் கர்ப்பமாக இருக்கிறேனா என்பதில் சந்தேகம் இருக்கும். இந்தக் குழப்பங்களைத் தீர்க்கத்தான் இந்தப் பதிவு. கர்ப்பமாக இருக்கிறோமா என்பதை இந்த அறிகுறிகள் வைத்தே நீங்கள் கணிக்கலாம்.
நீங்கள் கர்ப்பமாக இருக்கும் செய்தி, எல்லையற்ற மகிழ்ச்சி என்பதை ஒப்புகொள்கிறோம். ஆனால், மருத்துவரிடம் சென்று ஒருமுறை பரிசோதனை செய்து உறுதி செய்துகொள்வது மிக மிக அவசியம்.
சமீபத்தில் நடந்த ஒரு விஷயம் இது. ஒரு மருத்துவர் அந்தப் பெண்ணிடம் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று வாழ்த்தி அனுப்பிவிட்டார். ஒரு மாதம் கழித்து பயங்கர வயிறு வலி என்று வேறொரு மருத்துவரிடம் சென்றபோதுதான் தெரிந்தது. கரு நின்றிருப்பது கர்ப்பப்பையில் அல்ல, ஃபெலொபியன் டியூப்பில்… உடனடி சிகிச்சை செய்து அந்தப் பெண்ணை காப்பாற்றியாகிவிட்டது. இதுபோன்ற கவனக்குறைவு சில இடங்களில் நடக்கத்தான் செய்கிறது. ஆதலால், நல்ல மகப்பேறு மருத்துவரிடம் சென்று ஒருமுறை பரிசோதனை செய்து, உறுதி செய்துகொள்வது நல்லது. பாதுகாப்பானதும்கூட.
1-4 வாரங்கள்…
மாதவிலக்கு நின்று போகுதல்
சிறுநீர்ப்பை எரிச்சல்
குமட்டல், வாயு, இறக்கம்
மார்பகங்களில் மாற்றங்கள் ஏற்படுதல்.
4-8 வாரங்கள்
மேற்சொன்ன அறிகுறிகள் அனைத்தும்
கூடுதலாக, கருப்பையில் மாறுதல்கள்
பிறப்புறுப்பு தடித்தல்
இதையும் படிக்க: முதல் 3 மாதங்கள்… கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டியதன் காரணம் தெரியுமா?
8-12 வாரங்கள்
மாதவிலக்கு வராமல் இருத்தல்
குமட்டல், வாயு, இறக்கம்
மார்பகங்களில் மாற்றங்கள் ஏற்படுதல்.
கருப்பையில் மாறுதல்கள்
பிறப்புறுப்பு தடித்தல்
மார்பகங்களின் நுனி வலய நிற மாற்றம்
கருப்பை கழுந்து மென்மையாதல்
கருப்பை கழுந்து குறைந்தது போல் தோன்றல்
பிறப்புறுப்பு சுவர் நிறம் மாறுதல்
12 – 16 வாரங்கள்
மேற்சொன்ன அறிகுறிகள்
வயிறு தொடர்ந்து பெரிதாகுதல்
16 – 20 வாரங்கள்
மேற்சொன்ன அறிகுறிகள் உட்பட
கருப்பையில் கிசுகிசுப்பு உணர்தல்
குழந்தையின் அசைவுகளை உணர்தல்
இதையும் படிக்க: 2 மற்றும் 3-வது டிரைமெஸ்டரில் கருவின் வளர்ச்சி என்ன?
20 – 24 வாரங்கள் முதல் 40 வாரங்கள் வரை
மேற்சொன்ன அறிகுறிகள்
குழந்தையின் அசைவுகளை நன்றாக உணர்தல்
குழந்தையின் இதய துடிப்பைகூட கவனிக்க முடியும்
கவனிக்க வேண்டிய உடல்நல மாற்றங்கள்…
சோர்வு
கர்ப்பமாக இருக்கும்போது சோர்வாக உணர்வீர்கள்.
கரு உருவாகி ஒரு வாரத்திலேகூட சோர்வு காணப்படலாம்.
ஓய்வு அவசியம்.
சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
புரோட்டீன், இரும்பு சத்து உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ளலாம்.
காலை நேர உடல்நல தொந்தரவுகள்
இந்த பிரச்னை அனைத்து கர்ப்பிணிகளுக்கும் இருக்காது. சிலருக்கு மட்டுமே.
காலை எழுந்ததும் குமட்டல் உணர்வு இருக்கும்.
ஹார்மோன் மாற்றத்தால் ஏதாவது ஒரு சுவை அதிகமாக பிடிக்கலாம். சில சுவைகள் பிடிக்காமலும் போகலாம்.
ஆரோக்கியமான உணவு மிக மிக அவசியம். ஏனெனில் குழந்தையின் வளர்ச்சிக்கு சத்துகள் தேவை.
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
6-8 வது வாரத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டே இருப்பார்கள்.
சிறுநீர் தொற்று பிரச்னை வரலாம் என்பதால் முன்பிருந்தே சுத்தமாக பராமரித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்க: கர்ப்பிணிகள் எப்போது பயணம் செய்ய கூடாது? பயணிக்க உதவும் பாதுகாப்பு டிப்ஸ்…
மன மாற்றம்
முதல் மும்மாதத்துக்கு அதிகமான மன மாற்றங்கள் இருக்கும். மகிழ்ச்சி, அழுகை, துக்கம், கோபம், காதல், ஏக்கம், சிரிப்பு என உணர்வுகள் அடிக்கடி மாறும்.
மேலும் சில அறிகுறிகள்…
முதுகு வலி
தலை வலி
சோர்வு
மயக்கம்
வயிறு உப்புசம்
மலச்சிக்கல்
மூக்கடைப்பு
வயிறு பிடித்துக்கொள்ளுதல்
லேசாக ரத்த கசிவு
உணவின் மீது வெறுப்பு உணர்வு
இதையும் படிக்க: கர்ப்பக்காலத்தில் வரக்கூடிய உடல்நல பிரச்னைகளும் தீர்வுகளும்…