திடீரென ஏற்பட்ட மரணம்… கதறி அழுது காணொளி வெளியிட்ட செம்பருத்தி சீரியல் நடிகை!

திடீரென ஏற்பட்ட மரணம்… கதறி அழுது காணொளி வெளியிட்ட செம்பருத்தி சீரியல் நடிகை!

‘செம்பருத்தி’ சீரியல் ஒளிப்பதிவாளர் அன்புவின் மரண செய்தி அறிந்து அத்தொடரில் நடித்த பரதா நாயுடு கண்ணீருடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘செம்பருத்தி’. கார்த்திக் ராஜ், ஷபானா, ப்ரியா ராமன், ஜனனி பரதா நாயுடு உள்ளிட்டோர் இத்தொடரில் நடித்து வருகின்றனர்.

நேற்று இத்தொடரின் ஒளிப்பதிவாளர் அன்பு மரணமடைந்ததை அடுத்து சீரியலில் நடித்தவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

ஒளிப்பதிவாளர் அன்புவின் மரண செய்தி அறிந்து வீடியோ வெளியிட்டிருக்கும் செம்பருத்தி சீரியல் நடிகை பரதா நாயுடு, “செம்பருத்தி தொடரின் கேமரா மேன் அன்பு காலமாகிவிட்டார் என்ற செய்தி எனக்கு இப்போது தான் கிடைத்தது.

எனது ஒன்றரை வருட செம்பருத்தி தொடர் பயணத்தில் நிறைய அரசியலைச் சந்தித்தேன். பெரிய போர்க்களமே. அப்போது தனியாக இருந்த எனக்கு ஒளிப்பதிவாளரும், இயக்குநரும் தான் உத்வேகம் அளித்தார்கள்.

எப்போதுமே எனக்கு உறுதுணையாக இருந்தார். சில நாட்களுக்கு முன்னர் தான் அவரிடம் பேசினேன். அவரைப் பற்றி திடீரென இப்படி ஒரு நியூஸ் நான் எதிர்பார்க்கவே இல்லை. சுற்றியிருப்பவர்கள் என்ன பேசினாலும் சாதிப்பதை மட்டுமே யோசி என்று எப்போதும் சொல்வார்.

உன்னை தடுக்க நினைக்கிறார்கள் என்றால் நீ ஏதோ ஒன்றை சாதித்துக் கொண்டிருக்கிறாய் என்று கூறுவார். உங்களை நான் மிஸ் செய்கிறேன்” இவ்வாறு பரதா நாயுடு தனது வீடியோவில் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!