கரு, கருமுட்டை எப்படி உருவாகிறது? தெரிந்து கொள்ள வேண்டடிய முக்கியமான விஷயங்கள் - Tamil Tips - Pregnancy Tips in tamil

கரு, கருமுட்டை எப்படி உருவாகிறது? தெரிந்து கொள்ள வேண்டடிய முக்கியமான விஷயங்கள்

கருத்தரிப்பது என்பது சுலபமான காரியமல்ல. விந்துவும், அண்டமும் இணையும் அந்நிகழ்வு அனைவருக்கும் எளிதாக நடந்து விடுவதில்லை. விந்தின் ஆரோக்கியம், கருவின் ஆரோக்கியம், விந்தின் நீந்தும் திறன் என அனைத்தும் சரியாக நடைபெற வேண்டும். அதிலும் முக்கியமாக கருமுட்டை நல்ல நிலையில் இருக்கும் நாளில், கருவுறுதல் கச்சிதமாக நடைபெற வேண்டும்; பெண்ணின் கருப்பையில் கரு எப்படி உருவாகிறது, இயல்பாக எவ்வாறு கருத்தரிக்கும் செயல்பாடு நடக்கிறது என இந்த பதிப்பில் காணலாம்…! 

கருவுருவாதல்!

மாதவிடாய் சுழற்சியின் முதலாம் நாளில் (இரத்தப்போக்கு ஏற்படும் நாள்), சில ஹார்மோன்கள், உண்டான புதிய கரு முட்டைகளில் வளர்ச்சி உண்டாக்குவதற்காக இரத்தப்போக்கினை ஏற்படுத்தும்; இதன் மூலமே கருப்பையின்  அண்டகத்தில் புதிய கரு உருவாகும்.

கருப்பை தயார் நிலை!

கரு முட்டை வளர்ச்சியடைய ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் வெளிப்படும்; இயற்கையாக கருத்தரிக்க விந்துவும் கருவும் இணைய வேண்டும். ஈஸ்ட்ரோஜன் அளவு மிகவும் அதிகரித்தால் தான் கருப்பையின் புறணி தூண்டப்படும்; இது கருவில் பஞ்சு மெத்தை போன்று ஒன்று உருவாகி வளர உதவும்.

கருமுட்டை!

சில நாட்களில் கரு முட்டை வளர்ந்து வலிமை அடைய தொடங்கும்; பிறகு முட்டை வெளித்தள்ளப்படும்.

அண்டம் விடுப்பு!

நுண்குழிழ் விரிசலுக்கு பிறகு கருப்பை விட்டு வெளிவந்த கரு, கருமுட்டை குழாய் வழியாக வெளிவரும். இதனை அண்டம் விடுபடுதல் என்று கூறுவர்.

கருத்தரித்தல்!

விந்து, முட்டையுடன் இணைய 12-24 மணிநேரம் எடுத்து கொள்ளும்; இதன் பின்னர் கருத்தரித்தல் உண்டாகிறது.

Related posts

வெள்ளை படுதல் குணமாக வீட்டு வைத்தியம் மற்றும் ஹோம்மேட் வெஜினல் வாஷ்…

இரட்டைக் குழந்தைகள் பிறக்க என்ன செய்ய வேண்டும்? என்ன சாப்பிட?

சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தையை சாப்பிட வைப்பது எப்படி?