தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பல நடிகர் நடிகைகள் தங்களது நிஜ வாழ்விலும் காதலித்து திருமணம் செய்து கொண்டு இருக்கின்றனர். அது போல பல்வேறு நடிகர்கள் மற்றும் நடிகைகளின் காதல் விறுவிறுப்பாக சென்றாலும் கூட திருமணம் வரை சென்றதில்லை. அந்த வகையில், ஒரு காதலாக கசிந்தது தான் விஜயகாந்த் ராதிகா காதல்.
அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ள முயற்சித்தும் கூட அவர்களது திருமணம் நடைபெறவில்லை. இப்படி நின்று போன திருமணம் குறித்து பல காரணங்கள் கூறப்படுகின்றன. இதைப்பற்றி, அண்மையில் நடிகரும், பிரபல பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன் ஒரு நிகழ்ச்சியில் பேசியயுள்ளனர்.
அதில் இருவரும் காதலித்து அந்த காதல் திருமணம் வரை சென்றது உண்மை தான். இவர்களுடைய திருமணத்திற்காக ராதிகா ஆசையாக திருமணப் புடவை எல்லாம் எடுத்து வைத்து இருந்தார்.
இருப்பினும், விஜயகாந்த்துடைய சில நண்பர்கள் அவருடைய ஜாதகப்படி நடிகை ராதிகா அவருக்கு சிறந்த மனைவியாக இருக்க மாட்டார். என்று கூறியதால் விஜயகாந்த் தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.