முன்பெல்லாம் குழந்தைகள் வெளியில் போய் அடிக்கடி விளையாடி வந்தனர். ஆனால் இப்போது சதா சர்வநேரமும் செல்போனே கதி எனக் கிடக்கிறார்கள். இதனால் குழந்தைகளின் விளையாட்டுத் திறன் குறைந்து சோம்பேறிகளாகி விடுகின்றனர்.
செல்போன் பொழுது போக்கு என்பதையும் தாண்டி இந்த கொ ரோனா நேரத்தில் அவசியமானதாகவும் மாறிப் போனது. குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்பு அதில் நடந்து வருகிறது. ஆனாலும் கல்வியையும் தாண்டி சதா சர்வநேரமும் செல்போனிலேயே குழந்தைகள் பலரும் மூழ்கிக் கிடக்கின்றனர்.
இதனாலேயே குழந்தைகள் சீக்கிரமே கண்ணாடி போட வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது. ஏற்கனவே வயது வித்யாசம் இல்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போனுக்கு அ டிமையாகி இருக்கும் நிலையில் இப்போது ஒரு பூனையும் அதில் சேர்ந்து இருக்கிறது.
ஆம், ஒரு வீட்டில் செல்லமாக ஒரு பூனையை வளர்த்து வருகின்றனர். அந்தப் பூனைக்கும் மனிதர்களைப் போல அவ்வப்போது செல்போனை போட்டுக் கொடுத்து பழக்கியிருக்கின்றனர். இந்நிலையில் அந்த பூனையோ யாராவது செல்போனில் வீடியோக்கள் போட்டுக் கொடுத்தால் வைத்த கண் எடுக்காமல் பார்க்கிறது.
யாராவது செல்போனை அதனிடம் இருந்து எடுத்தால் செம காண்டாகி விடுகிறது அந்த பூனை. இதோ அந்த பூனை செல்போன் பார்ப்பதையும், காண்டில் செய்வதையும் வீடியோவில் நீங்களே பாருங்கள்