கேள்வி : துணையுடன் உறவில் ஈடுபடும் போது, வேறு நபர் குறித்த எண்ணங்கள் வருவது தவறா?
பதில்: அந்த நபர் துணையை போன்ற குணாதியங்கள் அல்லது பாத்திர ஒற்றுமை கொண்டிருக்கிறார்களா? என பார்க்க வேண்டும். வேறு நபரை எண்ணாமல் உறவில் உச்ச இன்பத்தை எட்ட முடியவில்லை என்றால் கவுன்சிலிங் அவசியம்.
கேள்வி : பெண்கள் எப்போதெல்லாம் உச்சக்கட்ட இன்பம் அடைவதில் போலியாக நடிப்பார்கள்?
பதில்: தாங்கள் உச்சநிலை அடையவில்லை என்பது துணைக்கு வருத்தம் அளிக்குமோ, அல்லது குறைபாடாகோ காண்பாரோ என்ற எண்ணத்தால் கூட போலியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது
கேள்வி : கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்வது அல்லது வேறு கருத்தடை விஷயங்கள் செக்ஸ் தாக்கத்தை குறைக்குமா?
பதில் : கருத்தடை மருந்துகள் தாக்கத்தை ஏற்படுத்ததான் செய்கின்றன. ஐ.யு.டி எனப்படும் காப்பர் காயில்கள் மாதவிடாய் நாட்களை நீட்டிக்கிறது அல்லது உடலுறவில் ஆர்வத்தை குறைக்கிறது. கருத்தடை மாத்திரைகள் ஹார்மோனில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பெண்ணுறுப்பில் வைத்து பயன்படுத்தும் போது மாதவிடாய் சுழற்சியின் மத்திய காலத்தில் ஏற்படும் கலவி உணர்வுகளை குறைக்கிறது.
கேள்வி : சராசரியான ஆண்குறி அளவு என்ன? ஆண்குறி அளவினால் தாக்கத்தில் மாற்றம் ஏற்படுமா?
பதில்: விறைப்பு நிலையில் ஐந்தில் இருந்து ஏழு அங்குலம் வரை. இயல்பான நிலையில் 3 முதல் 3.5 அங்குலம் வரை சராசரி அளவு பெண்ணுறுப்பில் சென்சிடிவான பகுதியான பெண்குறியின் நுழைவாயில் இரண்டு அங்குலம் வரை தான் இருக்கிறது. எனவே அதிகப்படியான அளவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை.
45% பெண்கள் துணையின் ஆண்குறி அளவு குறித்து பெரிதாக கவனம் செலுத்துவதில்லை. பர்சனாலிட்டி மற்றும் அழகியல் பழக்கங்கள் குறித்து தன் அதிக கவனம் செலுத்துகிறார்கள். விறைப்பின் போதிலும் மூன்று அங்குலத்திற்கு குறைவான அளவில் ஆண்குறி இருந்தால் பரிசோதனை அவசியம்.
கேள்வி : சாதாரணமாக எவ்வளவு நேரம் உடலுறவு நீடிக்க வேண்டும்?
பதில்: பொதுவாக 7 முதல் 13 நிமிடங்கள் போதுமான இன்பம் அடைவதற்கு ஏற்ற நேரமாக காணப்படுகிறது.
கேள்வி : செக்ஸில் ஈடுபட விருப்பம் இல்லை என்பது, உறவு மோசமாகி வருவதன் அறிகுறியா?
பதில்: பொதுவாகவேஇச்சை எண்ணங்கள் தோன்றுவதில்லை என்றால் உறவில் பாதிப்புக்கு வாய்ப்புகள் இல்லை. சோர்வு, மன அழுத்தம் உள்ளிட்டவையும் காரணமாக இருக்கலாம் இதற்கு உடலுறவுதான் தீர்வு. அதனால் இயற்கையாக மன அழுத்தம் குறைகிறது. நல்ல உறக்கம் அளிப்பது மட்டுமின்றி உடலில் கலோரிகள் குறையவும் உதவுகிறது.
துணையை செக்ஸியாக உணரவில்லை என்றால், இச்சை ஏற்படவில்லை என்றால் இருவரும் சேர்ந்து தான் தீர்வு காண வேண்டும்.
கேள்வி : துணையிடம் கலவியில் எது பிடிக்கும் என எப்படி கூறுவது?
பதில்: விருப்பத்தை வெளிப்படையாகக் கூறினால் கணவர் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடும் என நினைப்பதற்கு மாறாக பெரும்பாலான ஆண்கள் விருப்பத்தை கூறினால் பாசிட்டிவாகத் தான் எடுத்துக் கொள்கிறார்கள்.
நேரடியாக கூற தயக்கம் இருந்தால், கனவு, தோழி, திரைப்படக் காட்சிகள் உள்ளிட்டவை மூலம் விருப்பத்தை வெளிப்படுத்தலாம்
கேள்வி : கர்ப்பமாக இருக்கும் போது செக்ஸில் ஈடுபடலாமா?
பதில்: கருத்தரித்த பிறகும் கூட குறிப்பிட்ட காலம் வரை உடலுறவில் ஈடுபடலாம். அது பெண்ணையும், சிசுவின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியையும் பொறுத்திருக்கிறது
கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவில் ஈடுபட்டால், பெண்கள் அதிகம் உச்சக்கட்ட இன்பம் அடைகிறார்கள். இந்த காலத்தில் அவர்கள் இடுப்பு பகுதியில் அதிகமாக செல்லும் இரத்த ஓட்டமும் காரணம் என கூறப்படுகிறது
கேள்வி : வேக்ஸிங் செய்வது செக்ஸில் தாக்கம் ஏற்படுத்துமா?
பிறப்புறுப்பில் முடிகளை நீக்கிய பிறகு செக்ஸில் ஈடுபடும் போது, படுக்கை அறையில் தன்னம்பிக்கை அதிகமாக காணப்படுவதாக 2500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற சர்வே தெரிவிக்கிறது
கேள்வி : பெண்கள் செக்ஸில் அதிக ஆர்வம் கொள்ளும் வயது எது?
பதில்: பெண்களிடம் 27வது வயதில் இருந்து செக்ஸ் மீதான் நாட்டம் அதிகரிக்கிறது. மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும் 45 – 52 வயதில் செக்ஸ்ஆர்வம் அதிகரிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
கேள்வி : குழந்தை பெற்ற பிறகு, எப்போது மீண்டும் செக்ஸில் ஈடுபடலாம்?
பதில்: ஒருவேளை உங்கள் பிரசவம் சுகப்பிரசவம் மற்றும் அதில் எந்த பிரச்சனையும் இல்லை எனில் நீங்கள் ஆறில் இருந்து எட்டு வாரங்கள் கழித்து சாதாரணமாக உடலுறவில் ஈடுபடலாம். ஒருவேளை பிரசவத்தின் போது பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தால், மருத்துவர்கள் கூறும் காலம் வரை உடலுறவை தவிர்க்க வேண்டியது கட்டாயம்.
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.