Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பட்டுப் போன்ற பாதத்தை பாழடிக்கிறதா வெடிப்புகள்? மூன்றே நாளில் எளிய தீர்வு!

குறிப்பாக, பாதங்கள் வெளியில் அதிகம் தெரிவதால் ஈரப்பசை விரைவில் நீங்கி வெடிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் உடல் எடை அளவுக்கு அதிகமாக இருந்தாலும், குதிகால் வெடிப்பு வரும். இயற்கையான முறையில் குதிகால் வெடிப்பை எப்படி நீக்குவது? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி பாதங்களில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் பின்பற்றி வந்தால், உங்களின் பாதங்களில் உள்ள குதிகால் வெடிப்பு நீங்கி மென்மையாக இருக்கும்.

வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, பாதங்களில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை செய்து வந்தால், பாத பிரச்சனைகள் விரைவில் அகலும். இரவில் படுக்கும் முன், ஆலிவ் ஆயிலை குதிகால்களில் தடவி மசாஜ் செய்து, சாக்ஸ் அணிந்து கொள்ள வேண்டும். இப்படி தினமும் செய்து வர மூன்றே நாட்களில் மாற்றத்தை காணலாம்.

தினமும் இரவில் படுக்கும் முன் பாதங்களில் பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவி வந்தால், பாதங்களில் உள்ள வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பும் மறைய ஆரம்பிக்கும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவுங்கள். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும்.

வெள்ளை வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அந்நீரில் கால்களை 20-25 நிமிடங்கள் ஊற வைத்து, மெருக்கேற்ற உதவும் கல்லைக் கொண்டு நன்கு தேய்த்து கழுவினால், இறந்த செல்கள் நீங்கி, வெடிப்புகள் மறைந்து குதிகால் மென்மையாக பட்டுப் போன்று இருக்கும்.

Thirukkural

தயிரை வெள்ளை வினிகருடன் சேர்த்து கலந்து, அதனை குதிகாலில் தடவி நன்கு ஊற வைத்து, பின் தேய்த்து கழுவினால் வெடிப்பு மறைய ஆரம்பிக்கும். வினிகரில் தேன் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு குதிகாலை மசாஜ் செய்து நன்கு உலர வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை நன்கு தேய்த்து கழுவ வேண்டும்.

அரிசி மாவில், தேன், ஆலிவ் ஆயில் மற்றும் வினிகர் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை வறட்சியடைந்த பாதங்களில் தடவி உலர வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தவறாமல் செய்து வந்தால் பாதங்கள் மென்மையாக வெடிப்பின்றி இருக்கும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஓபன் செய்து பலான வீடியோ பார்க்கும் குரங்கு! வைரல் புகைப்படம்!

tamiltips

கோடையின் கிர்ணிப்பழம் உடல் சூட்டால் ஏற்படும் அத்தனை நோயையும் சரிசெய்யும்!

tamiltips

வடக்கில் தலைவைத்து படுத்தால் மூளை பாதிக்கப்படும் என்பது உண்மைதானா? பிரபஞ்ச ஆற்றல் தத்துவம்!

tamiltips

பால் காய்ச்சுவதிலும் சில வழிமுறைகளை பின்பற்றினால் பாலின் சத்துக்கள் அழியாமல் உட்கொள்ளலாம்!

tamiltips

கர்ப்பிணிகளுடன் உடல் உறவு கொள்வது ஆபத்தா? உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்!

tamiltips

வெயிலிலிருந்து உங்கள் முடியை காத்துக்கொள்ள ஆயுர்வேத அறிவியல் டிப்ஸ்!

tamiltips