Tamil Tips
லைஃப் ஸ்டைல்

இந்த 15 அறிகுறிகள் இருந்தால் கவனமாக இருக்கவும்! புற்றுநோயாக இருக்கலாம்!

உலகம் முழுவதும் பரவலாகஉள்ள நோய் புற்றுநோய். மனித உயிரை கொத்துக்கொத்தாக குடிக்கும் கொடூரமாக இந்தபுற்றுநோயானது புகையிலை மது போன்ற பழக்கங்களால் மட்டுமல்லாமல் பரம்பரை ரீதியாகவும்மனிதனை தாக்கும்.

புற்றுநோயில் பல வகைஉண்டு. கட்டிகளாக தோன்றுவது, மார்பகப் புற்றுநோய் இரத்த புற்றுநோய் நுரையீரல்புற்றுநோய் சிறுநீரக புற்றுநோய், குடல் புற்றுநோய், எலும்பு புற்றுநோய் என பலவகைஉண்டு.

மார்பகத்தில் திடீர்மாற்றம்: மார்பக புற்றுநோய்என்பது பெரும்பாலும் பெண்களையே தாக்கவல்லது. மார்பகத்தில் ஏற்படும் திடீர் மாற்றம்காம்புகளில் உண்டாகும் மாற்றம் ஆகியவை இதன் அறிகுறிகளாக பார்க்கப்படுகின்றன.இருப்பினும் இவை மற்ற காரணங்களுக்காகவும் ஏற்படும் என்பதால் மருத்துவரை அணுகுவதுநல்லது.

சிறுநீரில் ரத்தம்கலந்து செல்வது: சிறுநீர் அல்லது மலம்கழிக்கும் போது ரத்தம் கலந்து சென்றால் அது காளான் புற்று நோயின் அறிகுறியாகும்.சிறுநீரில் ரத்தம் கலந்து செல்வது சிறுநீரகப் புற்றுநோய்க்கு அறிகுறியாகபார்க்கப்படுகிறது.

திடீரென உடல் எடைகுறைதல்: இதேபோல் திடீர் உடல்எடை குறையும் புற்றுநோயின் அறிகுறிகளுள் ஒன்று

Thirukkural

விளக்க முடியாத வலி: உடலில் ஏதேனும் ஒருஇடத்தில் வலியை உணர்வது. நான் அது எந்த இடத்தில் என்று குறிப்பிட்டு சுட்டிக்காட்ட முடியாத வகையில் இருக்கும். இந்த வலியானது ஒரு மாதத்திற்கு மேல் நீடித்தால்மருத்துவரை அணுகுவது நல்லது.

சோர்வு மற்றும்களைப்பு: சிலருக்கு எவ்வளவுநேரம் தூங்கினாலும் தூங்கியது போலவே இருக்காது. அவ்வாறு இருந்தால் அதுவும்புற்றுநோயின் அறிகுறிதான். அதேபோல் சோர்வு மற்றும் களைப்பை நாள் முழுவதும் உணர்வதுபுற்று நோய்க்கு அறிகுறி.

வெள்ளைபடுதல்: வெள்ளைப்படுதல் என்பதுபெண்களுக்கு ஏற்படும் பொதுவான ஒன்று. ஆனால் அடிக்கடி இவ்வாறு தோன்றினால்மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.

வயிறு வீங்குதல்: சம்பந்தமே இல்லாமல்வயிறு வீக்கத்துடன் காணப்பட்டால் அதுவும் புற்றுநோயின் அறிகுறிகள் ஒன்றாகபார்க்கப்படுகிறது.

விதைப்பையில் கட்டி: ஆண்களுக்குவிதைப்பையில் கட்டியோ அல்லது நரம்பு புடைத்துக் கொண்டு தெரிந்தால் அது புரோஸ்டேட்புற்றுநோயாக இருக்கலாம்.

சிறுநீர் கழிப்பதில்சிக்கல்: சிறுநீர் கழிக்கும்போதுஒருவித எரிச்சலை அனைவரும் உணரக்கூடும். ஆனால் இதை அன்றாடம் உணர்வோர் மருத்துவரைஅணுகுவது நல்லது.

விழுங்குவதில் சிக்கல்: உணவு அல்லது தண்ணீரைவிழுங்க முடியாமல் தவிப்பது போல் உணர்ந்தால் அது வாய் புற்றுநோயின் அறிகுறியாகஇருக்கலாம். வாய்ப் புற்று நோயானது அதிகமாக மனிதர்களை தாக்க கூடிய ஒன்றாகஇருக்கிறது..

தொடர் இருமல்: இருமல் மனிதருக்குஏற்படுவது சகஜம். ஆனால் அதுவே தொடரும் பட்சத்தில் மருத்துவரை அணுகி உடலை பரிசோதனைசெய்து கொள்ளலாம். தொடர் இருமலும் புற்றுநோய்க்கு வரவேற்புரை எழுதுவதாகஇருக்கக்கூடும்..

நெஞ்செரிச்சல்: காரம் எண்ணெய் நிறைந்தஉணவு வகைகளை சாப்பிடும்போது நெஞ்செரிச்சல் ஏற்படுவது வழக்கம். இது எப்போதாவதுஏற்பட்டால் பிரச்சினை இல்லை. ஆனால் எப்போதுமே ஏற்பட்டால் அது மிகப்பெரிய பிரச்சனைதான். இதுவும் நம்மை புற்றுநோய் தாக்கி விட்டதற்கான ஒரு அறிகுறி.

தொடர் காய்ச்சல்: தொடர்ந்து காய்ச்சல்ஏற்பட்டுக்கொண்டே இருப்பதும் புற்றுநோய்க்கான அறிகுறி என மருத்துவர்கள்தெரிவித்துள்ளனர்.‌

நிணநீர் முனைகளில்மாற்றம்: உடலில் தொற்றுக்களைஎதிர்ப்பது நிணநீர் முறைகளாகும். இவற்றில் மாற்றங்களை இருந்தாலும் அது புற்றுநோயின் அறிகுறியே. 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சிசேரியனில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தை எப்படி பாதுகாக்க வேண்டும்?

tamiltips

கேரளத்துப் பெண்களின் அழகுக்குக் காரணம் தேங்காய் என்பது தெரியுமா!!

tamiltips

பட்டுப் போன்ற பாதத்தை பாழடிக்கிறதா வெடிப்புகள்? மூன்றே நாளில் எளிய தீர்வு!

tamiltips

வெயிலோட உஷ்ணத்தை தாங்க வெறும் தண்ணி பத்தாது! கொஞ்சம் புதினா சேத்துக்கோங்க!

tamiltips

வடக்கில் தலைவைத்து படுத்தால் மூளை பாதிக்கப்படும் என்பது உண்மைதானா? பிரபஞ்ச ஆற்றல் தத்துவம்!

tamiltips

இருட்டுக்குள் தாய்ப் பாலூட்டும் தாய்மார்களே ஜாக்கிரதை – ஜொள்ளுவிடும் குழந்தைகள் ஏன் – பிறந்த குழந்தைக்கு சர்க்கரை தண்ணீர் கொடுப்பது ஆபத்தா

tamiltips