Tamil Tips
லைஃப் ஸ்டைல்

2020ல் உங்கள் வாழ்வில் அற்புதம், அதிசயம், ஆனந்தம் நிகழ வேண்டுமா? இதோ 5 டிப்ஸ்..!

எல்லோரும் ஒரு அற்புதமான மனிதனாக மாற முயற்சி செய்யலாம். அதையாரும் மறுக்கமுடியாது. இதற்கு நீங்கள் செய்யக்கூடிய எளிய செயல்முறை உள்ளது. ஒரு மனிதனை ஒரு அற்புதமான மனிதனாக ஆக்குவதாக நீங்கள் நினைக்கும் மூன்று விஷயங்களை எழுதி, அவற்றை உங்கள் வாழ்க்கையில் ஒரு யதார்த்தமாக்குங்கள்.

வேறொருவர் விரும்புவதை நீங்கள் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள், உயர்ந்தது என்று நீங்கள் நினைப்பதைச் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பியதைச் செய்யாவிட்டால், இது வீணானவாழ்க்கையாக மாறும். நீங்கள் நினைக்கும் அந்த மூன்று விஷயங்கள் ஒரு மனிதனை உண்மையிலேயே அற்புதமான மனிதனாக மாற்றும், அவற்றை ஒரு யதார்த்தமாக்கும்

2. அறிமுகமில்லாத மூன்று நபர்களைப் பார்த்து புன்னகை செய்யுங்கள்

உங்களைச் சுற்றி வெளிச்சத்தைக் கொண்டுவர, தெருவில் குறைந்தது மூன்று அறிமுகமில்லாதவர்களைப் பார்த்து புன்னகை செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அவர்களுக்கு ஒரு பெரிய புன்னகையை மட்டும் கொடுங்கள். தயவுசெய்து, இதைச்செய்து உங்களைச் சுற்றியுள்ள உலகிற்கு சிறிது வெளிச்சத்தைக் கொண்டு வாருங்கள்.

3.நீங்கள் இறக்கும் போது மக்கள் உங்கள் இழப்பை உணரும்படி வாழுங்கள்

Thirukkural

உங்களது எல்லைகளையும், தவறான அபிப்ராயங்களையும், உங்களைச் சுற்றியுள்ளவர்களை காயப்படுத்தும் முட்டாள்தனங்களையும் ஒட்டு மொத்தமாக, உடனடியாக உங்களால் விடமுடியாமல் இருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் அவற்றுள் ஒன்றை விடுவதன் மூலம் அதை நீங்கள் தொடங்க முடியும். தயவு செய்து சிறிதளவு மாற்றம் நிகழச்செய்யுங்கள். அதனால், நீங்கள் வாழும்காலத்தில் உங்களுடன் வாழ்ந்திருப்பதை மக்கள் விரும்புவதுடன், நீங்கள் இறந்த பிறகு உங்கள் இழப்பை உணர்வார்கள். இப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் நீங்கள் வாழவேண்டும். நீங்கள் வாழ்ந்திருக்கும் போது, மக்கள் உங்கள் இருப்பினால் சந்தோஷப்பட வேண்டும். நீங்கள் இறக்கும் பொழுது, அதற்காக வருந்தவேண்டும்.

4.தினசரி இரவு, உங்கள் மரணப்படுக்கையில் அமர்ந்திருங்கள்

நம் அனைவருக்கும் ஒரே வேகத்தில் நேரம் நழுவி செல்கிறது. “நான் திரைப்படத்திற்குச் சென்றேன்”, “நான் கடைக்குச் சென்றேன்”, “நான் விடுமுறைக்குச் சென்றேன்” என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உங்கள் உடலைப் பொருத்தவரை அது நேராக மயானத்திற்குச் செல்கிறது. ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு சுவாசத்திலும், உங்கள் உடல் மயானபூமிக்கு நெருக்கமாகிவருகிறது..

இது சித்தப்பிரமை அடைவது பற்றியது அல்ல. நீங்கள் இறக்கக்கூடியவர் என்பதை நீங்கள் அறிந்திருந்தால், இந்த வாழ்க்கையிலிருந்து சிறந்ததை நீங்கள் செய்யவிரும்புவீர்கள். நீங்கள் இறக்கக்கூடியவர் என்பதை நீங்கள் மறந்துவிட்டால், எதையும் குறிக்காத அபத்தமான செயல்களைச் செய்யத் தொடங்குவீர்கள்

ஒவ்வொரு இரவும், இந்த எளிய பயிற்சியை செய்யுங்கள். நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன், உங்கள் படுக்கையில் உட்கார்ந்து இது உங்கள் மரணப்படுக்கை என்று நினைத்துப் பாருங்கள் .நீங்கள் வாழ இன்னும் ஒரு நிமிடம் இருக்கிறது. இன்று நீங்கள் செய்திருப்பது பயனுள்ளது என்பதை திரும்பிப்பாருங்கள். “இன்று, இந்த இருபத்திநான்கு மணிநேரங்களையும் நான் கையாண்டவிதம், இப்போது நான் இறந்து கொண்டிருப்பதால் பயனுள்ளதா” நீங்கள் இதைச் செய்தால், நீங்கள் ஒரு பயனுள்ள வாழ்க்கையை வாழ்வீர்கள்.

5.தளர்வாக இருங்கள், படுசீரியஸாக இருக்காதீர்கள்

பெர்ட்ராண்ட்ரஸ்ஸல் ஒரு முறைசொன்னார், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியமானது என்று நீங்கள் நினைக்கத்தொடங்கினால், நீங்கள் விடுமுறை எடுக்கவேண்டும். உங்களது சீரியஸ் தன்மையிலிருந்து நீங்கள் விடுமுறை எடுக்கவேண்டும். உங்கள் சுய முக்கியத்துவத்தின் காரணத்தினால்தான் சீரியஸ் தன்மை எழுகிறது.

ஆனால் இதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள், இந்தப் பரந்த இருப்பில், நீங்கள் ஒரு தூசு போன்றவர். இந்தப் பரந்தபிரபஞ்சத்தில், இந்த சூரியமண்டலம் ஒரு சிறு புள்ளி போன்றது. நாளைக்கே இந்த சூரியமண்டலம் மறைந்து விட்டால், பிரபஞ்சத்தில் அது கவனத்திற்கேவராது. சூரியமண்டலத்தின் இந்த சிறு புள்ளியில், பூமிக்கிரகம் அதை விட பலமடங்கு சிறிய புள்ளி. பூமிக்கிரகத்தின்,

நீங்கள் வாழும் நகரம் என்பது அதைக்காட்டிலும் சிறியபுள்ளி. அதில் தான் நீங்கள் எவ்வளவு பெரியமனிதராக இருக்கிறீர்கள்! சற்று சிந்தித்துப் பாருங்கள், இது கண்ணோட்டத்தில் இருக்கும் மிகப் பெரும்பிரச்சனை.             

உங்கள் வாழ்வை சிறிது தளர்த்திக் கொள்ளுங்கள். சற்றே அதிகம் சிரியுங்கள். உங்களைச் சுற்றியுள்ள மக்களுடன் ஈடுபாடு கொள்ளுங்கள். அவ்வளவு முக்கியமில்லை என்று நீங்கள் நினைக்கும் விஷயங்களைச் செய்யுங்கள். உங்களுக்கு மிகவும் முக்கியமாக இருக்கும் விஷயங்களை மட்டும் செய்யாதீர்கள். எளிமையான விஷயங்களைச் செய்யுங்கள். எளிமையான விஷயங்களை நீங்கள் செய்வது மிகவும் முக்கியமானது

முழு உலகமும் இயற்கையாகவே ஆன்மீகமாக இல்லாததற்கு ஒரு காரணம் என்னவென்றால், அவர்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றி அதிக முக்கியத்துவம் கொண்டுள்ளனர். அவர்கள் இன்னும் கொஞ்சம் தளர்வாக இருக்க முடிந்தால், அவர்கள் வாழ்க்கையை இன்னும் கொஞ்சம் மகிழ்ச்சியுடன் பார்க்க முடிந்தால், அவர்களுக்குள் இருக்கும் நகைச்சுவையை அவர்கள் காண முடிந்தால்,

அவர்கள் தங்களையும், அவர்களைச் சுற்றியுள்ள சூழ்நிலையையும் இன்னும் கொஞ்சம் தெளிவாகக் காண முடியும். உங்களைப் பற்றியும் உங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றியும் இன்னும் கொஞ்சம் தெளிவு இருந்தால், அது இயற்கையாகவே உலகில் நீங்கள் செய்ய விரும்பும் எந்தவொரு விஷயத்திலும் உங்களை அதிகதிறன் கொண்டதாக மாற்றும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தைக்கு கண்ணில் குறைபாடு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது ??

tamiltips

காலையில் எழுந்ததும் எலுமிச்சை சாற்றில் வெந்நீர் கலந்து குடிங்க! இதனை நன்மைகளும் உடலுக்கு வந்து சேரும்!

tamiltips

கைவசம் இது இருந்தால் போதும், விஷத்தை கூட முறியடித்துவிடலாம்

tamiltips

பல நாட்டவர்களும் வியக்கும் நம் பாரம்பரிய உணவான இட்லியின் சிறப்பு அம்சங்கள் தெரியுமா?

tamiltips

பருமனா இருப்பவர்கள் முட்டை சாப்பிடலாமா! சத்துக்கள் எதில் அதிகம் வெள்ளை கருவிலா மஞ்சள் கருவிலா!

tamiltips

குண்டாக இருப்பவர்கள் சமையில் சேர்க்க கூடாது எண்ணெய் எது தெரியுமா?

tamiltips