Tamil Tips
கர்ப்பம் குழந்தை பிரசவத்திற்கு பின் பெண்கள் நலன்

தாய்ப்பால் சுரப்பு குறைந்திருப்பதை எப்படி கண்டுபிடிப்பது? தீர்வு என்ன?

எனக்கு தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கிறது. என் குழந்தை பசிக்காக அழுகிறது. இளம் தாய்மார்கள் இதனால் அடையும் மன அழுத்தம் சொல்லி தீர்க்க முடியாதது. இதற்கான தீர்வுகள் இருக்கிறதா? நிச்சயம் இருக்கிறது. யாருக்கெல்லாம் இந்த பிரச்னை வரும்? என்ன செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.

60% பெண்கள் தாய்ப்பால் எனக்கு சரியாக சுரக்கவில்லை எனக் கருதி, தாய்ப்பால் கொடுப்பதை சீக்கிரமாகவே நிறுத்திவிடுகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.

குறைவாக தாய்ப்பால் சுரக்க என்ன காரணம்?

பிரசவத்தின் போது 500 மி.லி மேலாக ரத்தபோக்கு இருந்திருக்கும். இன்னொன்று, ப்ளாசன்டா காரணமாகவும் குறைவான பால் சுரப்பு இருக்கும். பிரசவத்துக்கு பிறகான 3 நாளைக்கு இப்படி இருக்கலாம்.

பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம், சர்க்கரை நோய், தைராய்டு, மற்ற ஹார்மோன் குறைபாடுகள் இருந்தாலும் தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும்.

அரிதான பிரச்னை இது. மாம்மரி ஹைபோபிளாசியா எனும் தாய்ப்பால் சுரக்கும் திசுவால் சரியாக தாய்ப்பால் சுரக்காமல் போவது.

Thirukkural

மார்பகத்தில் அறுவை சிகிச்சை ஏதேனும் நடந்து இருந்திருக்கலாம்.

இது போன்ற பிரச்னைகள் இருப்போர், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி தாய்ப்பால் சுரக்க மருந்துகளை உட்கொள்ளலாம்.

மற்ற காரணங்கள்

கருத்தடை மாத்திரைகள் முன்பு சாப்பிட்டு இருந்தாலும், ஹார்மோன் அளவு மாற்றமடைந்து தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும்.

நிப்பிளில் வலி காரணமாக, குறைவாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதாலும் தாய்ப்பால் சுரப்பு குறையும்.

அடிக்கடி தாய்ப்பால் கொடுக்காமல் இருந்தாலும் தாய்ப்பால் சுரப்பு குறையும்.

மார்பகத்திலிருந்து பால் லீக் ஆவதில்லை என தாங்களாகவே கருதி குறைவான தாய்ப்பால் சுரப்பு என அவர்களாகவே தீர்மானித்துக் கொள்கிறார்கள்.

முன்பை விட மார்பகம் கனமாக இல்லை என்று சில பெண்கள் கருதுகின்றனர். இந்த எண்ணமும் ஒரு காரணம்.

குழந்தைக்கு தாய்ப்பால் அதிகமாக தேவைப்படும் எனத் தாங்களாகவே ஒரு எண்ணத்தைப் போட்டு கொள்கின்றனர்.

ரெகுரலாக தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தை குறைவான நேரமாக மாற்றிக் கொள்வதாலும் தாய்ப்பால் சுரப்பு குறைவாகும்.

இதையும் படிக்க: தாய்ப்பால், குழந்தைகளின் உரிமை… எங்கும் எந்த நேரத்திலும்…

பெரும்பாலும் தவறான கருத்துகளும் குழப்பங்களுமே குறைவான தாய்ப்பால் சுரப்புக்குக் காரணமாகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

தாய், மிகவும் குண்டாக இருந்தால் தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கலாம்.

புகைப்பழக்கம் இருந்தாலும் தாய்ப்பால் சுரப்பதில் பிரச்னை இருக்கும்.

கர்ப்பக்காலத்தில் அதிக ஸ்ட்ரஸ் இருந்திருந்தாலும், தாய்ப்பால் சுரப்பு குறைவாகும்.

இரும்புச்சத்து அளவு தாயுக்கு குறைந்து இருந்தாலும், தாய்ப்பால் சுரப்பு பிரச்னை இருக்கும்.

சில மருந்துகளை நீண்ட காலம் தாய் உட்கொண்டு இருந்தாலும், தாய்ப்பால் சுரப்பில் பிரச்னை இருக்கும்.

இதையும் படிக்க: பிறந்த குழந்தைகளின் இறப்பைத் தடுக்க… தாய் கட்டாயமாக செய்ய வேண்டிய 2 டெக்னிக் 

தாய்மார்களின் உடல்நலமும் தாய்ப்பால் சுரப்பு குறைவதும்…

ரத்தசோகை

மார்பகத்தில் சர்ஜரி

தைராய்டு அளவு சரியாக இல்லாமல் இருப்பது

இன்சுலினை நம்பி உள்ள தாய்மார்கள்

ஹைபொபிட்யூட்டரிசம்

பிட்யூட்டரி சரியாக வேலை செய்யாமல் இருப்பது.

குறைவான தாய்ப்பால் சுரப்புக்கு குழந்தையின் உடல்நலம் காரணமாகுமா?

உணவு அலர்ஜி குழந்தைக்கு இருந்தால் குழந்தையால் தாய்ப்பால் சரியாக குடிக்க முடியாது.

நரம்பு மண்டலம் பிரச்னை காரணமாக குழந்தையால் சரியாக மூச்சு விடுவது, பாலை விழுங்குவது, பாலை உறிஞ்சுவது போன்றவை சரியாக செய்ய முடியாது.

குழந்தை டவுன் சிண்ட்ரோமால் பாதித்து இருந்தால் குழந்தையால் தாய்ப்பால் சரியாக குடிக்க முடியாது.

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையாக இருந்தால், தாய்ப்பால் குடிக்க அந்த குழந்தைக்கு அவ்வளவாக முடியாது.

குழந்தையின் வாயில் ஏதேனும் பிரச்னை இருந்தாலும் தாய்ப்பால் குடிக்க முடியாது.

இதெல்லாம் குழந்தை நல மருத்துவரிடம் காண்பித்து சரி செய்து கொள்ளுங்கள்.

உண்மையிலே தாய்ப்பால் சுரப்பு குறைந்திருக்கிறது என எப்படி கண்டுபிடிப்பது?

low milk supply

Image Source : American Health and Beauty

இதையும் படிக்க: ஒரு நாளைக்கு எத்தனை முறை, எவ்வளவு நேரம் தாய்ப்பால் கொடுக்கலாம்?

5-6 முறை குழந்தை மலம் கழிக்க வேண்டும். இதுதான் தாய்ப்பால் போதிய அளவு கிடைத்த குழந்தையின் அடையாளம்.

3-4 முறை மட்டுமே குழந்தை மலம் கழித்தால் குழந்தைக்கு தாய்ப்பால் போதவில்லை.

குறைவான, மிக மிக நீர்த்த மலம் இருப்பது.

8-10 முறை சிறுநீர் கழிக்கவில்லை எனும்போது.

0-6 மாத குழந்தைக்கு வரும் சிறுநீர் மிகவும் அடர்ந்த மஞ்சள் நிறத்தில் இருந்தாலும் தாய்ப்பால் குழந்தைக்கு போதவில்லை.

குழந்தை எடை போடாமல் இருப்பது.

நீங்கள் தாய்ப்பால் கொடுத்த பின்னரும் உங்களின் மார்பகம் சாஃப்டாக இருந்தால் தாய்ப்பால் குறைவாக சுரக்கிறது என அர்த்தம்.

இதையும் படிக்க: யாரெல்லாம் குழந்தைக்கு தாய்ப்பால் தரக்கூடாது? தாய்ப்பால் தருவதை எப்போது நிறுத்தலாம்?

தாய்ப்பால் சுரப்பை எப்படி அதிகரிப்பது?

குழந்தைக்கு ஒவ்வொரு முறை தாய்ப்பால் கொடுக்கும்போது, சரியான நிலையில் நீங்களும் குழந்தையும் இருக்க வேண்டும்.

தாய்ப்பால் சுரப்புக்காக நீங்கள் மார்பகத்தை அவ்வபோது அழுத்தி விடுங்கள்.

மார்பகத்தை அளவாக பம்ப் செய்யுங்கள். தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.

தாய்ப்பாலை சுரக்க வைக்கும் உணவுகளை அதிக அளவில் சாப்பிடுங்கள்.

நீங்களும் குழந்தையும் நன்கு தூங்க வேண்டும். தூக்கம் குறைவானாலும் தாய்ப்பால் சுரப்பு குறையும்.

தாய்ப்பால் நன்கு சுரக்க என்னென்ன உணவுகளை சாப்பிடலாம்?

கீரைகள்

பூண்டு

சோம்பு

வெந்தயம்

இதையும் படிக்க: உணவுகள் மூலம் தாய்ப்பாலை அதிகமாக சுரக்க வைப்பது எப்படி?

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

யாரெல்லாம் குழந்தைக்கு தாய்ப்பால் தரக்கூடாது? தாய்ப்பால் தருவதை எப்போது நிறுத்தலாம்?

tamiltips

சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றுக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் எளிய வீட்டு வைத்திய முறைகள்

tamiltips

உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய 10 பண்புகள்

tamiltips

யாரெல்லாம் குழந்தைக்கு தாய்ப்பால் தரக்கூடாது? தாய்ப்பால் தருவதை எப்போது நிறுத்தலாம்?

tamiltips

உங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? இதை முதலில் செய்யுங்கள்…

tamiltips

பாரம்பர்ய விளையாட்டுகளால் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

tamiltips