Tamil Tips
குழந்தை பெற்றோர்

குழந்தைகளைத் தூங்க வைப்பதில் பெற்றோர் செய்யும் தவறுகள்…

தற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் இருக்கின்றன எனப் பார்க்கலாம்.

பெற்றோருக்கு, தன் குழந்தையை அப்பா அம்மாவுக்கு இடையில் போட்டு தூங்க வேண்டும் என்ற ஆசை நிறையவே இருக்கும். அது பெரும் கனவு என்று கூட சொல்லலாம்.

ஆனால், இப்படித் தூங்குவது குழந்தைக்கு பாதுகாப்பானதா என்பதே கேள்வி. அதற்கு விடை காண்போம்.

எஸ்.ஜ.டி.எஸ் (SIDS) சிண்ட்ரோம்…

எஸ்.ஜ.டி.எஸ் சிண்ட்ரோம் என்றால் (Sudden Infant Death Syndrome) என்று சொல்லப்படுகிறது.

அதாவது 1 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் இந்த பிரச்னை பெரிதும் காணப்படுகிறது.

Thirukkural

‘குழந்தைகளுக்கு திடீரென்று ஏற்படக்கூடிய மரணம்’ என இதை சொல்கிறார்கள்.

இவ்வாறு இறக்கும் குழந்தைகள் பெரும்பாலானவை பெற்றோரிடம் ஒரே படுக்கையில் தூங்கும் குழந்தைகளாக உள்ளன என்பதே அதிர்ச்சி தரக் கூடிய செய்தி.

குழந்தையும் பெற்றோரும் உறங்கும் நிலை

babies sleep

இதையும் படிக்க: 3 வகையான பேபி மசாஜ் எண்ணெய் செய்வது எப்படி?

குழந்தைகளுடன் பெற்றோர் உறங்கும் நிலைகளாக 4 வகையாகப் பிரிக்கப்படுகின்றன.

#1. ஒரே அறையில் தூளி அல்லது தொட்டிலில் குழந்தையைத் தூங்க வைப்பது.

#2. ஒரே அறையில் தனித்தனி கட்டிலில் குழந்தையுடன் தூங்குவது.

#3. ஒரே படுக்கையில் குழந்தையுடன் தாய் நெருக்கமாகப் படுத்து தூங்குவது.

#4. ஒரே படுக்கையில் தாய், குழந்தை மற்றும் தந்தையும் தூங்குவது.

மேலே 4 நிலைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. இதில் 1 மற்றும் 2-ம் நிலைகள் பாதுகாப்பானவை. 3 மற்றும் 4-ம் நிலைகள் பாதுகாப்பற்றவை.

ஆனால், பெரும்பாலும் 3 மற்றும் 4-ம் நிலையே பெரும்பாலான வீட்டில் பின்பற்றுகின்றனர். இதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.

ஏன் பெற்றோர் அருகில் குழந்தைகளைப் படுக்க வைக்க கூடாது?

4 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகள் கட்டிலின் குறைபாடு, போர்வை, தலையணைகளின் ஆதிக்கம், அருகில் படுத்திருக்கும் தாய் அல்லது தந்தையின் அழுத்தம் ஆகியவற்றால் மூச்சுத் திணறி, இறக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.

bed sharing with baby

Image Source : Credit onlymyhealth.com

இதையும் படிக்க: குழந்தைகளை ஈஸியான முறையில் தூங்க வைக்க டிப்ஸ்…

தாயுடன் குழந்தை தூங்குவது சரியா?

  • பெரும்பாலான வீடுகளில் படுத்துக்கொண்டே தாய் குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு அப்படியே தூங்கி விடுகிறார்கள்.
  • சில சமயங்களில் தாயின் மார்புக் காம்பு, மார்பு இடைவேளிப் பகுதிகள் அழுத்தம் தரலாம்.
  • தாய் திடீரென திரும்பினால் தாயின் பெரிய வயிறு, குழந்தைகளின் கால்களை, வயிற்றை அழுத்தும். இதனால் குழந்தைகள் மூச்சுத்திணறி, மயங்கி, அசைய முடியாமல் இறந்து போகின்றன.
  • எனவே அதிக கவனம் தேவை.

பெரிய குழந்தைகளுடன் சிறு குழந்தைகளை படுக்க வைக்க கூடாது?

  • ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் தூங்கும்போது, பெரிய குழந்தைகளால் சிறிய குழந்தைக்கு பாதிப்பு வரலாம்.
  • தூக்கத்தில் கை, கால் மேலே பட்டு பாதிப்பு ஏற்படலாம்.
  • படுக்கையிலிருந்து கீழே விழும் வாய்ப்புகள் உள்ளன.
  • கட்டிலின் கூர்மை பகுதியில் அடிபட நேரலாம்.

குழந்தைகளை எப்படிப் படுக்க வேண்டும்?

  • 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை தனித் தொட்டிலில் படுக்க வைக்கலாம். அல்லது தனி கட்டிலில் தாயிற்கு அருகே படுக்க வைப்பது பாதுகாப்பானது.
  • ஒரு வயது வரை கூட தொட்டிலில் படுக்க வைக்கலாம்.
  • குழந்தையின் முதுகு படுக்கையில் இருக்கும்படியாக மல்லாக்கப் படுக்க வைக்க வேண்டும். இது சிறந்த முறை எனலாம்.
  • கட்டிலில் படுக்க வைக்கும்போது, சமதளமான விரிப்பில் விரித்து, குறைந்த ஆடைகளுடன் கயிறு, நாடா, லேஸ் இதுபோல எதுவும் இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
  • தலையில் தொப்பி போடாமல் குழந்தையை தூங்க வைக்க வேண்டும்.
    ஏனென்றால் இதெல்லாம் மூச்சடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
  • குழந்தை குப்புறப் படுக்காமல் மல்லாக்கத் தூங்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • மது அருந்தியவர்கள், புகை பிடித்தவர்கள் யாராக இருந்தாலும் குழந்தைகள் அருகில் படுக்க கூடாது.
  • குண்டாக இருப்பவர்கள் யாரும் குழந்தைக்கு அருகே படுக்க கூடாது.
  • ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் அருகில் தலையணை, கனமான போர்வை, கம்பளி, பெரிய வகையான பஞ்சு பொம்மைகள் ஆகியவற்றை வைத்திருக்கக் கூடாது.   babies sleeping method

Image Source : Credit momwoot.com

இதையும் படிக்க: பெட்வெட்டிங் செய்ய காரணங்களும் தீர்வுகளூம்… பெட்வெட்டிங் நோயா? குறைபாடா?

எந்த வயது வரை குழந்தைகளை அருகில் படுக்க வைக்கலாம்?

  • 1-5 வயது வரை மட்டுமே குழந்தைகளுடன் பெற்றோர் படுக்கையில் ஒன்றாகத் தூங்கலாம்.
  • அதற்கு பின் பெண் குழந்தைகளை தாயுடன் உறங்க செய்வது நல்லது. அல்லது அதே அறையில் வேறு இடத்தில் தூங்க வைக்கலாம்.
  • ஆண் குழந்தைகளை தந்தையுடன் உறங்க செய்வது நல்லது.
  • நீண்ட நாட்கள் பெற்றோரின் இடையில் தூங்கும் குழந்தைகள், பெற்றோரை சார்ந்தே வாழவும் முடிவெடுக்கவும் கற்றுக் கொள்கிறார்கள். சுயமாக சிந்திக்கும் ஆற்றலை இழக்கிறார்கள்.
  • பெற்றோருடன் தூங்கும் குழந்தைகள், பெற்றோர் தங்களுக்குள் பாலியல் ரீதியாக நெருங்குவதைப் பார்க்கும் குழந்தைகள், பாலியல் ரீதியான அசைவுகளை உணரும் குழந்தைகள் மனரீதியாகப் பாதிக்கின்றனர். தூக்கத்தைத் தொலைக்கின்றனர்.
  • அதுபோல தனியாக உறங்கும் குழந்தைகள் சற்று முரட்டுத்தனம், அதிக சுகந்திரம் படைத்தவர்களாக வளர்கிறார்கள். இவர்களுக்கு மூளை வளர்ச்சி, புரிந்து கொள்ளும் திறனும் குறைகிறது.

பெரிய குழந்தைகளை எப்படிப் படுக்க வைக்க வேண்டும்?

  • சில ஆண்டுகளில் குழந்தைகள் தனியாகவே படுத்துக் கொள்ள விரும்பும்.
  • மெத்தை, தனி கட்டில் கேட்கத் தொடங்குவார்கள்.
  • அந்தப் பருவத்தில் குழந்தைகளை ஒரே அறையில் தனியாக படுக்க வைக்கப் பழக்கலாம்.
  • குழந்தைக்கு 10 வயதாகும் வரை தனி அறை ஒதுக்கித் தூங்க வைப்பதைத் தவிர்க்கலாம்.
  • எந்தக் காரணத்துக்காகவும் தங்கள் கண்ணில் படாத இடத்தில் குழந்தைகள் தூங்குவதை அனுமதிக்க வேண்டாம். தற்போது, மொபைல், இன்டர்நெட் போன்ற சூழல்கள் பெருகிவிட்டன.

Source : ஆயுஷ் குழந்தைகள்

இதையும் படிக்க: தூளி, மெத்தை, தொட்டில்… குழந்தையை எதில் படுக்க வைக்க வேண்டும்?

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தைக்கு 7 பாதிப்புகளை ஏற்படுத்தும் ரப்பர் நிப்பிள்… தீர்வு என்ன?

tamiltips

வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்வது எப்படி?!

tamiltips

குழந்தைகளுக்கான ஹோம்மேட் வேப்பர் ரப் செய்வது எப்படி?

tamiltips

ஹோம்மேட் புரோட்டீன் பவுடர் செய்வது எப்படி? 2 சிம்பிள் ரெசிபிகள்…

tamiltips

பிறப்புறுப்பு பகுதியில் வரும் பிரச்னைகள்… எதெல்லாம் நார்மல் அறிகுறிகள் அல்ல?

tamiltips

குழந்தைகளை ஈஸியான முறையில் தூங்க வைக்க டிப்ஸ்…

tamiltips