Tamil Tips
கர்ப்ப கால நிலைகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் கர்ப்பம்

முதல் 3 மாதங்கள்… கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டியதன் காரணம் தெரியுமா?

தாயாகப் போகிறேன் என்ற செய்தியைக் கேட்டு மகிழ்ச்சியில் இருப்பீர்கள். உங்கள் வயிற்றில் குழந்தை கருவாக இருக்கும்போதே குழந்தையின் பாலினம், ரோமம், தோல், நிறம், குணம், உயரம், திறன் ஆகியவை முடிவு செய்யப்படும். குழந்தையின் முதல் 3 மாதங்களின் (First Trimester) வளர்ச்சி எப்படி இருக்கும் எனத் தெரியுமா?

முதல் மூன்று மாதங்கள் – குழந்தையின் வளர்ச்சியும் தாய் கவனிக்க வேண்டியதும்

முதல் மூன்று மாதங்களில், தாய் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

முதல் வாரம்

  • நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் எனத் தெரியாது. எனினும் உங்களது உணர்வுகளில் மாற்றங்கள் இருக்கும்.
  • தாய்மை உணர்வு, சொல்ல முடியாத உணர்வு தோன்றியிருக்கும்.

2-வது வாரம்

  • ஹார்மோன்கள் சுரந்து மாதவிலக்கை வர விடாமல் தடுக்கும்.
  • தாய்மைக்கு உடலைத் தயார் செய்ய ஆரம்பிக்கும்.

3-வது வாரம்

  • வாந்தி, குமட்டல், வயிறு பிரட்டுவதுப் போன்ற உணர்வுகள் வரலாம்.
  • வயிற்றில் உள்ள கருவுக்கு மூளை செல்கள், முதுகுத்தண்டுவடம், நரம்பு மண்டலம் என அடிப்படையான விஷயங்கள் உருவாகியிருக்கும்.
  • லேசாக இதயத்துடிப்பும் தெரிய ஆரம்பிக்கும்.

first trimester by week

Image Source : Youtube

இதையும் படிக்க : தாயாகத் திட்டமிடும் பெண்களுக்கு 10 டிப்ஸ்

Thirukkural

4-வது வாரம்

  • குழந்தையின் மூளையும் நரம்பு மண்டலமும் முழு வடிவத்தைப் பெற்றிருக்கும்.
  • முதுகு எலும்புகள், தசைகள், கை, கால்கள், கண்கள், காதுகள் எல்லாம் வளரத் தொடங்கும்.
  • குழந்தை 3 மில்லி மீட்டருக்கு குறைந்த அளவில் தாயின் வயிற்றில் காணப்படும்.
  • குழந்தை பாதுகாப்பாக இருக்க, உங்களது கர்ப்பப்பையே தடிமனான மெத்தையை குழந்தைக்காக உருவாக்கும்.
  • இந்தக் காலத்தில் தாய் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தொடங்குவார்.
  • வாந்தியும் குமட்டலும் அதிகரித்திருக்கும் காலமும் இது.

5-வது வாரம்

  • உங்கள் குழந்தை உங்களது வயிற்றில் 5 மீட்டர் அளவுக்கு வளர்ந்திருக்கும்.
  • சின்ன சிறிய அழகான விரல்களும் தோன்ற ஆரம்பிக்கும்.
  • சில தாய்மார்களுக்கு பிறப்புறுப்புகளில் ரத்த சொட்டுக்கள் லேசாக ஆரம்பிக்கும். இப்படி இருந்தால் ஒருமுறை மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று வருவது நல்லது.
  • இயற்கையாக நீங்கள் கர்ப்பமாகி இருந்தால், மருத்துவர் ஆலோசனைப்படி லேசான உடற்பயிற்சிகளை செய்யலாம்.
  • அதிக சோர்வு சிலருக்கு இருக்கலாம்.
  • தலைவலி இக்காலத்தில் வரலாம்.
  • சோர்வாக இருந்தால் அவ்வப்போது ஓய்வு எடுங்கள்.
  • இரவில் வெகு நேரம் கண் விழிக்கும் பழக்கம் இருந்தால், அதையெல்லாம் இனி விட்டு விடுங்கள். உங்கள் குழந்தையின் நலனுக்காக.
  • மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

இதையும் படிக்க : கர்ப்பக்கால சர்க்கரை நோயைத் தவிர்க்கும் உணவுகள்

6-வது வாரம்

  • குழந்தை 6-7 மில்லி மீட்டர் உயரம் வரை காணப்படும். சிறிது சிறதாக வளர்ச்சி அதிகரிக்கும்.
  • 4 அறைகளும் உள்ள முழுமையான இதயம் உருவாகும்.
  • கைகளும் கால்களும் நீண்டு வளரக்கூடும்.
  • குழந்தையின் மூளை நன்றாக செயல்படும்.
  • இதனால் குழந்தையின் உள்ளுறுப்புகளின் வளர்ச்சியை தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரும் வேலையை குழந்தையின் மூளை செய்ய தொடங்கிவிடும்.
  • இந்த காலத்தில் கர்ப்பிணிகள் காற்றோட்டமான இடத்தில் இருப்பதை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
  • மாலை வெயிலில் சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்வது நல்லது.
  • விட்டமின் டி சத்து வெயிலிருந்து தாய்க்கு கிடைக்கும்.
  • அடிக்கடி சிறுநீர் கழிக்க செல்லும் சூழலும் வரும்.

heart growth for baby

Image Source : wikipedia

7-வது வாரம்

  • குழந்தை 7-8 மீட்டர் அளவு வளர்ந்திருக்கும்.
  • கை, கால்கள் நன்றாக வளர்ந்திருக்கும்.
  • சீரான இதயத் துடிப்பு காணப்படும்.
  • இந்த காலத்தில் தாய்க்குப் புளிப்பான உணவுகள் பிடிக்க ஆரம்பிக்கும்.
  • புளிப்பு சுவையைத் தேடி தாய்மார்கள் செல்வார்கள்.

இதையும் படிக்க : கர்ப்பக்கால விதிகள் … செய்ய வேண்டியதும் தவிர்க்க வேண்டியதும்…

8-வது வாரம்

  • குழந்தை 8-10 மில்லி மீட்டர் அளவுக்கு வளர்ந்திருக்கும்.
  • கருப்பை இரண்டு மடங்கு பெரிதாகக் காணப்படும்.
  • இதயத் துடிப்பு நிமிடத்துக்கு 160 எண்ணிக்கையாக காணப்படும்.
  • தோல் மிகவும் மெலிதாக உருவாகியிருக்கும்.
  • பார்ப்பதற்கு மிக சிறிய மனித உருவம் போல தெரியும்.
  • சோர்வு வரும் போதெல்லாம் ரெஸ்ட் எடுக்க வேண்டும்.

first trimester tamil

Image Source : Videohive

9-வது வாரம்

  • குழந்தையின் உள்ளுறுப்புகள் நன்றாக வேலை செய்யத் தொடங்கும்.
  • இதனால் கர்ப்பப்பையில் குழந்தை நகரத் தொடங்கும்.
    குழந்தையின் நடனம் தொடங்கிவிட்டது. அங்கேயும் இங்கேயும் லேசாக குழந்தை நகரும்.
  • குழந்தை தன் விரல்களை அசைக்கும்.
  • உள்ளங்கையைத் தொட்ட படி கைகளை மூடும்.
  • தாயின் மார்பகங்கள் கொஞ்ச கொஞ்சமாக பெரிதாகும்.
  • அதிகமான ஹார்மோன் சுரப்புகள் ஏற்படும்.
  • திடீர் மகிழ்ச்சி, திடீர் அழுகை இப்படி மாறி மாறி மனநிலை இருக்கும். பயப்பட வேண்டாம். இது நார்மல்தான்.
  • லேசான மூக்கடைப்பு இருக்கும்.
  • மூக்கில் ரத்த கசிவு தோன்றலாம்.
  • மூக்குக்கு உள்ளே வறட்சியாக இருப்பது போன்ற உணர்வுத் தெரியும்.

10-வது வாரம்

  • குழந்தை தாடை எலும்புகள் தோன்றியிருக்கும்.
  • இதயம் சீராக இயங்கும்.
  • தாடையைக் குழந்தை அசைக்கும்.
  • குழந்தையின் நெற்றியின் சுருக்கங்கள் காணப்படும்.
  • தாயின் வயிறு கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகும்.

first trimester in weeks

Image Source : Framepool

இதையும் படிக்க : 0 – 2 வயதுக்குள் குழந்தைகளின் வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும்?

11-வது வாரம்

  • குழந்தை இப்போது 2-3 செ.மீ நீளத்தில் இருக்கும்.
  • சீறுநீரகம் நன்கு செயல்பட்டு, சிறுநீர் வெளியாகும்.
  • முகத்தோற்றம் சீராக இருக்கும்.
  • நகங்களின் வளர்ச்சியும் சீராக இருக்கும்.
  • குழந்தையின் நீளத்துக்கு ஏற்றது போல, மூன்றில் ஒரு பங்காக குழந்தையின் தலை காணப்படும்.
  • குழந்தையின் எடை அதிகரிக்கத் தொடங்கும்.

12-வது வாரம்

  • உங்கள் குழந்தை இப்போது 6 செ.மீ அளவுக்கு காணப்படும்.
  • மணிக்கட்டு, முழங்கை ஆகியவற்றை குழந்தை அசைக்க ஆரம்பிக்கும்.
  • கருப்பையில் குழந்தை கொஞ்ச கொஞ்சமாக சுற்ற ஆரம்பிக்கும்.
  • குழந்தை தூங்கும்; மீண்டும் எழும். தூக்கமும் விழிப்பும் குழந்தைக்கு மாறி மாறி இருக்கும்.
  • தன் தசைகளைக் குழந்தை அசைக்கும்.
  • இந்தக் காலத்தில் குழந்தை தன் தலையைத் திருப்பும்.
  • வாயைத் திறந்து, திறந்து மூடும்.
  • தாய்மார்களுக்கும் வாந்தி, வயிற்று பிரட்டல் குறைய ஆரம்பிக்கும்.
  • இதனால் கொஞ்சம் கொஞ்சமாக தாய்மார்கள் இயல்பு நிலைக்கு வருவார்கள்.

இந்த முதல் மூன்று மாதங்களும் உங்கள் குழந்தையின் வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. எனவே நீங்கள் வெகு கவனமாக உங்கள் உடல்நலத்தையும் மனநலத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள். தாய்மார்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

Source: ஆயுஷ் குழந்தைகள்

இதையும் படிக்க : குழந்தையின் முதல் 1000 நாட்கள்… 21 கட்டளைகள்..!

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்பதை உறுதி செய்யும் அறிகுறிகள்…

tamiltips

நீங்காத ஸ்ட்ரெச் மார்க்ஸ்கூட 3 மாதத்துக்குள் நீங்கும்…

tamiltips

பிரசவத்திற்கு எபிடியூரல் (வால் பகுதி தண்டுவடம் மயக்க மருந்து) கொடுப்பதனால் ஏற்படும் நன்மைகளும்,தீமைகளும்

tamiltips

பிரசவத்திற்குப் பின் ஏற்படும் மனஅழுத்தத்தைக் குறைக்க 10 சிறந்த வழிகள்!

tamiltips

கர்ப்ப காலத்தில் எப்படி ஹீமோகுளோபின் அளவை சீராக வைத்துக் கொள்வது?

tamiltips

தாய்மார்களுக்கு வரும் முதுகு வலி, மூட்டு வலி போக்கும் எளிய வழிமுறைகள்…

tamiltips