Tamil Tips
லைஃப் ஸ்டைல்

உலக அழகி பட்டம் வென்றார் வனஸ்சா! இவர் யார் தெரியுமா?

சீனாவின் சன்யா நகரில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் 118
நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கு பெற்றனர். நீச்சல் உடை, பூணை நடை, அறிவுடன் கூடிய
அழகு என அனைத்து சுற்றுகளிலும் அதிக புள்ளிகள் பெற்று மெக்சிக்கோவின் வனஸ்சா உலக
அழகி பட்டத்தை வென்றார். அவருக்கு கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற இந்தியாவின்
மனுசி சில்லர் க்ரீடத்தை சூட்டினார்.   உலக அழகி பட்டம் வென்றுள்ள
வனஸ்சாவுக்கு 26 வயது ஆகிறது. மெக்சிக்கோவின் குவான்ஜூவாட்டோ நகரை சேர்ந்த வனஸ்சா
அங்குள்ள பல்கலைக்கழகத்தில் சர்வதேச வர்த்தகம் எனும் பாடப்பிரிவில் பட்டம்
பெற்றுள்ளார். மேலும் மனிதவளத்துறையில் பட்டயப் படிப்பையும் வனஸ்சா நிறைவு
செய்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக வனஸ்சா மாடலிங் தொழிலில் ஈடுபட்டு இருந்தார்.

Thirukkural

   ஆனால் இரண்டு
ஆண்டுகளுக்கு முன்னர் மாடலிங் தொழிலுக்கு முழுக்கு போட்டுவிட்டு  மாற்றுத்திறனாளி பெண்களுக்கு கல்வி கற்பிக்கும்
வேலையில் இறங்கியுள்ளார் வனஸ்சா. ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஸ் மொழிகளில் வனஸ்சா
புலமை பெற்றவர். இவருக்கு வாலி பால் விளையாடுவது மிகவும் பிடிக்கும். கடலில்
ஸ்கூபா டைவிங் செல்வதற்கும் வனஸ்சா மிகவும் ஆசைப்படுவாராம்.  தற்போது நெனமி என்று
அழைக்கப்படும் பள்ளியில் பழங்குடியின சிறுமிகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும்
ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டே உலக அழகிப்போட்டியில் பங்கேற்று வென்றுள்ளார்
வனஸ்சா. உலக அழகிப் போட்டியில் இறுதியில் கேட்கப்படும் கேள்விக்கு அழகிகள்
அளிக்கும் பதில் தான் அவர்களுக்கு பட்டத்தை பெற்றுத்தரும். அந்த வகையில்
இறுதிக்கேள்விக்கு வனஸ்சா அளித்த பதில் பின்வருமாறு:-

   எப்போதும் ஒரு
நோக்கத்தை தேடிக் கொண்டிருக்கும் பெண் நான். எனக்கு அன்பு, கலை மற்றும் மற்றவர்கள்
மீது பரிவு காட்டுவதில் அதிக நம்பிக்கை உண்டு. நான் மிகவும் கடுமையாக உழைக்க
கூடியவள். அதே சமயம் அதிகம் பகல் கனவு காண்பவளும் கூட. எப்போதுமே நான் சந்திக்க
கூடிய மனிதர்களின் முகத்தில் சிரிப்பு இருக்க வேண்டும் என்று நினைப்பவள். பல
ஆண்டுகளாக மாடலிங் செய்து வந்தேன். ஆனால் 2 ஆண்டுகளுக்கு முன்னர் மாடலிங்கை
நிறுத்திக் கொண்டேன்.

   தற்போது பழங்குடியின
சிறுமிகளுக்கு கல்வி கற்றுக் கொடுத்து வருகிறேன். உலகில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு
நாளாவாது தன்னார்வலாகி ஏதேனும் ஒரு சேவை செய்ய வேண்டும். இவ்வாறு வனஸ்சா கூறியதும்
அரங்கமே கைதட்டில் அதிர்ந்தது. அந்த கைதட்டே வனஸ்சாவுக்கு உலக அழகி பட்டத்தை வென்று
கொடுத்தது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மூளை செயல் திறனை அதிகரிக்க கூடிய பலம் வால்நட்டில் இருக்கிறது!

tamiltips

ஒடிசாவை சின்னாபின்னமாக்கியது ஃபானி! மணிக்கு 245கிமீ வேகத்தில் சூறாவளி காற்று!

tamiltips

7 மணி நேரத்தில் சென்னை டூ மதுரை: WiFi, AC வசதியுடன் அதிநவீன தேஜஸ் ரயில்

tamiltips

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் அந்தோணிதாசன் குழுவின் இசையில் ஈஷாவின் கொரோனா விழிப்புணர்வு பாடல்!

tamiltips

அட எல்லாம் மேக்கப்பா? சன் டிவி ஆன்கர் அனிதாவின் அதிர வைக்கும் போட்டோஸ் உள்ளே!

tamiltips

எத்தனை கப் காபி குடிப்பது நல்லது??

tamiltips