Tamil Tips
லைஃப் ஸ்டைல்

நீங்கள் விரும்பி அடிக்கடி உண்ணும் பாப்கார்ன் உடலுக்கு நல்லதா கேட்டதான்னு தெரியுமா?

ஒரு கப் பாப்கார்னில் இருப்பது வெறும் முப்பதே கலோரிகள்… வைட்டமின் பி1, பி5, சி, பாஸ்பரஸ், மாங்கனீசு என போனஸாக ஏகப்பட்ட சத்துகள்! இதெல்லாம் இயற்கையான முறையில் சோளத்தைப் பொரித்து சாப்பிடுகிற வரையில் மட்டுமே! 

கடைகளிலும் தியேட்டர்களிலும் மிஷின் வைத்துப் பொரித்துக் கொடுக்கிற பாப்கார்ன், வீட்டிலேயே உடனடியாக தயாரிக்கக்கூடிய இன்ஸ்டன்ட் பாப்கார்ன், மைக்ரோவேவ் பாப்கார்ன் போன்ற எல்லாம் இதற்கு விதிவிலக்கு.

சோளத்தைப் பொறுத்தவரை கடலை வறுக்கிற மாதிரி அப்படியே பொரித்தால், மணமோ, சுவையோ இருப்பதில்லை. அதனால்தான் எண்ணெய், வெண்ணெய், மசாலா சேர்த்துப் பொரித்து விற்பனை செய்கிற கடை அயிட்டங்களுக்கும், இன்ஸ்டன்ட் பாக்கெட்களுக்கும் அத்தனை மவுசு. இவற்றில் கொழுப்பும் கலோரியும் அதிகம் என்கிறபோதே, பாப்கார்ன் ஆரோக்ய உணவு என்கிற கருத்து உடைபட்டுப் போகிறது.

இன்ஸ்டன்ட் பாப்கார்ன் பாக்கெட்களை தவிர்க்கச் சொல்கிற அறிவுரைகள் ஒரு பக்கம் தொடர, மைக்ரோவேவ் பாப்கார்ன் பாக்கெட்கள் இன்னும் ஆபத்தானவை என பீதியைக் கிளப்புகின்றன லேட்டஸ்ட் ஆராய்ச்சிகள்.

இன்ஸ்டன்ட் பாப்கார்னிலேயே மைக்ரோவேவில் செய்யவென பிரத்யேக பாக்கெட்கள் கிடைக்கின்றன. தட்டையாகக் காட்சியளிக்கிற அந்த பாக்கெட்டை அப்படியே மைக்ரோவேவில் வைத்தால், சில நொடிகளில் உள்ளே உள்ள சோளப்பொரிகள் பொரிந்து, பாக்கெட் பூரித்து உப்பிப் பெரிதாகும். பாப்கார்ன் பொரிகிறபோது அதிலிருந்து கிளம்புகிற வெண்ணெய் வாசம், யாரையும் மயங்க வைக்கும்.

Thirukkural

அந்த மயக்கத்துக்குக் காரணமான ‘டைஅசிட்டைல்’ ரசாயனம்தான் பாப்கார்ன் பாக்கெட்களில் ஒளிந்திருக்கிற எமன் என்பது பலருக்கும் தெரியாது!

‘‘மைக்ரோவேவ் பாப்கார்ன் பாக்கெட்டில் மட்டுமில்லாம, குளிர்பானங்கள் உள்ளிட்ட நிறைய உணவுப் பொருட்கள்ல ‘டைஅசிட்டைல்’ சேர்க்கப்படுது.

இது மஞ்சள் நிறத்துல பவுடராகவோ, திரவ வடிவத்துலயோ இருக்கும். மார்ஜரின் மற்றும் எண்ணெய் உணவுத் தயாரிப்பாளர்கள், இதை உபயோகப்படுத்தி, சம்பந்தப்பட்ட உணவுக்கு செயற்கையான வெண்ணெய் மணத்தையும் சுவையையும் கொண்டு வர்றாங்க. அதை சேர்க்காத பட்சத்துல, அந்த உணவுகள் ருசிக்கிறதில்லை.

மேல சொன்ன செயற்கை வெண்ணெய் ருசிக்கான பொருளைத் தயாரிக்கிற தொழிற்சாலைகள்லயும், மைக்ரோவேவ் பாப்கார்ன் தயாரிப்புத் தொழிற்சாலைகள்லயும் வேலை பார்க்கிறவங்களுக்கு நுரையீரல் பாதிக்கப்படறது நிரூபணமாயிருக்கு. மைக்ரோவேவ் பாப்கார்னை அடிக்கடி சாப்பிடறவங்களும் இதுக்கு விதிவிலக்கில்லை.

டை அசிட்டைலை தொடர்ந்து சுவாசிக்கிறதோட விளைவுதான் இது’’ என அதிர வைக்கிறார் ஆராய்ச்சியாளர் ராதாகிருஷ்ணன். டைஅசிட்டைல் கலக்கப்பட்டுள்ள தின்பண்டங்களை, குறிப்பாக சூடுபடுத்தி உண்ணக் கூடியவற்றைத் தவிர்ப்பதே பொதுமக்களுக்கான ஆரோக்ய அறிவுரை என்கிறார் இவர்.

‘‘சுவையும் மணமும் குறைவா இருந்தாலும் வீட்லயே சாதாரண முறையில் தயாரிக்கக்கூடிய பாப்கார்னே பாதுகாப்பானது. மெகா சைஸ் பாக்கெட்ல விற்பனையாகிற பாப்கார்ன் பாக்கெட்டுகளோட ‘கமகம’ வாசனை வேற ஒண்ணுமில்லை. பிரச்னையை ‘வா வா’ன்னு கூப்பிடற டைஅசிட்டைலேதான்…’’ என எச்சரிக்கிறார் அவர்.

மேலும் சில இடங்களில் … நம் வீட்டின் அருகே இருக்கும் சின்ன மளிகைக் கடைகளில் ஞாயிறு மதிய சமையலுக்காக பதினைந்து ரூபாய்க்கு ஒரு பாக்கெட் வாங்கினால், பட்டை லவங்கம் பிரிஞ்சி இலைகளோடு சின்ன உப்புக்கல்லை சில்லு சில்லாய் செதுக்கியது போன்று அஜினோமோட்டோவும் சேர்த்து கொடுக்கப்படுகிறது.

அசைவ உணவின் செரிமானத்திற்காகவும், சேர்க்கப்படும் பொருட்களில் சமீபமாக இந்த எம்.எஸ்.ஜி என்கிற சுவைகூட்டியும் இணைந்தே இந்த பாக்கெட்டுகளில் வரத்தொடங்கிவிட்டது.

உணவகங்களில் செய்யும் நூடூல்ஸ், ஃப்ரைடு ரைஸ் போன்ற எந்த உணவு வகைகளிலும் சுவைக்காக எம்.எஸ்.ஜி (Monosodium Glutamate ) என்கிற சுவைகூட்டி சேர்க்கப்படுகின்றது. மேலும் உடனடி நூடூல்ஸ் பாக்கெட் மசாலாக்களிலும், பல்வேறு வகை நொறுக்குத்தீனிகளிலும் இவை சேர்க்கப்படுகிறது உணவில் சுவை கூட்டுவதற்காக சேர்க்கப்படும் எம்.எஸ்.ஜியில் முக்கியமானதொரு இடுபொருள் அஜினோமோட்டோதான்.

இந்த எம்.எஸ்.ஜி மிகக் குறைந்த விலையில் கிடைப்பதாலும் உணவின் சுவையை அதிகரிப்பதாலும் மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. எம்.எஸ்.ஜியினால் உடலுக்கு மிக ஆபத்தான பின்விளைவுகள் ஏற்படுகின்றன என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் அதிகப்படியான சர்க்கரை இருப்பவர்களை இது கூடுதலாக பாதிப்புகளுக்கு உள்ளாக்குகிறது.

டாக்டர் மெர்கொலா தனது ஆய்வில் ‘‘எம்.எஸ்.ஜி ஒரு சைலண்ட் கில்லர், அது குடிப்பழக்கம், போதைப்பழக்கம் இவற்றைவிட பயங்கரமானது. இதை நீங்கள் பயன்படுத்துவது என்பது உங்கள் சமையலறையை கண்ணுக்குப் புலனாகாத முறையில் விஷக்கூடமாக மாற்றுகிறது. இது உங்கள் குழந்தையின் பள்ளிக்கூடத்தின் காபி ஷாப்பில் கூட உண்டு” என்று தன் ஆய்வறிக்கையில் தெரிவிக்கிறார்.

எம்.எஸ்.ஜியினால் ஏற்படும் பின்விளைவுகள் எம்.எஸ்.ஜியினால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன என்பதை சுருக்கமாக சொல்லலாம். இதனால் முகம் மற்றும் கழுத்துக்களில் எரிச்சல், சுவாசப் பிரச்சனை, தலைவலி, வாந்தி, இதயத்துடிப்பு அதிகரித்தல் என பல வகையில் உடல் நோய்க்கூறுகளுக்கு ஆட்படுகின்றது.

உடல் எடையை அதிகரிக்கும்

எம்.எஸ்.ஜி கலந்த உணவை உண்ணும் மக்கள் ஒபிசிட்டியினால்அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களது உடல் எடை அதிகரிக்கிறது. லெப்டின் என்கிற உணர்வு நாம் நமக்கு தேவையான உணவை உண்டதும் நரம்புகள் மூளைக்கு ‘போதும்’ என்கிற கட்டளை பிறப்பிக்கும்.

நாமும் உடனடியாக சாப்பிடுவதை நிறுத்திவிடுவோம். எம்.எஸ்.ஜி இந்த உணர்வை மழுங்கடிக்கச் செய்கிறது. இதனால் மக்கள் தேவைக்கு அதிகமான உணவை உட்கொள்கிறார்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சொத்தைப் பல் பிரச்னையா சுண்டைக்காய் தீர்த்திடுமே !!

tamiltips

உங்கள் முகத்தை இயற்கையாகவே அழகாக்க தேன் மட்டுமே போதும்! கிரீம் வேண்டாம்!

tamiltips

கணவனுடன் சண்டை போட்டால் மனைவிக்கு ஆயுள் கூடுமாம்! ஆண்களை மிரள வைக்கும் கண்டுபிடிப்பு!

tamiltips

சோர்வு நீங்கி உடல் பலம் பெற வேண்டுமா! ஓமத்தின் அற்புத நன்மைகளை படிங்க!

tamiltips

ரெட்மியா? ரியல்மியா? போட்டிபோட்டு கொண்டு விற்பனை களத்தில் இறங்கும் நிறுவனங்கள்! வெல்ல போவது யார்?

tamiltips

கர்நாடகாவில் வேகமாக பரவும் குரங்கு காய்ச்சல்! எத்தனை பேர் பலி தெரியுமா?

tamiltips