Tamil Tips
லைஃப் ஸ்டைல்

ஆண்கள் தினமும் சாப்பிட வேண்டியது வெண்டைக்காய் – சிறுநீரகத்தில் கல் வராமல் தடுக்க செவ்வாழை – வாய்ப்புண்ணா? தேங்காய் கடிங்க

வெண்டையை
நறுக்கும்போது வெளிவரும் பிசுபிசு திரவம்தான் மிகவும் சத்து நிரம்பியது. இதுவே புத்திசாலித்தனம்
ஞாபகசக்திக்கு உதவுகிறது.

·        
வெண்டையில்
உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் தேவையில்லாத கெட்ட கொழுப்பை அகற்றி இதயத்துக்கு பேருதவி
புரிகிறது.

·        
வெண்டை
சாப்பிடால் மலச்சிக்கல், குடல்புண் ஆறுகிறது. இத்துடன் வாய் துர்நாற்றத்தையும் தீர்த்துவைக்கிறது.

·        
நிறைய
வெண்டை சாப்பிடும் ஆண்களுக்கு, தாம்பத்திய வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும், ஆண்மை
குறைபாடு நீங்குகிறது.

 

Thirukkural

சிறுநீரகத்தில் கல் வராமல்
தடுக்க வேண்டுமா? செவ்வாழை சாப்பிடுங்க

வாழைப்பழங்கள் எல்லாமே
மனிதனுக்கு நன்மை செய்கிறது என்றாலும் செவ்வாழை கூடுதல் மருத்துவத் தன்மை கொண்டதாகும்.

·        
செவ்வாழையில்
இருக்கும் பொட்டாசியம் காரணமாக சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.

·        
பீட்டா
கரோட்டீன் நிரம்பியிருப்பதால் கண் நோய்களைக் குணமாக்குகிறது, குறிப்பாக மாலைக்கண் நோய்
நீங்கும்.

·        
தினம்
ஒரு செவ்வாழை சாப்பிடுபவர்களுக்கு நரம்புகள் பலம்பெறுகிறது. நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

·        
கல்லீரல்
வீக்கம், பல் நோய்கள், தோல் நோய்கள் போன்றவற்றை குணப்படுத்தும் தன்மையும் செவ்வாழைக்கு
இருக்கிறது.


வாய்ப்புண்ணா? தேங்காய் கடிங்க

கேரளா, இலங்கையில் தேங்காய் அதிகம் பயன்படுத்தினாலும்
நம்  மக்களுக்கு தேங்காய் மீது பயம் உண்டு.
இந்த பயம் தேவையா?

·        
தேங்காய் நார்ச்சத்து
உள்ளது என்பதால் அப்படியே பயன்படுத்தலாம். பால் எடுத்துப் பயன்படுத்தினால் கொழுப்புத்தன்மை
அதிகரிக்கும்.

·        
வாய்ப்புண்,
வயிற்றுப்புண்ணுக்கு தேங்காய் அருமருந்தாக பயன்படுகிறது. அப்படியே கடித்துத்தின்றால்
போதும்.

·        
எடை
தேறாத குழந்தைக்கு தேங்காய் கொடுத்துவந்தால் விரைவில் பலன் கிட்டும். பூசினவாக்கில்
தெம்பாக குழந்தை இருக்கும்.

·        
சிறுநீரக கோளாறு வராமல்  தடுத்து  உடலுக்கு மினுமினுப்பை தருகிறது. நீரிழிவு, கொழுப்புசத்து
நிரம்பியவர்கள் மட்டும் தவிர்ப்பது நலம்.

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பயங்கர ஃபானி புயலில் இருந்து தப்புகிறது தமிழகம்! சற்று முன் வெளியான சூப்பர் தகவல்!

tamiltips

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா? சிறுநீரகம் பாதிப்பாக இருக்கலாம்! உஷார் மக்களே!

tamiltips

நீங்கள் உபயோகபடுத்தும் வாசனை திரவியதால் உங்கள் ஆரோக்கியத்திற்கு என்னென்ன தீமைகள் என்று தெரியுமா?

tamiltips

மனிதன் கண்டிப்பாக எத்தனை மணிநேரம் தூங்க வேண்டும்? எத்தனை மணிநேரத்திற்கு மேல் தூங்க கூடாது?

tamiltips

இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா இஞ்சியில்! தெரியாத விஷயங்கள்!

tamiltips

மேனிக்கு அழகு தரும் திராட்சை.. உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும் செய்திகளையும் பாருங்க..

tamiltips