மார்பகத்தின் பெரும்பாகம்
கொழுப்பால் நிரப்பப்பட்டு
இருக்கும். ஒரு
சிறிய பாகத்தில்
மட்டும்தான் பால்
சுரப்பிகள் உள்ளன.
கருத்தரித்த பிறகு
தான் பால்
உற்பத்தி செய்யக்கூடிய
சுரப்பிகள் பெருகுகின்றன.
குழந்தை பிறந்து
சில நாட்கள்
ஆன பிறகு
மார்பகங்களில் அதிக
அளவில் பால்
உற்பத்தியாகும்.
அப்போது
மார்பகங்கள் மேலும்
சற்று அதிகமாய்
பெருக்கும். ஆகையால்
கர்ப்பத்திற்கு முன்
சிறிய மார்பகங்களை
கொண்ட பெண்கள்
கூட குழந்தை
பிறந்த பின்னர்
அதிக அளவுக்கு
பாலை உற்பத்தி
செய்ய முடியும்
தாய்ப்பால் கொடுத்துக்
கொண்டிருக்கும் காலத்தில்
ஒருவேளை கருத்தரித்து
விட்டாலும் தொடர்ந்து
பால் கொடுக்கலாம்.
ஆனால் சிலர்
இக்காலங்களில் பால்
கொடுப்பது குழந்தைக்கு
தீங்கு ஏற்படுத்தும்
என்று நினைத்து
நிறுத்தி விடுகின்றனர்.
இது மிகவும்
தவறானது. குறைந்தது
1 வருடமாவது பால்
கொடுத்து வந்தால்
தான் குழந்தையின்
உடல் வளர்ச்சிக்கு
சரியான அஸ்திவாரம்
கிடைக்கும்.