நம் வீட்டில் மட்டும் ஏன் இப்படி வரவில்லை? என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். மொறுமொறுவென்று தோசை எப்படி சுடுவது என்பதற்கான சில குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.
இட்லி செய்யும் மாவில் தோசை ஊற்றுவதை விட, தோசை கென்று தனி மாவை அரைப்பது மிகவும் சிறந்த ஒன்று. ஏனென்றால் தோசைக்கு அரைக்கும் மாவில் வெந்தயம் கொஞ்சம் அதிகமாக சேர்த்து, ஒரு பங்கு பச்சரிசி சேர்த்து, இரண்டு பிடி அவல் சேர்த்து அரைத்தால் தோசை நன்றாக சிவந்தும், மொறுமொறுவென்றும் வரும். அரைத்த மாவில் வெற்றிலையின் காம்பை கிள்ளி, வெற்றிலையின் மேல் புறம் மாவில் படும்படி கவிழ்த்து வைத்தால், குளிர்சாதனப்பெட்டியில் வைக்காமலே மாவு புளிக்காமல் நன்றாக இருக்கும்.
தோசையை கல்லில் ஊற்றும் போது, சரியாக வரவில்லை என்றால் சிறிதளவு புளியை எடுத்துக்கொண்டு எண்ணெயில் நனைத்து தோசைக்கல்லை நன்றாக சூடாக்கி, அதில் சூடு பறக்க தேய்க்க வேண்டும். அல்லது ஒரு வெங்காயத்தை எடுத்துக்கொண்டு அதை இரண்டாக வெட்டி தோசைக்கல்லில் சூடு பறக்க, 1/4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாக தேய்த்தால் தோசை, கல்லில் ஒட்டாமல், உடையாமல் முழுமையாக கிடைக்கும்.
சப்பாத்தி செய்யும் போதும், பிரட் ரோஸ்ட் செய்யும் போதும் கல் நன்றாக சூடாகி விடும். இதனால் அதே கல்லில் தோசை ஊற்றுவதில் சிறிது சிரமம் இருக்கும். உங்களால் முடிந்தால் தோசைக்கு என்று தனி கல்லை வாங்கி உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இந்த குறிப்புகள் அனைத்தும் Non-Stick கல்லிற்கு உபயோகப்படாது.
இட்லி மாவில் தோசை ஊற்றுபவர்களாக இருந்தால், ஒரு பவுலை எடுத்து கொள்ளவும் அவற்றில் இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து கொள்ளவும். அரிசிமாவை கெட்டியாக கரைத்து கொள்ள வேண்டாம், தாராளமாக தண்ணீர் ஊற்றியே கரைத்து கொள்ளலாம். பின்பு இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.
அவ்வளவு தான் அடுப்பில் தோசை கல்லை வைத்து எண்ணெய் தடவி கலந்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி எடுத்து தோசை ஊற்றி அதன் மேல் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மூடியை கொண்டு மூடி இரண்டு நிமிடம் கழித்து தோசையை எடுத்தால் போதும், ஹோட்டல் கிடைக்கும் மொறு மொறுப்பான தோசை ரெடி.