Tamil Tips
லைஃப் ஸ்டைல்

வந்துவிட்டது கோடைக் காலம்! சமாளிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

கோடை வந்துவிட்டாலே உடம்பில் அயர்ச்சியும், தண்ணீர் தாகமும் ஏற்படுவது இயற்கை. இதுபோன்ற நேரங்களில் இளநீர், மோர், எலுமிச்சை சாறு, தர்ப்பூசணி சாறு போன்றவற்றை அருந்துவது மிகவும் நல்லது. எந்த பழம் சாப்பிடுவதாக இருந்தாலும், சாறாக எடுத்துக் கொள்வதை விட, சுவைத்து சாப்பிட்டால், அதன் பலன் இரட்டிப்பாகும். கோடை காலத்தில் அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.

எலுமிச்சைப் பழமும், தேனும் அல்லது சர்க்கரை, உப்பும் கலந்து அருந்தினால் தாகம் அடங்கும். நுங்கு சாப்பிடலாம். சுத்தமான மோரில் உப்பு போட்டு, அதிக அளவு அருந்தலாம். தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது. நிறைய தண்ணீர் குடித்தாலே நீர்க்கடுப்பு உள்பட சிறுநீர் பாதிப்புகளைதுரத்திவிடலாம்

 கோடையில் தோல் நோய்கள், அரிப்பு, நமைச்சல், படை, சொறி, சிரங்கு போன்றவை அதிகமாக ஏற்படும். அச்சமயத்தில், குளிக்கும் போது, கடலை மாவு, பயத்தம் மாவு, முடிந்தால் சந்தனம், வெட்டிவேர் இவற்றைக் கலந்து பொடித்து, உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஈரமான ஆடைகளை அணியக் கூடாது. உடல் ஈரத்துடனும், ஆடைகள் அணியக் கூடாது. கோடை காலத்தில் பருத்தி ஆடைகளே சிறந்தது.

காலை, மாலை இரண்டு வேளைகளிலும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் எண்ணெய் தேய்த்து தலை குளிப்பது நலம் பயக்கும். ஒருநாள் விட்டு ஒருநாள் இரவு வெந்தயத்தை மோரில் ஊற வைத்து, அரைத்து, மறுநாள் காலை தலைக்கு பூசி குளித்து வந்தால், குளிர்ச்சியாக இருக்கும்.

இளநீர், மோர் சாப்பிட்டால் சிலருக்கு ஜலதோஷம் பிடிக்கும். அவ்வாறு இருப்பவர்கள், அவற்றுடன் சிறிது மிளகுத் தூளை சேர்த்துக் கொண்டால் போதும். எலுமிச்சை சாற்றுடன் சர்க்கரைக்குப் பதிலாக தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

Thirukkural

எல்லோருக்கும் ஏற்ற இளநீரை வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது. அதில் உகள்ள அமிலம் வயிற்றில் புண்ணை உருவாக்கிவிடும். குழந்தைகளின் எடைக்கு ஏற்றவாறு 1 லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் வரை கொடுக்கலாம். நீர்ச்சத்து அதிகமுகள்ள பழங்ககள் அதிகம் கொடுப்பதும் நல்லது.அதை பழங்களாகவே கொடுக்க வேண்டும். ஐஸ் கலந்து ஜூஸாக கொடுக்க வேண்டாம்.

காலை 11 மணியில் இருந்து மதியம் 4 மணி வரை குழந்தைகளை வெளியில் விளையாட அனுமதிக்காமல் இருப்பதே நல்லது. சூரியனின் நேரடிப் பாதிப்பு இந்நேரத்தில் அதிகம் என்பதால் தவிர்க்கலாம்.அசவ உணவுகள் அதிகம் ஜீரண பிரச்னையை ஏற்படுத்திவிடும். முட்டை,பால் ஆகி ய உணவு வகைகளைக் கொடுக்கலாம்.ஃபாஸ்ட் புட், ஃப்ரைடு புட் ஆகியவற்றை கோடை காலத்தில் தவிர்க்க வேண்டும்.

கோடையில் மஞ்சள் காமாலை நோய் மற்றும் அம்மை நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே, மோருடன் கீழாநெல்லியை அரைத்து, கலந்து, காலை வேளையில், வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நல்லது. இதேபோல், மூலநோய் உள்ளவர்களும் கோடை காலத்தில் மிகவும் சிரமப்படுவர். இவர்கள் மாங்காயில் உள்ள பருப்பை அரைத்து, மோரில் கலந்து சாப்பிடலாம். அத்திப்பழம் நிறைய சாப்பிடுவது நல்ல பலனளிக்கும்.

வெயில் காலம்தானே என்று நினைத்து, குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம், ஃப்ரிட்ஜ் தண்ணீர் அதிகம் கொடுப்பார்ககள்.இதனால் குழந்தைகளுக்குத் தொண்டையில் தொற்று ஏற்பட்டு பாதிப்பு வரலாம். சில குழந்தைகளுக்கு தொண்டையில் ஏற்படும் பாதிப்பு இதய நோயில் கொண்டு போய் விட்டுவிடும். அதனால் மருத்துவரின் ஆலோசனை மிக அவசியம்.

 இடையில் பசிக்கும் நேரத்திலோ, களைப்பாக உள்ளபோதோ குளிர்பானங்களை அறவே தவிர்த்து மோர் அருந்தலாம். மதிய வேளையில் மோரில் நன்கு நீர் கலந்து அதனுடன் சீரகம், கொத்தமல்லி சேர்த்து குடிப்பது நல்லது. அதிகளவு நீர் அருந்துவது நல்லது. ஒரேடியாக அதிகமாக அருந்தாமல் இடைவெளிவிட்டு அடிக்கடி அருந்துவது நல்லது.

முள்ளங்கி, காரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், வாழைத் தண்டு, வெள்ளைப் பூசணி, சவ்சவ், புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற நீர்காய்களை சாலடாக மிளகுத் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிடலாம்.

கீரை மற்றும் பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். மதிய உணவில் அதிக காரம், புளி சேர்க்காமல் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. முளைகட்டிய நவதானியங்களை சாப்பிடலாம். நார்ச்சத்து அதிகமுள்ள, வாழைத்தண்டு, வெண்டைக்காய், பீன்ஸ், அவரை, கீரைத் தண்டு போன்றவற்றை கூட்டு, பொரியலாக தினமும் மதிய உணவுடன் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தர்ப்பூசணியில் நீர்ச்சத்தும் சர்க்கரைச்சத்தும் சரிவிகிதத்தில் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் வெள்ளரி சாப்பிடுவது நல்லது’’  சர்க்கரை நோயாளிகள் அதிக இனிப்புள்ள பழங்களை தவிர்த்து ஆப்பிள், பப்பாளி, நாவல்பழம், அத்திப்பழம், போன்ற பழங்களை சாப்பிட வேண்டும். அல்லது சர்க்கரையைத் தவிர்த்து ஜூஸ் செய்து அருந்தலாம்.

கோடை காலங்களில் கனரக ஆலைகளில், வாகனங்களில் பணிபுரிவோருக்கு உடல் அதிக உஷ்ணம் அடைந்து, அநேக பிரச்னைகள் ஏற்படும். இதற்கு சீரகம், வெந்தயம் இரண்டையும் சேர்த்து, பொடி செய்து வைத்துக் கொண்டு, மோரில் கலந்து சாப்பிட்டால், உடல் குளிர்ச்சியடையும். காலையில் கம்பு, சோளம், ராகி கூழ் அல்லது கோதுமை, பார்லி ஆகிய கஞ்சி வகைகளை எடுத்துக் கொள்வது ஆரோக்கியமானது

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இந்த வயசுலயே கருவளையமா? முகத்தோட அழகையும் வாயசையும் குறைக்குதா?

tamiltips

எத்தியோப்பிய விமான விபத்து! 2 நிமிடம் லேட்டாக வந்த நபர் வாழ்வில் நிகழ்ந்த அதிசயம்!

tamiltips

குழந்தைக்கு மாதவிலக்கு

tamiltips

இளமை தரும் பச்சைப் பட்டாணி !! உண்மை விவரங்கள் இதோ..

tamiltips

உயிருக்கு போராடிய 4 வயது சிறுவன்! அள்ளிக் கொடுத்த மக்கள்! ஒரே நாளில் நிகழ்ந்த அதிசயம்!

tamiltips

மீண்டும் கிடுகிடுவென உயர்ந்த தங்க விலை!!! கடும் அதிர்ச்சியில் மக்கள்

tamiltips