தேங்காயில் மாவுச்சத்து, புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருட்களும் வைட்டமின் சி, நார்ச்சத்து போன்ற உடல் இயக்கத்துக்கு அவசியமான ஏராளமான சத்துக்களும் இருக்கின்றன.
• தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் போன்றவை வைரஸ் மற்றும் பாக்டீரியா நுண்கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் கொண்டவை.
• அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்ணுக்கு தேங்காய்ப்பால் மிகவும் உகந்தது.
• உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் நிரம்பியிருப்பதால், உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு தேங்காய் உதவுகிறது.
• தேங்காயில் இருக்கும் வைட்டமின் இ முதுமையைத் தடுப்பதற்கு உதவுகிறது. மேலும் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டையும் தேங்காய் ஊக்குவிக்கிறது.
தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு ஈடாக இளநீரில் இருக்கும் புரதச்சத்தை சொல்ல முடியும். அதனால் சித்த மருத்துவத்தில் தேங்காய்க்கு தனியிடம் உண்டு.