Tamil Tips
கர்ப்ப அறிகுறிகள் கர்ப்பம் பெற்றோர்

வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்வது எப்படி?!

திருமணமான பல பெண்கள் தாங்கள் கருவுற்றிருக்கிறோமா என்று சரியாகத் தெரியாமல் அவ்வப்போது குழப்பத்திலேயே இருப்பார்கள். ஒரு சில குறிப்பிட்ட நாட்கள் வரும் வரை, அவர்களுக்கு இந்த குழப்பம் இருக்கும். இதனை உறுதிப் படுத்த பல வகையில் வீட்டில் கர்ப்ப பரிசோதனைகள் (Karpa parisothanai) செய்து பார்க்கலாம்.

கர்ப்ப பரிசோதனை ஒரு பெண் கருதரித்திரிகின்றாளா என்பதை உடனடியாக உறுதி செய்ய உதவும். இதற்குப் பழமையான முறைகள் முதல் நவீன முறைகள் வரை பல உள்ளன. மேலும் பெரும்பாலான பரிசோதனைகள் எளிதானதாகவும் இருக்கும். வீட்டிலிருந்த படியே பரிசோதனை செய்து கொள்ளும் போது, தேவையற்ற செலவுகள் மற்றும் நேர விரயங்களைத் தவிர்க்கலாம். மேலும், உங்களது கர்ப்பம் உறுதியானால் மட்டுமே நீங்கள் மருத்துவரை அணுகலாம், மேலும் உங்கள் கர்ப்பத்தைப் பற்றி பிறரிடமும் பகிரலாம். அதனால், எப்போதும் நீங்கள் பரிசோதனை செய்து உறுதிப்படுத்திக் கொள்வது மிக முக்கியம்.

வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்து பார்க்க நீங்கள் விரும்புகின்றீர்களா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். இந்த பதிவு உங்களுக்கானது;

கர்ப்பத்திற்கான முதன்மை அறிகுறிகள் என்ன?

நீங்கள் கருவுற்றிருப்பதை உறுதி செய்ய முதலில் சில அறிகுறிகள் உங்களுக்குள் தோன்றும். அவற்றை நீங்கள் கவனித்துப் பார்த்தாலே, ஓரளவிர்க்காயினும் நீங்கள் உறுதி செய்து விடலாம். பின்னர், பரிசோதனைகள் மூலம் கர்ப்பத்தை உறுதி செய்யலாம். இந்த வகையில், நீங்கள் கருவுற்றிருந்தாள், உங்களுக்கு ஏற்படும் சில அறிகுறிகள் இங்கே,

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகளில் சில உங்களுக்கு ஏற்பட்டிருந்தால், நீங்கள் ஓரளவிற்கு ஆயினும் உங்கள் கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ளலாம். எனினும் இவை சில சமயங்களில் வேறு சில நோய் ஏற்பட்டுள்ளதன் அறிகுறியாகக் கூட இருக்கலாம். அதனால் மேலும் சில சோதனைகள் மூலம் உங்கள் கர்ப்பத்தை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் எழுகின்றது.

Thirukkural

வீட்டில் செய்யும் கர்ப்ப பரிசோதனை முற்றிலும் நம்பகத்தன்மை உடையதா?

இது எதார்த்தமாக அனைவருக்கும் ஏற்படும் ஒரு கேள்வியாகும். பல பெண்களுக்கு இந்த சந்தேகம் ஏற்படுகின்றது. இதை நிரூபிக்க எந்த சான்றும் இல்லை என்றாலும், நமது தாய் மற்றும் பாட்டி என்று முன்னோர்கள் தாங்கள் கர்ப்பம் அடைந்த காலத்தில் வீட்டில் சில பரிசோதனைகளைச் செய்தும், கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட அறிகுறிகளை வைத்தும், தங்களது கர்ப்பத்தை உறுதி செய்து கொண்டனர் என்பது உண்மை.

எனினும், இன்றைய காலகட்டத்தில் அத்தகைய பழமையான பரிசோதனை முறைகள் பல நடைமுறையில் இல்லை என்றாலும், சில எளிதான வீட்டிலேயே செய்யக் கூடிய நவீன மருத்துவ பரிசோதனை முறைகள் வந்து விட்டன. மேலும் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள ஏற்படும் செலவு மிகவும் சிறியதே ஆகும். அதனால் இன்றுபெரும்பாலான பெண்கள் இந்தப் பரிசோதனை முறையைத் தேர்வு செய்து வீட்டிலிருந்தே பரிசோதனைகளைச் செய்து உறுதிப்படுத்திய பின் மருத்துவரை அணுகுகின்றனர்.

இந்த வீட்டுப் பரிசோதனை உறுதியான பிறகு, அடுத்த கட்டமாக தங்களது கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ள, பரிசோதனை கூடத்திற்குச் செல்கின்றனர். அங்கே இரத்த பரிசோதனை மற்றும் சிறுநீர் பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டு, கருதரித்திருப்பதை உறுதி செய்து கொள்கின்றனர். இது அவர்களுக்கு ஒரு நல்ல உறுதியான மற்றும் தெளிவான செய்தியைத் தருவதோடு, அவர்களின் எதிர்பார்ப்புகளும் பூர்த்தியாகி விடுகின்றது.

வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்யும் போது கவனிக்க வேண்டிய சில விசயங்கள் என்ன?

நீங்கள் வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்ய நினைத்தால், அதற்கு சில விசயங்களை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். அவை பின் வருமாறு;

  • கர்ப்ப பரிசோதனை அதிக அளவு உறுதி செய்து வெற்றி பெற, காலை எழுந்தவுடன் உங்களுக்கு வரும் முதல் சிறுநீரில் பரிசோதனை செய்ய வேண்டும். இது உங்களுக்குத் துல்லியமான தகவல்களைத் தரும்.
  • சிறுநீர் தொற்று பிரச்சனைக்கு உடனடி தீர்வு!
  • ஒருவேளை நீங்கள் பயன்படுத்தும் கர்ப்ப பரிசோதனை கருவி பழுதடைந்து இருந்தாலோ அல்லது சேதம் அடைந்திருந்தாலோ, சரியான தகவலைத் தராது.
  • ஒரு முறைக்கு இரண்டு அல்லது மூன்று முறை, அதாவது இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூட நீங்கள் இந்த பரிசோதனையைச் செய்து உறுதிப் படுத்திக் கொள்ளலாம். சில சமயங்களில், இதில் மாற்றமும் ஏற்படலாம். அதனால் அவசரப்படாமல் நிதானமாக முடிவுக்கு வர முடியும்.
  • மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுச் சரியான ஒரு வீட்டுப் பரிசோதனை முறையை நீங்கள் தேர்வு செய்யலாம். அப்படிச் செய்யும் போது உங்களுக்கு பெரும்பாலும் சரியான தகவலே கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • மேலும் நீங்கள் பயன்படுத்தும் கருவியை எப்படிச் சரியாகப் பயன்படுத்துவது என்பதைப் பற்றி அறிய அதில் இருக்கும் குறிப்பைப் படித்துத் தெரிந்து கொண்டு பின் பயன் படுத்துவது நல்லது
  • உங்களது முதல் பரிசோதனை நெகடிவாக வந்து விட்டால், பின் ஒரு சில நாட்கள் கழித்து மீண்டும் முயற்சி செய்து பார்க்கவும்.
  • சோதனைப் பட்டை (டெஸ்ட் ஸ்ட்ரிப்) என்பது பிரபலமான வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்து கொள்ள உதவும் கருவியாகும். இது எளிதாக அருகில் இருக்கும் மருந்து கடைகளில் கிடைக்கும்.

படிக்க: எந்த கருத்தடையில் பாதுகாப்பு அதிகம்?

வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு செய்து பார்க்க சில கர்ப்ப பரிசோதனை முறைகள்

மேலே கூறப்பட்டுள்ளது போல நீங்கள் நவீன பரிசோதனை கருவிகளைப் பயன் படுத்தி உங்கள் கர்ப்பத்தை உறுதி செய்து கொள்வதோடு அல்லாமல் வேறு சில எளிய பரிசோதனை முறைகளும் உள்ளன. நீங்கள் தெரிந்து கொள்வதற்காக, இங்கே அவற்றில் சில உங்களுக்காக,

ஷாம்பூ

காலை எழுந்தவுடன் சிறிது முதலில் வரும் சிறுநீரை எடுத்துக் கொள்ளவும். பின் சிறிது ஷாம்பூவை எடுத்துக் கொண்டு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும். இப்போது இந்த ஷாம்பூ கலவையில் சிறிது சிறுநீரைச் சேர்க்கவும். சில நிமிடங்கள் கவனிக்கவும். அதில் நொரை ஏற்பட்டால், உங்கள் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது. இது எப்படி சாத்தியம் என்றால், உங்கள் உடலில் இருக்கும் HCG ஹோர்மோன் ஷம்பூவுடன் கலக்கும் போது செயல் படத் தொடங்கும்.

சர்க்கரை

ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை எடுத்துக் கொள்ளவும். இதில் சிறிது சிறுநீரைச் சேர்க்கவும். சர்க்கரை விரைவில் கரைந்துவிட்டால், பரிசோதனை நெகடிவ் என்று அர்த்தம். ஆனால் இறுகி வேறு மாதிரி ஆனால், கர்ப்பம் உறுதி செய்யப் பட்டது என்று அர்த்தம். இது ஏனென்றால், HCG ஹோர்மோன் சர்க்கரை கரைய விடாது.

பற்பசை

நீங்கள் அன்றாடம் பயம்படுத்தும் ஏதாவது ஒரு பற்பசையில் இரண்டு தேக்கரண்டி எடுத்துக் கொள்ளவும். இதில் உங்கள் சிறுநீரைச் சேர்க்கவும். பற்பசை நீல நிறமாக மாறினால், உங்கள் கர்ப்பம் உறுதி செய்யப் பட்டது என்று அர்த்தம். ஆனால் வெள்ளை நிறத்தில் இருக்கும் பற்பசை உங்களுக்கு எளிதாக நிற மாற்றத்தைக் கண்டறியப் பயன் படும்.

சோப்பு

சிறிது சிறுநீரை எடுத்துக் கொண்டு ஒரு சிறிய சோப்புடன் சேர்த்துக் கலக்கவும். அதில் நொரை அதிகம் ஏற்பட்டால், உங்கள் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது என்று அர்த்தம். HCG ஹோர்மோன் சோப்புடன் சேரும் போது அதிக நொரையை ஏற்படுத்துகின்றது.

வினிகர்

ஒரு கப்பில் வினிகர் எடுத்துக் கொண்டு அதனுடன் அரை காப் சிறுநீரைச் சேர்த்து 5 நிமிடம் வரை காத்திருக்கவும். இதில் நிறம் மாறினால், உங்கள் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது என்று அர்த்தம். HCG ஹோர்மோன் வினிகருடன் சேரும் போது சில நிற மாற்றத்தை ஏற்படுத்தும்.

பேகிங் சோடா

சிறிது சிறுநீரை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் 2 தேக்கரண்டி பேகிங் சோடா சேர்க்கவும். இதில் நன்கு நொரை ஏற்பட்டால், உங்கள் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது என்று அர்த்தம். HCG ஹோர்மோன் பேகிங் சோடாவுடன் சேரும்போது அதிக நொரையை உண்டாக்கும்.

இந்த வீட்டு பரிசோதனைகள் நிச்சயம் உங்களுக்குப் பலன் தரக்கூடியதாக இருக்கும் என்று நம்புகின்றோம். இதனை நீங்களும் வீட்டில் முயற்சி செய்து பார்த்து உங்கள் கர்ப்பத்தை உறுதி செய்து உங்கள் வீட்டிற்கு வரவிருக்கும் புது வரவை எண்ணி மகிழ்ச்சி அடையுங்கள்.

இதையும் படிங்க: செக்ஸ் வேண்டும்! கர்ப்பம் வேண்டாம்! என்ன செய்ய?

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உணவுகள் மூலம் தாய்ப்பாலை அதிகமாக சுரக்க வைப்பது எப்படி?

tamiltips

குழந்தை அழுகைக்கான காரணங்கள்… அழுகையை நிறுத்துவது எப்படி?

tamiltips

உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய 10 பண்புகள்

tamiltips

5 பொருட்கள் மூலம் சிம்பிள் ஹோம்மேட் ஹார்லிக்ஸ் பவுடர் ரெசிபி…

tamiltips

பிறந்த குழந்தையின் தலை உருண்டை வடிவம் பெற சில குறிப்புகள்

tamiltips

குழந்தைகளின் முதல் 1000 நாட்கள்… மறக்கவே கூடாத 21 விதிமுறைகள்..!

tamiltips