குழந்தைகளுக்கு கெமிக்கல்கள் இல்லாத, மிகவும் குறைவான கெமிக்கல் உடைய ஷாம்புதான் ஏற்றது. ஏன் பெரியவர்களுக்குகூட அப்படிதானே. வீட்டிலே தயாரிக்கும் ஷாம்புவில் அதிக கெமிக்கல்கள் இருக்க வாய்ப்பில்லை. அதனால் நம் குழந்தைகளுக்கும் நமக்கும் பாதுகாப்பையே தரும். ஷாம்பு என்றவுடன் அதையெல்லாம் வீட்டில் செய்ய முடியுமா (Homemade Baby Shampoo) என நினைக்க வேண்டாம்.
வீட்டிலே 3-5 நிமிடங்களுக்குள்ளே ஷாம்பு தயாரிக்க முடியும். இந்த ஹோம்மேட் பேபி ஷாம்பு (Homemade Baby Shampoo) தயாரிக்க செலவும் மிகவும் குறைவுதான். நல்ல தரமான ஷாம்புவாக இருக்கும். அதேசமயம் கெமிக்கல் மிக மிக குறைவு. இந்த ஹோம்மேட் பேபி ஷாம்புவை எப்படி செய்வது எனப் பார்க்கலாமா…
ஸ்வீட் ஆரஞ்ச் ஹோம்மேட் பேபி ஷாம்பு
தேவையானவை
Image Source: Ideon.co.uk
- ஃபோமிங் பம்ப் (Foaming Pump) – 1
- வாசனை இல்லாத காஸ்டைல் லிக்விட் சோப் (Castile liquid soap) – 50 ml (காஸ்மெட்டிக்ஸ் கடைகளில் கிடைக்கும்)
- விட்டமின் இ எண்ணெய் – 1 மாத்திரை
- தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
- லெமன் அல்லது ஸ்வீட் ஆரஞ்சு அல்லது லாவண்டர் எசன்ஷியல் எண்ணெய் – 5 துளிகள்
Image Source: singaporesoap.com
இதையும் படிக்க: குழந்தைகளுக்கான சத்துமாவு – ஹோம்மேட் செர்லாக் தயாரிப்பது எப்படி?
செய்முறை
- மூடியைத் திறந்து ஃபோமிங் பம்பில், வாசனை இல்லாத காஸ்டைல் லிக்விட் சோப்பை ஊற்றிக் கொள்ளுங்கள்.
- மேலும் அதில் சுத்தமான, தேவையான தண்ணீரை (filtered water) ஊற்றிக் கொள்ளுங்கள்.
- விட்டமின் இ எண்ணெய் மாத்திரையை ஓட்டையிட்டு அந்த எண்ணெயை ஃபோமிங் பம்பில் சேர்க்கவும்.
- இறுதியாக, லெமன் எசன்ஷியல் எண்ணெயை கலந்து, மூடி போட்டு மூடிவிட்டு நன்கு குலுக்கவும்.
- அவ்வளவுதான் பேபி ஷாம்பூ ரெடி…
- அதிக கெமிக்கல்களே இல்லாத, பாதுகாப்பான, குறைந்த செலவில் செய்ய கூடிய பேபி ஷாம்பு தயார் ஆகிவிட்டது.
Image Source: goodhousekeeping.com
இதையும் படிக்க: குழந்தைகளுக்கான ஹோம்மேட் நட்ஸ் பவுடர் செய்வது எப்படி?
யார் பயன்படுத்தலாம்?
- பிறந்த குழந்தைகள், பெரிய குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்றது.
அவகேடோ ஹோம்மேட் பேபி ஷாம்பு
தேவையானவை
- லிக்விட் டிஸ்பென்ஸர் பாட்டில் – 1
- காஸ்டைல் லிக்விட் சோப் – 60 ml
- லாவண்டர் எண்ணெய் – 8 துளிகள்
- அவகேடோ எண்ணெய் – 1 டீஸ்பூன்
- ஆலுவேரா ஜெல் – 1 டேபிள்ஸ்பூன்
Image Source : mnm.com
இதையும் படிக்க: குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் 15 உணவுகள்
செய்முறை
- காலியான லிக்விட் டிஸ்பென்ஸர் பாட்டில் திறந்து, அதில் தேவையான, சுத்தமான தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள்.
- அதில் காஸ்டைல் லிக்விட் சோப் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- மேலும், லாவண்டர் எண்ணெய், அவகேடோ எண்ணெய், ஆலுவேரா ஜெல் ஆகியவற்றை சேர்த்து ஸ்பூனால் நன்கு கலக்க வேண்டும்.
- கலக்கிய பிறகு லிக்விட் டிஸ்பென்ஸரை மூடி, நன்கு குலுக்கவும்.
- அவ்வளவுதான் அவகேடோ ஹோம்மேட் பேபி ஷாம்பு தயார்…
யார் பயன்படுத்தலாம்?
- பிறந்த குழந்தைகள், பெரிய குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்றது.
Image Source: hairlossrevolution.com
எப்படி பயன்படுத்த வேண்டும்?
- ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும்போது நன்றாக குலுக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும்.
- தேவையான அளவு ஷாம்புவை எடுத்து, நன்றாகத் தேய்த்து தலைமுடியில் நன்கு மசாஜ் செய்துவிட்டு தண்ணீரால் கழுவி விடலாம்.
- கெமிக்கல்கள் மிகவும் குறைவு என்பதால் முடி, சருமம், ஸ்கால்ப் ஆகியவை பாதிக்காது.
- அதேபோல, முடிக்குத் தேவையான எண்ணெய் பசையும் எசன்ஷியல் எண்ணெய், விட்டமின் இ எண்ணெய், தேங்காய் எண்ணெய், அவகேடோ எண்ணெய், ஆலுவேரா ஹெல் சேர்ப்பதால் கிடைக்கும்.
- முடியும் உதிர்தல் பிரச்னை இருக்காது.
- முடி வறட்சியும் ஆகாது.
- நாள்தோறும்கூட இந்த ஷாம்புவை பயன்படுத்தலாம். முடி நன்றாக இருக்கும்.
இதையும் படிக்க: குழந்தைகளுக்கான குளியல் பொடி தயாரிப்பது எப்படி?