சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் மரத்துப்போகும் தன்மை, கண் புரை வளருதல் ஆகியவற்றை தடுக்கிறது. கண் புரை வந்தாலும் நீக்குகிறது. திராட்சை விதைகள் இரத்த நாளங்கள் மற்றும் தமனிகளில் பாதிப்பு ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதர இதய பிரச்சனைகளின் தாக்கமும் குறையும். மேலும் திராட்சை விதைகளில் உள்ள உட்பொருட்கள், உடலில் வைட்டமின் சியின் செயல்பாட்டை தூண்டிவிட்டு, கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தும் மற்றும் இரத்த நாளங்களில் உள்ள பாதிப்பை சரிசெய்யும் செயல்பாட்டை வேகப்படுத்தும்.
திராட்சை விதைகளில் உள்ள அதிகளவிலான ப்ளேவோனாய்டுகள், உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலை சமநிலையில் பராமரிக்கும். இதன் விளைவாக தமனிகள் மற்றும் இரத்த நாளங்களில் கொழுப்புக்கள் படிந்து ஏற்படும் அபாயம் குறைந்து, மாரடைப்பு, பக்கவாதம், கரோனரி இதய நோய்களின் அபாயமும் குறையும்.
திராட்சை விதைகளில் உள்ள ப்ளேவோனாய்டுகள், உடலில் வைட்டமின் சியைத் தூண்டிவிடுவதோடு, திராட்சை விதைகளில் மிதமான அளவில் வைட்டமின் ஈ சத்தும் நிரம்பியுள்ளது. வைட்டமின் ஈ நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வைட்டமின் சி-யை விட 30-50 மடங்கு சக்தி வாய்ந்ததாகும்.