மார்ச் மாதம் தொடங்கியதிலிருந்தே தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாகத் தங்கம் விலை குறைக்கப்பட்டு வருவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மார்ச் 10 ஆம் தேதி அதிர்ச்சியடையும் அளவுக்கு ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 35,000 ஐ தாண்டியது. கடந்த மூன்று தினங்களில் தூய தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 1,632/- குறைந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி தூய தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ. 4,365 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 34,920 ஆகவும், 22 கேரட் தங்கத்தின் விலையானது 1 கிராமுக்கு ரூ.4,157/- ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 33,256 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,096/- குறைந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,020/- ஆகவும், ஒரு சவரன் விலை ரூ. 32,160/- ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போல் 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,152/- குறைந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,221/- ஆகவும், ஒரு சவரன் விலை ரூ. 33,768/- ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று சென்னையில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம் கீழ்வருமாறு:
13.3.2020 – 1 grm – Rs. 4,221/-, 8 grm – 33, 768/- ( 24 கேரட்)
13.3.2020 – 1 grm – Rs. 4,020/-, 8 grm – 32,160/- (22 கேரட்)
வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ. 45.90 ஆகவும், கிலோவுக்கு ரூ.45,900/- ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது..