பொதுவாகவே பெண்கள் சிலருக்கு சரியான அளவில் மார்பகங்கள் இருக்கக்கூடும். ஆனால் ஒரு சிலருக்கு அது சிறியதாக காணப்படும். அவ்வாறு இருக்கும் பெண்கள் முறையான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் சரியான அளவை பெறலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. மார்பகங்களை பெரிதாக்க தேவைப்படும் உணவுப் பொருட்களைப் பற்றி தற்போது காணலாம்.
பெண்களின் மார்பகங்களின் அளவை அதிகரிப்பதில் ஈஸ்ட்ரோஜன் முக்கிய பங்கு வகிக்கிறது. பெண்களில் உடலில் சுரக்கும் இந்த ஈஸ்ட்ரோஜனின் அளவை அதிகரிப்பதன் மூலமாக மார்பகங்களின் அளவையும் அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. பெண்களின் குழந்தைப் பருவம் முதலே இந்த மார்பகங்கள் வளர ஆரம்பிக்கும். அதிலும் அவர்கள் பருவம் அடைந்தவுடன் அதன் வளர்ச்சி அதிகரிக்க ஆரம்பிக்கும். கருப்பையிலிருந்து இந்த ஹார்மோன் தாமாக வெளிப்பட்டு பெண்களின் மார்பகங்களின் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. ஒருவேளை மார்பகங்கள் வளர்ச்சிக்காக மருத்துவரை அணுகினால் அவர்கள் கருத்தடை மாத்திரைகளை பரிந்துரை செய்வது வழக்கம். ஆனால் இந்த மாத்திரைகளும் பக்க விளைவுகளை விளைவிக்கக் கூடியதாக அமையும். அதற்காகத்தான் முறையான உணவு பழக்கங்களின் மூலமாக எந்த வித பக்கவிளைவுகளும் இன்றி நினைத்த அளவை எளிதில் அடையலாம்.
உலர்ந்த பழங்கள் மற்றும் பருப்பு வகைகளை உட்கொள்வதன் மூலமாக பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்கலாம். பாதாம், வால்நட்ஸ் , பிஸ்தா , வேர்க்கடலை ஆகியவற்றை உணவாக எடுத்துக் கொள்வதன் மூலமாக இந்த ஹார்மோனின் சுரப்பை அதிகரிக்க இயலும். அதுமட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான தாது உப்புக்களையும் இது அளிக்கும் தன்மை கொண்டது. இதேபோல் பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட உணவு பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலமாக அது உடலின் மார்பக வளர்ச்சியை அதிகரிக்கிறது. மேலும் பாலை எடுத்துக் கொள்வதன் மூலமாக உடலில் கால்சியம் சத்து அதிகரித்து எலும்புகளும் வலுப்பெறும். அதிலும் குறிப்பாக பெண்கள் பசும்பாலை எடுத்துக் கொள்வதன் மூலமாக அதில் இருக்கும் கொழுப்பு சத்துக்கள் அதிக அளவில் ஈஸ்ட்ரோஜென் சுரப்பை அதிகரித்து பெண்களின் மார்பக வளர்ச்சியை அதிகரிக்கும்.
பழ வகைகளை பொறுத்தவரையில் பப்பாளிப்பழம் முதன்மை வகிக்கிறது. பப்பாளியை பழமாக உண்பதை விட காயாகவோ அல்லது செங்காயாகவோ சமைத்து சாப்பிடுவதன் மூலமாகவும் இந்த ஹார்மோனின் சுரப்பு அதிகரிக்கிறது. அதிலும் பப்பாளியில் பாப்பைன் என்ற பொருள் அதிகமாக காணப்படுவதால் அதிகமாக உட்கொள்ளும் பொழுது கருச்சிதைவை ஏற்படுத்தக்கூடும். ஆகையால் முறையாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று இதனை எடுத்துக் கொள்வது நல்லது. இதே போன்று கடல் சார்ந்த உணவுகளான இறால், நண்டு, சிப்பி உணவு வகைகளை உட்கொள்வதன் மூலமாகவும் ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகரிக்கும். மேலும் இது பாலியல் உணர்வுகளை தூண்டும் வல்லமையை கொண்டது. இதேபோல் பிளாக்பெர்ரி ப்ளூபெர்ரி போன்ற பெர்ரி வகைகளை சேர்ந்த பழங்களை உண்பதன் மூலமாகவும் மார்பகங்களின் அளவை அதிகரிக்கலாம்.
இதேபோல் சோயா பால் மற்றும் அதிலிருந்து தயாரிக்கும் உணவுப் பொருட்களை உண்பதன் மூலம் ஆகும் ஈஸ்ட்ரோஜன் அளவு உடலில் அதிகரிக்க ஆரம்பிக்கும். அன்றாடம் சமையலில் சேர்க்கப்படும் வெந்தயத்தையும் முளைகட்டி உண்பதன் மூலமாக ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்கும். இதேபோன்று எள் விதை, ஆளி விதை ஆகியவற்றையும் பயன்படுத்தி பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்து மார்பகங்களின் அளவையும் எளிமையான முறையில் அதிகரித்துக்கொள்ளலாம். இத்தகைய பொருட்களை நாம் பயன்படுத்துவதன் மூலமாக எந்த ஒரு பக்கவிளைவும் இன்றி மார்பகங்களின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.