Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பெண்கள் கவனத்திற்கு! பேஸ்புக் ஃபேக் ஐடியை கண்டுபிடிப்பது இப்படித்தான்!

சமீப நாட்களாக, தமிழகம் மட்டுமின்றி, இநதிய அளவில், சமூக ஊடகங்கள் வழியாக நடைபெறும் குற்ற சம்பவங்கள் அதிரித்து வருகின்றன. குறிப்பாக, ஃபேக் ஐடியை தொடங்கி, அதை வைத்து இளம்பெண்கள், குடும்பப் பெண்களை ஏமாற்றி, பணம் பறிப்பதையும், பாலியல் பலாத்காரம் செய்வதையும் பலர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இதற்கு சமீபத்தில் அரங்கேறிய பொள்ளாச்சி பாலியல் கொடூரம் ஒரு உதாரணமாகும். 

இந்நிலையில், சமூக ஊடகங்களில் ஒருவர் ஃபேக் ஐடி பயன்படுத்தி வருவதை கண்டுபிடிப்பது பற்றி டிஜிட்டல் செக்யூரிட்டி ஆஃப் இந்தியாவின் சேர்மன் வி.ராஜேந்திரன் சில ஆலோசனைகள் வழங்கியுள்ளார். அதன்படி,  ”சமூக வலைதளங்கள் அல்லது இணையதளத்தில் நம் அந்தரங்கம் பற்றி பகிர்ந்த தகவல்களை நாம் அழித்துவிட்டாலும், அது எங்கேனும் ஒரு இடத்தில் சுற்றிக்கொண்டுதான் இருக்கும்.

இதை தடுக்க முடியாது. ஆனால், ஃபேக் ஐடிகளை தொழில்நுட்ப உதவியுடன் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். நீங்கள் சந்தேகப்படும் நபரின் தனிப்பட்ட விவரங்கள் அல்லது எழுத்து நடை, இது தவிர, ட்விட்டர், இன்ஸ்டாகிராம், கூகுள், லிங்க்டு இன் மற்றும்  ட்ரூ காலர் போன்றவற்றின் மூலமாக, அந்த நபர் உண்மையானவரா என்பதை கிராஸ் செக் செய்து  கண்டுபிடிக்கலாம்.

அவர் உண்மையான நபர் என்றால், மேற்கண்ட அனைத்திலும் ஒரேவித தகவல்கள்தான் இருக்கும். இல்லை எனில், அவர் சந்தேகமான ஆள்தான். அவரிடம் உஷாராக இருப்பது நல்லது,” எனக் குறிப்பிடுகிறார். எனவே பெண்கள் இப்படி உஷாராக இருப்பதன் மூலம் எதிர்பாராத சம்பவங்களை தவிர்க்கலாம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

வலுவான ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க என்ன செய்யனும் தெரியுமா?

tamiltips

கடைகளில் விற்கும் தீபாவளி லேகியம் சாப்பிடலாமா? யாரெல்லாம் தீபாவளி லேகியம் சாப்பிடக்கூடாது?

tamiltips

கேரட்டை அப்டியே கடிச்சு பச்சையா சாப்பிடுங்க! அவ்ளோ நன்மைகள் கிடைக்கும்!

tamiltips

குழந்தை பெற தயாராகும் பெண்கள் அவசியம் படிக்கவேண்டியவை!

tamiltips

மண் பானையில் சமைத்து சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்பது உண்மையா?

tamiltips

பிறந்த குழந்தைக்கு மார்பு வீக்கம்

tamiltips