Tamil Tips
குழந்தை சமையல் குறிப்புகள் பெற்றோர்

குழந்தைக்கு கொடுக்க வேண்டிய கால்சியம் சத்து நிறைந்த 15 உணவுகள்

குழந்தைகளுக்கு மிகவும் அவசியமான சத்து, கால்சியம். எலும்புகளின் வளர்ச்சிக்கும் பற்களின் வளர்ச்சிக்கும் மிகவும் அவசியமான சத்து இது.

இந்தச் சத்தை எந்தெந்த உணவுகளில் எவ்வளவு கிடைக்கும் எனத் தெரிந்து கொண்டால் குழந்தைகளுக்கு கொடுக்க உதவியாக இருக்கும்.

குழந்தைக்கு தேவையான கால்சியம் கிடைத்திட வழி செய்வது பெற்றோரின் கடமை.

அதிகமான கால்சியமோ மிகவும் குறைவான கால்சியமோ இல்லாமல் அளவான கால்சியம் பெற வேண்டியது அவசியம்.

குழந்தைக்கு ஏன் கால்சியம் முக்கியம்?

  • எலும்புகள், பற்கள் வளர்ச்சிக்கும், உறுதியாகுவதற்கும் கால்சியம் அவசியம்.
  • நரம்புகள், தசை வளர்ச்சிக்குத் தேவை.
  • ரத்த உறைய வைக்கவும் தேவை.
  • என்ஸைம்களை ஆக்டிவேட் செய்து உணவை எனர்ஜியாக மாற்ற கால்சியம் தேவை.
  • 99% கால்சியம் பற்களிலும் எலும்புகளிலும் தங்கி இருக்கும்.
  • ஒவ்வொரு குழந்தையும் வளர்ந்து கொண்டே வருவதால் அவர்களின் எலும்பு வளர்ச்சிக்கும் மற்ற வளர்ச்சிக்கும் கால்சியம் தேவைப்படுகிறது.
  • குழந்தையின் இதய செயல்பாட்டுக்கு உதவுகிறது. குழந்தை ரிலாக்ஸாக இருக்க உதவுகிறது.

குழந்தைக்கு தேவையான கால்சியம் அளவு என்ன? calcium rich foods for toddlers

Image Source : Credit readersdigest.ca

Thirukkural

இதையும் படிக்க: குழந்தைக்கு எந்த மாதத்திலிருந்து சிறுதானியங்களைத் தரலாம்?

  • 0-6 மாதங்கள் – கால்சியத்தைப் பெற தாய்ப்பால் ஒன்றுமே போதுமானது.
  • 6-12 மாதங்கள் – தாய்ப்பால், சாதாரணமாக குழந்தைக்கு தரும் உணவுகள். கூடுதலாக எதுவும் தேவையில்லை.
  • 1-3 வயது – ஒரு நாளைக்கு 700 மி.கி
  • 4-8 வயது – ஒரு நாளைக்கு 1000 மி.கி
  • 9-18 வயது – ஒரு நாளைக்கு 1300 மி.கி

குழந்தைக்கு கால்சியம் குறைபாடு என்ன செய்யும்?

  • குழந்தையின் எலும்புகள் மிகவும் பலவீனமாக மாறிவிடும்.
  • கால்சியம் சத்து குறைவாக இருந்தால் ரிக்கெட்ஸ் (Rickets) எனும் பிரச்னை வந்துவிடும். எலும்புகள் எளிதில் உடையக்கூடும் என்பதே இந்தப் பிரச்னை.
  • தளர்வான, பலவீனமாக கால் எலும்புகள் இருப்பின் குழந்தையின் வளர்ச்சிக்கே பாதிப்பு வந்துவிடும்.

கால்சியம் அதிகமாக சேர்ந்துவிட்டால் என்ன பிரச்னை?

  • கால்சியம் சப்ளிமென்ட்ஸ்-ஐ, மருத்துவர் சொல்லாமல் எடுக்க கூடாது. உடலில் கால்சியம் அதிகரித்தால் சிறுநீரக கற்கள் உருவாகும்.
  • அதிகமாக பால் குடிக்கும் குழந்தைகளை, கொஞ்சம் கவனித்து, எடுத்து சொல்லி பால் குடிப்பதை அளவு படுத்த வேண்டும் அல்லது குறைக்க வேண்டும்.
  • பால் அதிகமாக குடிக்கும் குழந்தைக்கு, மலச்சிக்கல் ஏற்படும்.
  • பசியின்மை பிரச்னை வரும்.    milk for babies

Image Source : Credit choice.com.au

இதையும் படிக்க: குழந்தைகளின் எடையை அதிகரிக்க உதவும் 20 உணவுகள்…

குழந்தைகளுக்கு வெயில் நல்லது…

  • சிறு குழந்தைகள், கைக்குழந்தைகளை இளம் வெயிலில் 3-5 நிமிடங்கள் வரை காட்டுவது நல்லது.
  • அதுபோல 6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளையும் வெயிலில் சிறிது நேரம் விளையாட அனுமதிக்கலாம். 5 – 10 நிமிடங்கள் போதுமானது.
  • 1 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை காலை, மாலை வெயிலில் 15 நிமிடங்கள் விளையாட விடலாம்.
  • 2வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை காலை, மாலை என 20 நிமிடம் விளையாட அனுமதியுங்கள்.
  • இளம் வெயிலில் விளையாடுவது நல்லது. உச்சி வெயிலில் விளையாட அனுமதிக்க கூடாது.
  • வெயிலில் விளையாடுகையில் சூரியனிடமிருந்து விட்டமின் டி பெற முடியும்.
  • இந்த விட்டமின் டி குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் முக்கியமான சத்து.

கால்சியம் நிறைந்த உணவுகள்

இந்த கால்சியம் சத்து எந்தெந்த உணவுகளில் எவ்வளவு இருக்கிறது எனப் பார்ப்போமா…

#1.  100 கிராம் பால் (Milk) – 118 மி.கி கால்சியம்

#2. 100 கிராம் எள் (Sesame Seeds) – 1160 மி.கி கால்சியம்

#3. 1 டேபிள்ஸ்பூன் எள் (Sesame Seeds) – 88 மி.கி கால்சியம்

#4. 1 கப் கீரை (Greens) – 245 மி.கி கால்சியம்

#5. 1 கப் வெண்டைக்காய் (Lady’s finger) -123 மி.கி கால்சியம் broccoli for babies

Image Source : Credit bbcgoodfood.com

#6. 1 கப் புரோக்கோலி (Broccoli) – 62 மி.கி கால்சியம்

#7. 1/2 கப் உலர்அத்திப்பழம் (Figs) – 150 மி.கி கால்சியம்

#8. 1 கப் ஆரஞ்சு ஜூஸ் (Orange Juice) – 300 மி.கி கால்சியம்

#9. 1 கப் பாதாம் பால் – 451 மி.கி கால்சியம்

#10. 1 கப் வெள்ளை பீன்ஸ் (White beans) – 191 மி.கி கால்சியம்

#11. 1/2 கப் காராமணி (Black eyed peas) – 185 மி.கி கால்சியம்

#12. 1/4 கப் வறுத்த பாதாம் (Almonds) – 72 மி.கி கால்சியம்

#13. 100 கிராம் கொண்டைக்கடலை (Chick Peas) – 150 மி.கி கால்சியம்

#14. ½ கப் பிளெயின் யோகர்ட் (Yogurt) – 207 மி.கி

#15. 100 கிராம் கேழ்வரகு (Ragi) – 350 மி.கி கால்சியம்

இதையும் படிக்க: குழந்தைகள் முதல் தாய்மார்கள் வரை… தேவையான சத்துகள் என்னென்ன? எவ்வளவு?

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இருமல், வறட்டு இருமலை போக்கும் 16 வீட்டு வைத்தியம்

tamiltips

0-5 வயது + குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு… உடனடி பலனைத் தரும் வீட்டு வைத்தியம்

tamiltips

குழந்தைகளுக்குத் தீ காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

tamiltips

கோபம் வந்தால் இதையெல்லாம் செய்யுங்க… தாய்மார்களுக்கான டிப்ஸ்…

tamiltips

3 மற்றும் 4 மாத குழந்தைகளின் வளர்ச்சி… என்னென்ன பிரச்னைகள் வரலாம்?

tamiltips

குழந்தைகள், கர்ப்பிணிகள், பெண்கள்… எந்த கழிப்பறையை பயன்படுத்த வேண்டும்?

tamiltips