Tamil Tips
கருவுறுதல் கர்ப்ப கால நிலைகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் கர்ப்பமாவதற்கு திட்டமிடுதல் கர்ப்பம் குழந்தை குழந்தையின்மை பெண்கள் நலன்

வாயு தொல்லையைப் போக்க என்னென்ன வழிகள்? உடனடி தீர்வு…

நெஞ்சு எரிச்சல்… ஏதோ குத்துவது போன்ற உணர்வு… ஆசன வாயில் அடிக்கடி வாயு வெளியேறுவது… மாரடைத்தது போன்ற உணர்வு. எதையாவது சாப்பிட்டால் அப்படியே எரிச்சல் உண்டாகுவது. வயிற்றில் கட கடவென சத்தம் வருவது, லேசாக தலை சுற்றுவது சிலருக்கு இருக்கலாம். இப்படி பல அறிகுறிகளும் அசௌகரியமும் தாய்மார்களுக்கோ, கர்ப்பிணிகளுக்கோ, வீட்டு பெரியவர்களுக்கோ இருக்கும்.

இந்த வாயு தொல்லையை எப்படி விரட்டி அடிப்பது. 3 வயது குழந்தைகள் தொடர்ந்து ஏப்பம் விட்டுக்கொண்டே இருப்பார்கள். வாயு தொல்லையால் சில குழந்தைகளும் வயிறு வலிக்கிறது என அழுவார்கள்…

வாயு பிரச்னையை விரட்ட என்ன செய்யலாம்?

காலை மற்றும் மதிய உணவு, சமைத்த உணவுகளாக இருக்க வேண்டும்.

இரவு உணவு சமைக்காத பழ உணவுகளாக இருக்கலாம்.

காலை 11, மாலை 4 போன்ற சமயங்களில் பழ உணவுகளை சாப்பிட்டு பாருங்கள் வாயு தொல்லை உங்களிடம் நெருங்காது.

Thirukkural

காலை உணவில் தேங்காய்ப் பால் கலந்த உணவுகள் இருப்பது மிக மிக நல்லது. வாயுவை விரட்டிவிடும்.

இரவெல்லாம் தூங்கி காலை எழுந்து, உணவு சாப்பிடுகையில் உண்ணும் உணவு குளிர்ச்சியாக உணவாக இருப்பது அவசியம்.

அவல், தேங்காய்ப் பால், கைக்குத்தல் அரிசி, சிறுதானிய பொங்கல், வெண் பொங்கல் சாம்பார், இட்லி சாம்பார், நவதானிய கஞ்சி போன்ற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடலாம்.

குழந்தைகள், வளரும் குழந்தைகளுக்கு இட்லி, ஸ்டீம் தோசை, ஆப்பம் தேங்காய்ப்பால், புட்டு கொண்டைக்கடலை, வாழைப்பழம், வெல்லம் இப்படி கொடுக்கலாம்.

பெரியவர்கள் பொங்கல், சப்பாத்தி பருப்பு சப்ஜி, ஒரு கப் பழத்துண்டுகள், கேழ்வரகு உணவுகள், சிவப்பரிசி அவல், பப்பாளி சாலட் போன்ற 2-3 விதமான உணவுகளை சாப்பிட வேண்டும்.

ஆம், காலை உணவு ஒரு ராஜாவை போல சாப்பிடுங்கள். அதுதான் ஆரோக்கியம். சரியான முறையும்கூட.

gastric problems home remedies

Image source : chitras food book

என்னென்ன விதிமுறைகள்?

அதிக பசி வந்த பின்னும் சாப்பிடாமல் இருக்க கூடாது.

காலை உணவு 9 மணிக்குள் சாப்பிட்டு விடுவது மிக மிக முக்கியம்.

மிளகாய்க்கு பதிலாக மிளகு தூள் எங்கெல்லாம் பயன்படுத்த முடியுமோ அங்கெல்லாம் பயன்படுத்துங்கள்.

எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள்.

அதிக காரம் உடலுக்கு நல்லதல்ல. சிலர் சொல்வார்கள் இதெல்லாம் ஒரு காரமா, நான் எவ்ளோ காரம் சாப்பிடுவேன் தெரியுமா? இது பெருமை அல்ல… உங்களது குடல் பாதித்துகொண்டிருக்கிறது எனத் தெரியாமல், நீங்கள் சொல்வது அறியாமையின் வெளிப்பஅடு.

வேலை காரணமாகவோ மற்ற காரணத்துக்காகவோ காலை, மதியம், இரவு உணவைத் தவிர்க்க வேண்டாம்.

அடிக்கடி தலைவலி, வயிறு வலி, சளி என நீங்களே அடிக்கடி மருந்து சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

புகை பிடிக்கும் நபர்கள் அருகில் செல்ல கூடாது.

எப்போதும் டென்ஷன், படபடப்பு, பயம், அவசரம் போன்றவை இருந்துகொண்டே இருந்தால் நிச்சயம் செரிமான பிரச்னை வரும். வாயு பிரச்னையும் வரும்.

மனதை எப்போது அமைதியாக, சீராக வைத்திருக்கப் பழகுங்கள்.

இதையும் படிக்க: மூக்கடைப்பை சரிசெய்ய கூடிய எளிமையான வீட்டு வைத்திய டிப்ஸ்…

சில வீட்டு வைத்திய முறைகள் மற்றும் தீர்வுகள்… (Home Remedies for Gastric Problems in Tamil)

தினமும் 2 டம்ளர் தாளித்த மோர் அல்லது நீர் மோர் குடிக்கலாம்.

ஒரு கப் யோகர்ட் சாப்பிடுவது நல்லது.

நீங்கள் குடிக்கும் குடிநீரை சீரக குடிநீராக மாற்றிக் கொள்ளுங்கள். கேரளாவில் இதுபோன்ற பழக்கம்தான் தொடர்ந்து வருகிறது.

இட்லிக்கு கறுப்பு உளுந்து – தொலி நீக்கப்படாத உளுந்தை சேர்த்து அரைக்க பாருங்கள்.

இட்லிக்கு பிரண்டை துவையல் அரைத்து சாப்பிடலாம்.

இட்லிக்கு புதினா சட்னி சாப்பிடுவதும் வாயு தொல்லையை நீக்கும்.

வாரம் ஒரு முறை மட்டும் துவரம் பருப்பு சாம்பார், அதில் வெந்தயம், பூண்டு சேர்த்து சாப்பிடுங்கள்.

வாரத்துக்கு 3-4 முறை துவரம் பருப்பு சாம்பார் சாப்பிட கூடாது.

பாசிப்பருப்பு சாம்பார், பாசிப்பருப்பு கூட்டு, மசியல் எனச் சாப்பிடுங்கள். அதில் பூண்டு, சின்ன வெங்காயம், பெருங்காயம், சீரகம் இடம் பெற வேண்டியது அவசியம்.

வாரம் ஒரு முறை கொண்டைக்கடலை குழம்பு, குர்மா எனச் செய்து சாப்பிடலாம். இதில் மிளகு, சீரகம் அவசியம் சேர்க்கவும்.

பாசிப்பருப்பு கீரை அல்லது காய்கறிகளின் மசியல் நல்லது.

ரசம் உணவைக் கட்டாயமாக்குங்கள்.

சாதத்தில் போட்டு ரசத்தை சாப்பிடாவிட்டாலும் ஒரு டம்ளர் ரசமாவது குடிக்கலாம்.

ரசத்தில் மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம் இருப்பதால் வாயு தொல்லை நீங்கும்.

தக்காளி ரசம், பருப்பு ரசம், பைன் ஆப்பிள் ரசம், தக்காளி ரசம், தூதுவளை ரசம், வெற்றிலை ரசம், வேப்பப்பூ ரசம் என நிறைய வகை ரசம் உள்ளன.

தேங்காய்ப் பால் சேர்த்த உணவுகள் நல்லது. ஆனால், அதைக் காலை மற்றும் மதியம் மட்டுமே சாப்பிட வேண்டும்.

gastric problems home remedies

Image source : NDTV food

இரவில் 3 இட்லி, 3 தோசை, புட்டு, ஆப்பம், இடியாப்பம் என லேசான உணவுகளை சாப்பிடலாம்.

மாலை 6-7 மணியளவில் 1-2 வாழைப்பழம் சாப்பிடுங்கள்.

இதையும் படிக்க: 0-5 வயது + குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு… உடனடி பலனைத் தரும் வீட்டு வைத்தியம்

வாயு பிரச்னை இருந்தால் எதைத் தவிர்க்க வேண்டும்?

பஜ்ஜி, போண்டா

சமோசா, மசாலா வடை

உருளைக்கிழங்கு

காராமணி

முட்டைக்கோஸ்

கொத்தவரை

துரித உணவுகள்

பீசா, பர்கர்

பிஸ்கெட்

பலாப்பழம்

மாம்பழம்

மாலையில் சாப்பிட வேண்டியவை

திரிபலா பொடி ஒரு டீஸ்பூன்

சுக்கு காபி

புதினா டீ

சோம்பு டீ

தாளித்த மோர் பெருங்காயம் சேர்த்தது

சீரக டீ

மிளகு தூள் சேர்த்த பழ சாலட்

இதையும் படிக்க: தலைவலியை உடனடியாக விரட்டும் எளிமையான வீட்டு வைத்திய முறைகள்…

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

‘டவுன் சிண்ட்ரோம்’ – நோயல்ல, குறைபாடு! கருவில் கண்டுபிடிக்க முடியுமா?

tamiltips

மழை நீர் சேகரிப்பு பயன்கள்: குழந்தைகளுக்கு பெரியவர்கள் என்ன சொல்லித்தர வேண்டும்?

tamiltips

உடனடி எனர்ஜி… பல்வேறு சத்துகள் உள்ள 3 வகை ஹோம்மேட் மால்ட் ரெசிபி…

tamiltips

குழந்தைக்கு தரும் லன்ச் பாக்ஸ்… 21 ரூல்ஸ்… எதில் அலட்சியம் வேண்டாம்?

tamiltips

தலைவலியை உடனடியாக விரட்டும் எளிமையான வீட்டு வைத்திய முறைகள்…

tamiltips

8 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை மற்றும் ரெசிபி

tamiltips