Tamil Tips
கர்ப்ப கால நிலைகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் கர்ப்பம் குழந்தை பிரசவத்திற்கு பின் பெற்றோர்

கர்ப்பம் முதல் பிறப்பு வரை… பச்சிளம் குழந்தைகளின் மரணங்களைத் தடுப்பது எப்படி?

ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கான அளவுகோல் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியம் எனச் சொல்லலாம். ஏனெனில் பின் தங்கி இருக்கும் நாடுகளில் பச்சிளம் குழந்தைகளின் மரணங்கள் அதிகமாக இருக்கின்றன.

மேலை நாடுகளைவிட இந்திய நாட்டில் 4-6 மடங்கு குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.

மற்ற நாடுகளில் 1000 குழந்தைகளில் 20 குழந்தைகள் இறக்கிறது என்றால், நம் நாட்டில் 1000 குழந்தைகளில் 80 குழந்தைகள் இறக்கின்றன.

பச்சிளம் குழந்தைகளின் இறப்புக்கான காரணங்கள் என்னென்ன?

  • தாய்மை பேற்றை அடைவதற்கான சரியான வயதில் இல்லாதது
  • மனப்பக்குவம் இல்லாதது
  • குழந்தை வளர்ப்பைப் பற்றி முழுமையாக அறியாமல் இருப்பது
  • மருத்துவ வசதிகள் பெற முடியாதது
  • பொருளாதார வசதி இல்லாதது.

குழந்தையின் ஆரோக்கியம் தொடங்குவது எப்போது?

கருப்பையில் வளரும் போது ஆரோக்கியமுடன் இருக்க வேண்டும்.

பிறக்கும் போதும் பிறந்த பின்னரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

Thirukkural

இந்த 3 நிலையிலும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம்.

how to avoid infant death

இதையும் படிக்க: 0-5 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு போடவேண்டிய தடுப்பூசிகள் (Vaccination for 0-5 years babies)

என்னென்ன ஆபத்துகள் உள்ளன?

28 வார கர்ப்பக்கால வாழ்க்கையைத் தாண்டிய பின்னர், குழந்தை கருப்பையிலே இறந்துவிட்டால் கருப்பையினுள் சாவு (Intre Uterine Death) என்பார்கள்.

பிறக்கும் போது ஏற்படும் மூச்சுத் திணறலால், மூச்சு நின்று இதயத்துடிப்பு மட்டும் இருந்து பின்னர் குழந்தையை காப்பாற்ற முடியாமல் இறந்துவிட்டால் உயிர்ப்பியலாப் பிறப்பு (Still Birth) என்பார்கள்.

கருப்பையில் உள்ள இறுதி மாதங்களின் போதோ பிறக்கும் போதோ பிறந்த ஒரு வாரத்துக்குள்ளாகவோ குழந்தை இறந்து விட்டால் ‘முதுசூல் இளஞ்சிசு மரணம்’ எனப்படுகிறது.

பிறந்த 28 நாட்களுக்குள் இறந்து விட்டால், ‘இளஞ்சிசு மரணம்’ (Neonatal Death) என்றும், பிறந்த ஒரு மாதத்துக்கு பின் இறந்துவிட்டால் ‘குழந்தை மரணம்’ (Infant Death) என்றும் சொல்கிறார்கள்.

இதையும் படிக்க: பிறந்த குழந்தைகளின் இறப்பைத் தடுக்க… தாய் கட்டாயமாக செய்ய வேண்டிய 2 டெக்னிக் (Must Do techniques for Moms)

குழந்தை மரணங்களைத் தடுக்க 22 வழிகள்…

  1. குழந்தை மரணம் ஏற்படாமல் இருக்க கருவில் உள்ள போதே நல்ல முறையில் பாதுகாத்து வளர்க்கப்பட வேண்டும்.
  2. குழந்தை வளர்த்தெடுக்கத் தாய் தன்னை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  3. பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது கட்டாயம்.
  4. தாய்ப்பால் சுரப்பும் தாய்ப்பால் ஊட்டுவது பற்றியும் தாய் அறிந்திருக்க வேண்டும்.
  5. கர்ப்பிணியின் மார்பு காம்பு இயல்பாக இருத்தல் அவசியம். அப்படி இல்லாமல் உள்ளடங்கி இருந்தாலோ சிறிதாக இருந்தாலோ வெடிப்புள்ளதாக இருந்தாலோ கர்ப்பக்காலத்திலே கர்ப்பிணி தக்க பயிற்சியை எடுத்துக்கொண்டு சரி செய்திட வேண்டும்.
  6. கர்ப்பக்காலத்தின் போது, தினமும் மார்பு காம்பை நீவி, புடைத்து வெளியே தெரியுமாறு செய்தல் வேண்டும்.
  7. வெடிப்பு இருந்தால் மருத்துவரிடம் சொல்லி சிகிச்சை எடுக்க வேண்டும்.
  8. பிறப்பின் போது குழந்தையின் மண்டைக்குள் ஏற்படும் காயங்களும் மூச்சுத்திணறலும் குழந்தைகளை பிற்காலத்தில் வெகுவாக பாதிக்கலாம் என்பதால் மகப்பேறு மருத்துவரிடம் சென்று பிரசவம் பார்த்துக் கொள்வது நல்லது.
  9. பிறந்த குழந்தையின் தலை, பல்வேறு விதமாக கூம்பிக் காணப்படலாம். குழந்தை கருப்பையில் இருந்த நிலை மற்றும் கூபக வழியில் இறங்கி வரும்போது ஏற்படும் நிலையே கூம்பலுக்கு காரணம். இந்த கூம்பல் தானாகவே சரியாகிவிடும். how to avoid babies death இதையும் படிக்க: ஃபேஸ்புக் நிறுவனரான ‘மார்க்’ தன் குழந்தைக்கு ‘குவான்டம் ஃபிஸிக்ஸ்’ வாசித்து காட்டுகிறார் … ஏன்?
  10. பிறந்த குழந்தையின் தோலில், ‘வெண்ணிற மாங்கு’ படர்ந்திருக்கும். தாயின் வயிற்றில் குழந்தை கருப்பை பனிநீரில் மிதந்து கொண்டிருப்பதால், அந்த ஈரம் குழந்தையின் தோலைப் பாதிக்காமல் இருக்க, இயற்கையாகவே ஏற்படும் மாவு படிதல் இது. குழந்தை குளிக்க, குளிக்க தோல் உதிர்ந்து தானாக சரியாகும்.
  11. பிறந்த சில மணி நேரத்துக்குள்ளேயே குழந்தைக்கு பசி வந்துவிடும். பிறந்து ஒரு மணி நேரத்துக்குள் பால் தருவது கட்டாயம்.
  12. தாயின் மார்பகங்களில் சுரக்கும் மஞ்சள் பால் (சீம்பால்) குழந்தைக்கு மிக மிக அவசியம். புரதம், மாவுப்பொருள், கொழுப்பு நிறைந்துள்ளன. விட்டமின் ஏ, உயிர்ச்சத்துகளும் உள்ளன.
  13. சீம்பால் அளவில் குறைந்திருந்தாலும், பிறந்தவுடன் குழந்தைக்கு முதல் 3 நாட்கள் இந்தப் பாலே போதுமானது.
  14. குழந்தைக்கு சீம்பால் கொடுப்பதால் கரும்பச்சை மலம் இளகி, எளிதில் தானாக வெளியேறும். மேலும், நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும். எனவே, சீம்பால் மிக மிக முக்கியம்.
  1. குழந்தையை இளஞ்சூடான தண்ணீரில் குளிப்பாட்ட வேண்டும்.
  2. குழந்தையின் உடல் சூடு ஒரே அளவில் இருக்கும்படியான ஆடைகளை அணிவிக்க வேண்டும். குளிர் காலத்தில் கம்பளி உடையும் வெயில் காலத்தில் பருத்தி உடையும் அணிவிக்க வேண்டும்.
  3. குழந்தை கருவிலிருக்கும் போதே, தனது கைவிரலை சப்பும். இதுவே குழந்தைகள் பிறந்தவுடன் தாயின் மார்பு காம்பை சப்பிப் பால் குடிக்க காரணமாக அமையும்.     newborn baby care                                       இதையும் படிக்க: குழந்தைகளின் முதல் 1000 நாட்கள்… மறக்கவே கூடாத 21 விதிமுறைகள்..!
  4. தாய் எப்போதும் உட்கார்ந்த நிலையில் பால் கொடுப்பது நல்லது. குழந்தையை சற்று சாய்த்து, தலை நிமிர்ந்து இருக்கும்படி தர வேண்டும்.
  5. நிமிர்ந்த தலையோடு மூக்கு அழுத்தம் ஏற்படாமல், மேல் நோக்கி இருக்க, குழந்தை தன் வாயால் முலைக்காம்பையும், அதனை சுற்றியுள்ள முகட்டையும் சேர்த்து லேசான சத்தத்துடன் சப்புமாறு செய்ய வேண்டும். இல்லையெனில் பால் புரை ஏறி, குழந்தை மூச்சு திணறி, இறந்து விடும் அபாய நிலை வரலாம். எனவே, கவனம்.
  6. படுத்துக்கொண்டே பால் கொடுக்க கூடாது. எக்காரணத்துக்கும் படுத்துக்கொண்டே பால் தருதல் நல்லதல்ல.
  7. மார்பு காம்பு உள்நோக்கி இருந்தால், முலைக்காம்பை விரலால் பிடித்து, இழுத்து, வெளிக் கொண்டு வந்து நீவி விடும் பயிற்சியை செய்தல் நல்லது.
  8. எல்லாத் தாய்மார்களுக்கும் பால் சுரக்கும். பால் சுரப்பின்மை பிரச்னை எல்லாருக்கும் ஏற்படாது. இந்தியாவில், சென்னையில் 3.1 சதவிகித்தருக்கு மட்டும்தான் தாய்ப்பால் சுரப்பின்மை பிரச்னை இருந்ததாக கண்டெடுக்கப்பட்டது. மற்றபடி பெரும்பாலான தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்கும்.

இதையும் படிக்க: தலை, கண்கள், பிறப்புறுப்பு, தொப்புள் கொடி… முதல் மாத குழந்தையை பராமரிப்பது எப்படி? (First Month Baby care)

Source : ஆயுஷ் குழந்தைகள்

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தைகளின் விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி?

tamiltips

தாய்மார்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 11 முக்கிய விஷயங்கள்…

tamiltips

தொப்பை உள்ள குழந்தைகள்… பலமா? எச்சரிக்கை அறிகுறியா?

tamiltips

யாரெல்லாம் குழந்தைக்கு தாய்ப்பால் தரக்கூடாது? தாய்ப்பால் தருவதை எப்போது நிறுத்தலாம்?

tamiltips

பிரசவத்துக்கு பிறகான தளர்ந்த மார்பகங்களை டைட்டாக்கும் வீட்டு வைத்தியம்…

tamiltips

குழந்தைகள், பெண்களுக்கு சத்துகளை அள்ளித் தரும் பாரம்பர்ய உணவான களி ரெசிபி

tamiltips