Tamil Tips
கர்ப்ப அறிகுறிகள் கர்ப்ப பரிசோதனை கர்ப்பம்

கர்ப்பம் வேண்டாம்! செக்ஸ் வேண்டும் – எது சரியான நேரம்?!

ஒவ்வொரு திருமணமான தம்பதியினருக்கும், ஒருகட்டத்தில் குழந்தை பெறுவதை தள்ளிப்போட வேண்டுமென்று தோன்றும். அதுவே குழந்தை பெற்றவர்களுக்கோ அடுத்த குழந்தை வேண்டாமென்றோ, சில நாட்கள் போகட்டுமென்றோ நினைப்பார்கள். இந்நிலையில் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டால், குழந்தை உருவாக்கி விடுமோ என்ற பயத்துடனேயே இருப்பார்கள். இந்த பயத்தினால் செக்ஸையே சிலர் தவிர்த்தும் விடுகிறார்கள். மேலும் இதில் பயப்படவேண்டிய அவசியமே இல்லை. கண்டிப்பாக இதை அறியாமை என்றுதான் சொல்லவேண்டும்.

செக்ஸ்க்கு பிறகு கர்பமாகாமல் இருக்க வேண்டுமென்றால் அதற்கு கருத்தடை  ஊசி, மாத்திரைகளையோ அல்லது வேறு அசௌகரியத்தை உண்டாக்கும் வழிகளோ தேவையில்லை. இதனால் உங்களுக்கு தேவையற்ற உடல் உபாதைகளும், மன சங்கடங்களும் தான் ஏற்படும்.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிகளைத் தவிர்த்து, நீங்கள் இயற்கையாகவே, கர்ப்பமாவதை தவிர்க்க சில பாதுகாப்பான வழிகள் உள்ளது. அது, பெண்கள் தங்களுக்கு ஏற்படும் மாதவிடாய் காலத்தை கணக்கிட்டு, அதன் பின் பாதுகாப்பான (safe period) சில நாட்களை மட்டுமே செக்ஸ்க்குத் தேர்ந்தெடுப்பது தான்.

கரப்பத்தை தவிர்த்து செக்ஸ்க்கு பாதுகாப்பான நேரத்தை தேர்ந்தெடுப்பது எப்படி? (How to Choose Right Time for Safe Sex and Best Time for Sex to Avoid Pregnancy)

ஒரு பெண் கர்ப்பமாவதை தவிர்த்து, பாதுகாப்பாக செக்ஸ் உறவுவைத்துக்கொள்ள ஏற்ற நேரம் என்பது ஓவுலேஷன் ஏற்படுவதற்கு சரியாக பாதியில் இருக்கும் நேரம் தான். அதாவது கருமுட்டை, கருப்பையிலிருந்து வெளியேறும் அந்த காலகட்டமே ஓவுலேஷன் என்கிறார்கள்.

எனினும், சில தருணங்களில், எதிர்பாராத விதமாக சில பெண்களுக்கு கர்ப்பம் ஏற்பட்டு விடுகின்றது. இது குறிப்பாக, எப்போது முட்டை வெளியேறுகின்றது என்ற கணிப்பு தவறாகும் போது நடக்கின்றது. மேலும் ஓவுலேஷனுக்கு பின், பல பெண்கள் சில நாட்களுக்கு கருவுறும் தன்மையோடு திடமாக இருப்பதும் மற்றுமொரு காரமாக உள்ளது.

Thirukkural

இதன் காரணமாகவே தம்பதியினர் போதுமான பாதுகாப்பு முறைகளை பின்பற்றி, கர்ப்பத்தை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். குறிப்பாக கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவதை விட, ஆணுறை பயன்படுத்துவது பாதுகாப்பானதாக இருக்கும். இதனால் உடல் உபாதைகளும் ஏற்படாது.

மாதவிடாய்க்குப் பின் எப்போது பெண் கர்ப்பமடையும் வாய்ப்பை அதிகம் பெறுகிறாள்? (When does a girl get more opportunity to become pregnant after period?) 

செக்ஸுக்குப் பின், ஆணின் விந்தணு குறைந்தது ஐந்து நாட்களுக்கு பெண்ணின் கர்ப்பப்பையில் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளது. அதனால் பெண்களுக்கு ஓவுலேஷன் ஏற்பட்டாலும், விந்தணு கர்ப்பப்பையில் இருப்பதால் கருவுறும் வாய்ப்பும் அதிகரிக்கின்றது.

பெரும்பாலான பெண்களுக்கு ஓவுலேஷன், பீரியட்ஸ் ஏற்பட்டதிலிருந்து 14 நாட்கள் கழித்தே ஏற்படுகின்றது. அதனால் இந்த காலகட்டத்தில் பாதுகாப்பற்ற செக்ஸ் அவர்கள் கருவுறும் வாய்ப்பை அதிகமாக்கி விடக்கூடும்.

சில பெண்களுக்கு குறைந்த கால இடைவெளியில் மாதவிடாய் ஏற்படுவதுண்டு. அதாவது 28 முதல் 3௦ நாட்களுக்குள் மாதவிடாய் ஏற்படுவதுண்டு. இதன்னாலேயே, புணர்ச்சி நேரத்தில் அந்தப் பெண் கருவுற வாய்ப்பு ஏற்படுகிறது. உதாரணத்திற்கு, மாதவிடாய் முடிவடையும் காலத்தில் புணர்ச்சி செய்தால், அதன்பின் ஓவுலேஷன் விரைவாக ஏற்படுமென்றால், கருவுறும் வாய்ப்பு அதிகமாகின்றது என்று அர்த்தம். இதற்காகவே, மாத்திரைகள், ஆணுறை மற்றும் வேறு சில வழிகளை தம்பதியினர் பின்பற்றுகின்றனர்.

கருத்தரிக்கும் சாத்தியத்தை எப்படி கண்காணிப்பது? (Tracking fertility possibility)

கருமுட்டை முழுமையான வளர்ச்சியோடும் கருத்தரிக்கும் தன்மையோடும் இருக்கின்றதா என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால், நீங்கள் கருவுறும் வாய்ப்பை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதை தெரிந்து கொள்வதால், உங்களுக்கு தற்சமயம் கருவுற விருப்பமில்லை என்றாலும், அதற்கேற்றவாறு உங்கள் நாட்களை திட்டமிடலாம். எனினும், இதனை நீங்கள் புரிந்து கொள்ள பல மாதங்கள் உங்கள் மாதவிடாய் சுழற்சியை கண்காணித்து புரிந்து கொள்ள வேண்டும்.

எப்படி உங்கள் கருவுறும் தன்மை / நாட்களை கண்காணிப்பது? (How to track fertile days/ possibility)

பின்வரும் முறைகள் எளிதாக மாதவிடாயை கண்காணித்து, அதன்படி கருவுறும் வாய்ப்பைத் தள்ளிப் போட உதவும்:

  • 8 முதல் 12 மாதங்களுக்கு, எந்த நாளில் மாதவிடாய் ஏற்படுகிறது என்று குறித்துக் கொள்ளுங்கள். அதன் பின் இந்த மாதவிடாய் மொத்தம் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை ஏற்படுகின்றது, அதாவது அதன் சுழற்சி நாட்களை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
  • ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், ஒரு நாள் முழுவதும் உங்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படும் நாளே உங்கள் மாதவிடாயின் முதல் நாளாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • அதன் பின் குறுகிய மற்றும் நீண்ட நாட்கள் அந்த மாதத்தில் எத்தனை ஏற்பட்டுள்ளது என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்.
  • மாதவிடாய்க்குப் பின் வளமான சாளரத்தை குறித்துக் கொண்டு அதில் இருந்து 18 நாட்களை குறுகிய சுழற்சி காலத்தில் இருந்து கழிக்க வேண்டும். உதாரணத்திற்கு 27 நாட்கள் குறுகிய சுழற்சி காலம் என்றால், 27ல் இருந்து 18 நாட்களை கழிக்க வேண்டும். அதன் பின் கிடைப்பது 9 நாட்கள்.
  • அதன் பின் சமீபத்தில் உங்களுக்கு ஏற்பட்ட வளமான சாளரத்தை உங்கள் நீண்ட கால மாத விடாய் சுழற்சி காலத்தில் இருந்து 11 நாட்களை கழிக்க வேண்டும். உதாரணத்திற்கு, 3௦ நாட்களில் இருந்து 11 கழித்தால், 19 நாட்கள் கிடைக்கும்.
  • இந்த குறுகிய மற்றும் நீண்ட கால சுழற்சிக்கு இடையில் உங்களுக்கு கிடைக்கும் நேரம் தான் வளமான சாளரம். மேலே குறிப்பிட்ட உதாரணத்தின் படி நீங்கள் கருவுறும் வாய்ப்பை தவிர்க்க திட்டமிடலாம்.
  • உங்கள் வேலையை எளிதாக்க இப்போது பல மொபைல் அப்பிளிகேஷன்கள் உள்ளன, இவற்றை கூகிள் பிளேஸ்டோரிலிருந்து இலவசமாகவும் டவுன்லோடு செய்யலாம். இதில் நீங்கள் எளிதாக உங்கள் மாதவிடாய் காலங்களை குறித்து வைத்து கணக்கிட முடியும். இதில் பல மாத தகவல்களை சேகரித்து வைக்கலாம்.
  • உங்கள் மாதவிடாயை நீங்கள் இத்தகைய பயன்பாடு கருவிகளை கொண்டும், உங்கள் நாட்குறிப்பில் குறித்துக் கொண்டு கணக்கிட்டாலும்.
  • மேலும் வேறு பல விஷயங்கள் உங்கள் கணிப்பை/கணக்கை தவறாக்கக்கூடும். குறிப்பாக, உங்கள் வேலை, அதனால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம், இது உங்கள் உடலைக் காலப்போக்கில் பாதிப்பதால், உங்கள் மாத விடாயும் பாதிக்கக் கூடும்.

இது மட்டுமல்லாது, நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு மற்றும் உணவு பழக்கங்களும் உங்கள் மாதவிடாய் மற்றும் கருவுறும் தன்மையை பாதிக்கக்கூடும். இதனோடு சேர்த்து நீங்கள் செய்யும் உடற்பயிற்சி போன்ற சில விஷயங்களும் ஓவுலேசன் நாளில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

உங்களுக்கு பாதுகாப்பான மாதவிடாய் ஏற்பட்டால், நீங்கள் எதிர்பார்ப்பது போலவே கருவுறும் வாய்ப்பையும் தள்ளிப் போடலாம். அப்படி உங்களால் கணிக்க முடியாமல் போகும் தருணத்தில், வேறு வழி இன்றி நீங்கள் கருத்தடை மருந்து மற்றும் காண்டம் போன்ற சில உதவிகளை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம்.

Read Also: ஹீமோகுளோபின் என்றால் என்ன?

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சிசேரியன் பிரசவத்திற்கு பின், எப்படி முன்னெச்சரிக்கையுடன் இருப்பது? உங்களுக்காக 15 டிப்ஸ்!

tamiltips

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பயன்களும்… காரணங்களும் என்ன?

tamiltips

8 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை மற்றும் ரெசிபி

tamiltips

பிரசவ வலி வரவில்லை என்றால், வலி உடனே வர என்ன செய்யவேண்டும்?

tamiltips

நீங்காத ஸ்ட்ரெச் மார்க்ஸ்கூட 3 மாதத்துக்குள் நீங்கும்…

tamiltips

கருவில் வளரும் குழந்தை ஆணா பெண்ணா என்று கண்டுபிடிப்பது எப்படி?

tamiltips