Tamil Tips
கர்ப்ப கால நிலைகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் கர்ப்ப பரிசோதனை கர்ப்பம் சுக பிரசவம்

கர்ப்ப காலத்தில் எப்படி ஹீமோகுளோபின் அளவை சீராக வைத்துக் கொள்வது?

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படுவது இயல்பே. இப்படி இரத்த சோகை இருக்கும் போது அவர்கள் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன்  சிவப்பு இரத்த அணுக்கள் மூலம் தசைகளுக்கும், குழந்தைக்கும் போதுமான அளவு கிடைக்காமல் போகின்றது. கர்ப்ப காலத்தில் உடலில் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் அதிகம் இரத்தம் உற்பத்தி ஆகும். இப்படி இருக்கும் போது கர்ப்பிணிப் பெண்கள் போதுமான இரும்புச் சத்து நிறைந்த உணவை உண்ணாமல் இருந்தால், உடலுக்குத் தேவையான போஷாக்கு கிடைக்காமல் போகலாம். இதனால் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியும் குறையத் தொடங்கலாம்.

ஹீமோகுளோபின் தேவையான அளவிலிருந்து சற்று குறைந்து இருந்தால், அதில் பெரிதாக எந்த உபாதைகளும் உடலுக்கு ஏற்படாது. எனினும், கர்ப்பிணிப் பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் மிகப் பெரிய வகையில் ஹீமோகுளோபின் அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படக் கூடும். இந்த வகையில், அதிக அளவு உடலில் இரும்புச் சத்து குறைந்து அல்லது உயிர்ச்சத்து அளவு குறைந்தால், இரத்த சோகை அதிக அளவு ஏற்படக் கூடும்.

உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைந்து இரத்த சோகை ஏற்படுவதால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் என்ன? (Impacts of anemia)

உடலில் ஹீமோகுளோபின் அளவு 10.5g/dl கீழ் குறைந்தால் கர்ப்பிணிப் பெண்ணின் உடலைப் பெரிதும் பாதிக்கக் கூடும். இதனாலேயே மருத்துவர்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கு இரும்புச் சத்து நிறைந்து உணவை அதிகம் பரிந்துரைக்கின்றார்கள். ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படக் கூடும் பாதிப்புகள் என்னென்ன என்பதை இங்குப் பார்க்கலாம்:

  • இரத்த சோகை ஏற்பட்டால் உடல் சோர்வாக இருக்கும்.
  • அதிகம் பலவீனமாகக் கர்ப்பிணிப் பெண்கள் காணப்படுவார்கள்.
  • இது அதிக அளவிலிருந்து, கவனிக்காமல் விட்டு விட்டால், பிரசவ நேரத்தில் பல ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தி விடக் கூடும்.
  • அதிக சோர்வடைந்து காணப்படுவார்கள்.
  • மயக்கம் அடிக்கடி ஏற்படக் கூடும்.
  • சருமம் மற்றும் உதடுகள் மங்கிய நிறத்தில் தோன்றும்.
  • ஓய்வு எடுத்தாலும், மூச்சு வாங்குதல் அதிகமாக இருக்கும்.
  • இருதயத் துடிப்பு அதிகரிக்கும்.
  • கைகள் மற்றும் கால்கள் குளிர்ந்து இருக்கும்.
  • கை விரல் மற்றும் கால் விரல் நகங்கள் எளிதாக உடைந்த விடும்.

ஹீமோகுளோபின் என்றால் என்ன? (What is hemoglobin?)

ஹீமோகுளோபின் இரத்தத்தில் இருக்கும் சிக்கலான புரதம். இது ஆக்சிஜன் மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு ஆகிய இரண்டையும் உடலில் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் செல்ல உதவுகின்றது. சிவப்பு இரத்த அணுக்களுக்கு இரும்பு பிரதானமான ஒன்று. இந்த ஹீமோகுளோபின் அளவு உடலில், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு 12 முதல் 16g/dl அளவு இருக்க வேண்டும்.

Thirukkural
  • பெண் கருவுறாத காலத்தில் ஹீமோகுளோபின் அளவு 12 முதல் 15.8g/dl இருக்க வேண்டும்
  • கர்ப்ப காலத்தின் முதல் பகுதியில் 11.6 முதல் 13.9g/dl அளவு இருக்க வேண்டும்
  • இரண்டாம் பகுதியில் 9.7 முதல் 14.8g/dl இருக்க வேண்டும்
  • மூன்றாம் பகுதியில் 9.5 முதல் 15g/dl இருக்க வேண்டும்

ஏன் கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைகின்றது? (Why during pregnancy hemoglobin level is reducing?)

கர்ப்ப காலத்தில் பொதுவாக ஹீமோகுளோபின் அளவு குறைந்து விடும். இதற்கு முக்கிய காரணம், கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் 50% இரத்தத்தின் உற்பத்தி அளவு குழந்தையின் வளர்ச்சிக்காக அதிகரிக்கின்றது. இதனால் ஹீமோகுளோபின் அளவு அதிகம் தேவைப் படுகின்றது. ஆனால் அந்த உற்பத்திக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காத நிலையில் ஹீமோகுளோபின் அளவு குறையத் தொடங்கி விடுகின்றது.

இந்த நிலையைக் கவனிக்காமல் விட்டு விட்டால், நாளடைவில் பல விளைவுகளைக் கர்ப்பிணிப் பெண்ணுக்கும், குழந்தைக்கும் ஏற்படுத்தி விடக் கூடும். அதிலும் ஹீமோகுளோபின் 6g/dl அளவிற்கும் கீழ் குறைந்து விட்டால், அந்த பெண்ணுக்கு ‘ஆன்ஜினா’ ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகும். இதனால் அந்த பெண்ணுக்கு மார்பில் அதிக வலி ஏற்படும். இது மெதுவாக கைகள், தோள்கள் மற்றும் கழுத்து பகுதிக்குப் பரவி போதுமான இரத்த ஓட்டம் இருதயத்திற்குக் கிடைக்காமல் செய்து விடும்.

உடலில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கப் பல காரணங்கள் உள்ளன.அவற்றில் சில இங்கே:

  • கர்ப்பத்திற்கு முன் ஏற்பட்ட கடைசி மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப் போக்கு ஏற்படுவதால் ஹீமோகுளோபின் அளவு குறையும்.
  • உணவுக் கட்டுப்பாட்டிலிருந்தால், போதுமான இரும்புச் சத்து கிடைக்காமல் ஹீமோகுளோபின் அளவு குறையும்.
  • கர்ப்பம் அடையும் முன் இரத்தம் தானம் செய்திருந்தால் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது.
  • உடலில் இரும்புச் சத்து சரியாகக் கிடைக்கப் பெறாமல் போனால் இது நேரலாம்.
  • முதல் குழந்தை பிறந்த உடனேயே போதிய இடைவெளி இன்றி, அடுத்த குழந்தையைக் கருவுறும் சமயத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைய வாய்ப்பு உள்ளது.

எப்படி கர்ப்பிணிப் பெண்களில் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பது? (How to Increase Hemoglobin Level During Pregnancy in Tamil?)

கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், போதுமான சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்வதோடு, உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். உங்கள் உணவில் அனைத்து சத்துக்களும் உள்ளதா என்று பார்க்க வேண்டும். நீங்கள் எப்படி ஹீமோகுளோபின் அளவை அதிகரித்துக் கொள்வது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள இங்கே சில தகவல்கள்;

  • நீங்கள் உண்ணும் உணவில் போதுமான இரும்பு, உயிர்ச்சத்து பி 12 மற்றும்  சி சத்துக்கள் உள்ளதா என்று பார்க்க வேண்டும்
  • பச்சைக் காய் மற்றும் கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக வெந்தயக் கீரை, பசலைக் கீரை,முருங்கைக் கீரை,அகத்திக் கீரை போன்றவற்றை அதிகம்  சேர்த்துக் கொள்ள வேண்டும்
  • உலர்ந்த பலன்கள், கம்பு, கேழ்வரகு போன்ற தானிய வகைகள் என்று அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
  • அதிக இரும்புச் சத்து நிறைந்த பழங்கள், குறிப்பாகக் கொய்யா, பேரீச்சம் பழம், அத்திப் பழம் போன்றவற்றைத் தினமும் உட்கொள்ள வேண்டும்
  • உயிர்ச்சத்து சி இரும்புச் சத்தை உடலில் தக்க வைக்க உதவும். அதனால் கமலாப் பழம், எலுமிச்சை பழம், நாவல் பழம் போன்ற பழ வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிராக்கோலி, தக்காளி, மிளகு போன்ற பொருட்களையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • ஃபாேலிக் அமிலம் மற்றும் உயிர்ச்சத்து பி சத்து நிறைந்த உணவு ஹீமோகுளோபின் அளவை அதிகப் படுத்த உதவும். அதனால் வெண்டைக்காய், முளைக் கட்டிய பயிர்கள், பூசணிக்காய் போன்ற காய்களை அதிகம் உண்ண வேண்டும்.
  • அதிக கால்சியம் அளவு, இரத்தத்தில் இரும்புச் சத்தை சேர விடாமல் செய்யக் கூடும். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில், முடிந்த வரை தேநீர், காபி, மது, கோதுமை உணவுப் பொருட்கள், பால் சார்ந்த பொருட்கள் ஆகியவற்றை அதிகமான வகையில் சேர்த்துக் கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.
  • நாட்டுக் கோழி முட்டை, பருப்பு வகைகள், ஆட்டு இறைச்சி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்
  • கருப்பட்டி,வெல்லம் போன்றவற்றிலும் இரும்புச் சத்து நிரம்பி உள்ளது.

இது மட்டுமல்லாது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க, உணவுப் பழக்கத்திலும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். முடிந்த வரை குதிரைவாலி, சாமை, திணை, கை குத்தல் அரிசி போன்ற அரிசி வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இது அனைத்து சத்துக்களையும் எளிதாகப் பெற உதவும். முடிந்த வரை மருந்துகளைத் தவிர்த்து, இயற்கையாக இரும்புச் சத்து நிறைந்த உணவை ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க எடுத்துக் கொள்வதால், தாய் மற்றும் சேய் இருவரும் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பார்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தைகளுக்கு ஓமத்தினால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்.

tamiltips

கர்ப்பிணிகள் காபி, டீ குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் தெரியுமா?

tamiltips

பிரசவத்துக்குப் பிறகு எப்போது முதல் மாதவிலக்கு வரும்? மாதவிலக்கு வருவது இயல்பானதா?

tamiltips

சிசேரியன் பிரசவத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள்!

tamiltips

யாரெல்லாம் குழந்தைக்கு தாய்ப்பால் தரக்கூடாது? தாய்ப்பால் தருவதை எப்போது நிறுத்தலாம்?

tamiltips

யாரெல்லாம் குழந்தைக்கு தாய்ப்பால் தரக்கூடாது? தாய்ப்பால் தருவதை எப்போது நிறுத்தலாம்?

tamiltips