Tamil Tips
குழந்தை பெண்கள் நலன் பெற்றோர்

கோபம் வந்தால் இதையெல்லாம் செய்யுங்க… தாய்மார்களுக்கான டிப்ஸ்…

கோபம் இல்லாத மனிதர்கள் உண்டா? கோபப்படாத நாட்கள் உண்டா? இப்படியான இரு கேள்விகளுக்கும் விடை சொல்வது கொஞ்சம் கடினம்தான். குடும்பம், அவசர வாழ்க்கை, குழந்தைகளின் சேட்டை, அடம் இப்படியான சூழலை சந்திக்கையில் கோபம் தாய்மார்களுக்கு வரத்தான் செய்கிறது. கோபத்தை தன் வாழ்நாளில் விட்டு விடமுடியுமா?

கோபம் பட்டுத்தான் நீங்கள் என்ன ஜெயித்தீர்கள் எனப் பட்டியலிட முடியுமா? கோபத்தால் இழந்ததை வேண்டுமானால் பட்டியலிட முடியும். கோபத்தைக் கட்டுப்படுத்துவது ஆபத்தான வழி. ஆனால், கோபத்தை விட்டுவிடுவதும் தவிர்ப்பதும் பாதுகாப்பான வழி… கோபத்தைக் கையாள தாய்மார்களுக்கு உள்ள வழிகளைப் பார்ப்போம்.

கோபம் வந்தால் உடலில் என்னென்ன நடக்கும்?

வயிற்று பிடிப்பது போன்ற உணர்வு

கைகளை ஏதோ செய்வது… கைகளைக் கோர்ப்பது, பிடிப்பது, உதறுவது, நெட்டி முறிப்பது, முறுக்குவது.

உச்சக்கட்ட கோப சூட்டால் நனையும் உணர்வு. உடல் சூடாகும்.

Thirukkural

வேகமாக மூச்சு விடுதல்.

தலைவலி வரும்.

அங்கே இங்கே நடப்பது.

முகம், கண்கள் சிவப்பாகும்.

எதையும் கவனிக்க முடியாமல் தவிப்பது.

பதற்றமான மனம் மற்றும் உடல்.

தோள்ப்பட்டைகளில் இறுக்கம்.

வேகமாக இதயத்துடிப்பு.

இதெல்லாம் உடலில் நடக்கும். இது நெகடீவ், ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களைத் தூண்டி உங்களது உடல்நிலையும் மனநிலையும் மேலும் மோசமாக்கும்.

கோபத்தை சமாளிக்க தாய்மார்களுக்கான வழிகள்…

‘நான்’ என்ற மந்திர சொல்

நான் ரொம்ப வருத்தப்பட்டேன். இந்த விஷயத்துல நீங்க எனக்குத் துணையாக இல்லை என்று. இது வாக்கியம் ஒன்று.

இந்த விஷயத்துல நீங்க கொஞ்சம்கூட துணையாக இல்ல… இது வாக்கியம் இரண்டு.

இந்த இரண்டும் ஒரே அர்த்தம். ஆனால், பேசும்போது அதன் தீவிரம் சற்று மாறுப்படும். எனவே, பேசுகையில். வாக்கியம் ஒன்றையே பின்பற்றுங்கள்.

‘நான்’ என்ற மந்திரத்தைச் சேர்த்துக்கொள்ளுங்கள். நீ, நீங்கள், அவர், அவர்கள் இதையெல்லாம் பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது.

இதையும் படிக்க: தாய்மார்களுக்கான ஸ்ட்ரெஸ்… விரட்ட சிம்பிள் வழிகள் இங்கே…

பேசும் முன் சிந்தி

பேசுவதற்கு முன் 20 நொடிகளாவது சிந்திக்கவும். கோபத்தில் பேசின வார்த்தைகளை மீண்டும் எடுக்க முடியாது.

கோபம் ஒரு உருவமற்ற அம்பு. அதை எய்தினால் காயம் நிச்சயம். வலியும் நிச்சயம்.

anger management tips

Image Source : Imagefully

இதையும் படிக்க: தாய்மார்களுக்கு வருகின்ற போஸ்ட்பார்டம் மனச்சோர்வு… தீர்க்க வழிகள்…

அமைதிக்குப் பின் கோபம் காண்பிக்க

நீங்கள் அமைதியாகி விட்டால் நிதானமாகிவிடுவீர்கள். இப்போது உங்களது கோபத்தை காட்டலாம். ஏனெனில் கோபம் நீர்த்து இருக்கும்.

நீங்கள் சொல்ல வேண்டியதை சரியாக சொல்வீர்கள். தவறான, தேவை இல்லாத வார்த்தைகளை விட மாட்டீர்கள்.

கோபம் தவிர்க்கும் பயிற்சி

ஏதோ ஒரு உடலுழைப்பு தரும் பயிற்சிகளை அவசியம் செய்யுங்கள். தினமும் செய்வது நல்லது.

இதனால், கோபம் அதிகம் வராது. ஸ்ட்ரெஸூம் இருக்காது.

இதையும் படிக்க: தலைவலியை உடனடியாக விரட்டும் எளிமையான வீட்டு வைத்திய முறைகள்…

வெளியே செல்லுங்கள்

குழந்தைகளுடன் அல்லது நீங்கள் மட்டும் தனியாக அருகில் எங்காவது பூங்கா, கடற்கரை போன்ற இயற்கை சூழலில் 1-2 மணி நேரம் இருந்து விட்டு வரலாம்.

வஞ்சம் வேண்டாம்

மன்னிப்பைவிட பெரிய ஆயுதம் உண்டா… நிச்சயம், இல்லை.

உங்கள் மீது கோபப்பட்டவரை நீங்கள் மன்னித்து விட்டால், சில நாட்களில் கோபம் மறைந்து உங்களது உறவுகளும் பலப்படும்.

மன்னிப்பவன் மாமனிதன். அந்தப் பட்டம் உங்களுக்கே இருக்கட்டும்.

டென்ஷன் போக்க ஒரு வழி

மனதில் வஞ்சம் வைத்து நக்கலாக பேசுவதைத் தவிர்க்கவும்.

நகைச்சுவை உணர்வு பயன்படுத்தி, அந்தந்த டென்ஷனிலிருந்து வெளியே வரவும்.

இதையும் படிக்க: காபி, டீக்கு பதிலாகக் குடிக்க வேண்டிய 9 மூலிகை டீ, காபி மற்றும் பால்…

ரிலாக்சேஷன் திறன்கள்

மனதில் நினைப்பதை பேப்பரில் எழுதுவது. பின்னர் கிழிப்பது.

இசையைக் கேட்பது, யோகா ஆசனங்கள் செய்வது, தியானம் செய்வது.

இப்படியான ரிலாக்சேஷன் திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

peaceful mother

Image Source : Fitlife

ஆழ்ந்த மூச்சு

10-20 ஆழ்ந்த மூச்சு விட்டால், ஓரளவுக்கு கோபம் குறையும்.

வயிற்றிலிருந்து வரும் கோபம், வயிற்றிலிருந்து இழுக்கப்படும் மூச்சால் கோபம் குறைந்துவிடும். அதனால்தான் ஆழ்ந்த மூச்சு கோபத்தைக் குறைக்கிறது.

சென்ஸரிகளை பயன்படுத்துங்கள்

பார்ப்பது, முகர்வது, தொடுவது, கேட்பது, சுவைப்பது என எதையாவது செய்தால் கோபம் குறையும்.

பிடித்தமான விஷயங்களைப் பார்ப்பது, கேட்பது. பிடித்த உணவுகளை சுவைப்பது. செல்லப் பிராணியை தொடுவது, விளையாடுவது. இப்படி ஏதாவது செய்யலாம்.

நிகழ்காலம் மட்டுமே நிஜம்

கடந்த கால பிரச்னைகளை மறுந்து விடுங்கள். அது கடந்து போயிற்று.

நிகழ் காலத்தையும் எதிர்காலத்தையும் மனதில் வையுங்கள். இதனால் டென்ஷன் குறையும்.

இதையும் படிக்க: 10 நாட்களில் கருவளையத்தை போக்கும் ஹோம்மேட் சிகிச்சைகள்…

எழுதி வையுங்கள்

எதெல்லாம் உங்களைக் கோபம் படுத்துகிறது என எழுதி வையுங்கள். எழுதி வைத்த பட்டியலில் எது முதல், இரண்டு என நம்பர் போட்டு ஆர்டர் செய்யுங்கள்.

இறுதியில் உள்ள எண்ணும் பிரச்னையும் பாருங்கள். அதைப் பார்த்து சிந்திக்கவும். இதற்கு கோபம் தேவையா தேவையில்லையா என எழுதி, அதற்கான விடையை கண்டுபிடியுங்கள். இப்படி அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும்.

எதையும் பர்சனலாக எடுக்க வேண்டாம்

எந்த விஷயத்தையும் இது எனக்கானது என எடுத்துக்கொள்ள வேண்டாம்.

இந்த சூழல் இப்படியே இருக்காது. மாறும்… காலம் அதை மாற்றும். தீர்வு கிடைக்கும். நம்பிக்கை கொள்ளுங்கள்.

புத்தர் சொன்ன ஒன்று

மற்றவர்கள் நமக்கு என்ன செய்ய கூடாது என நினைக்கின்றோமோ. அதை நாமும் மற்றவர்களுக்கு செய்ய கூடாது.

இந்த ஒரு அறிவுரையை உங்கள் வாழ்க்கையைப் பின்பற்றினாலே, நமக்கு யாரும் தீங்கு செய்ய மாட்டார்கள். நாமும் பிறருக்கு தீங்கு செய்ய மாட்டோம்.

இதையும் படிக்க: இயற்கையான முறையில் ஹார்மோன் பிரச்னைகளை சரி செய்வது எப்படி?

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

யாருக்கு கருச்சிதைவு நடக்கலாம்? காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள்…

tamiltips

குழந்தைகளுக்கான பல் வலியை நீக்கும் வீட்டு வைத்திய முறைகள்…

tamiltips

நினைத்துப் பார்க்க முடியாத பாதிப்புகளை தரும் டிவி… குழந்தைகளை எப்படி பாதுகாப்பது?

tamiltips

6 – 9 மாத குழந்தைகளுக்கான 15 கூழ் (Puree Recipes) ரெசிபி வகைகள்

tamiltips

15 அறிகுறிகளை வைத்து உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை செக் செய்யுங்கள்…

tamiltips

குழந்தைகளை நன்கு சாப்பிட வைக்க என்ன வழிகள்?

tamiltips