Tamil Tips
குழந்தை பெண்கள் நலன்

இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளின் நிலை என்ன?

தமிழ்நாட்டில் இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட பெண்களின் சதவிகிதம் 55.1%. அதுபோல, 44.4% கர்ப்பிணி பெண்கள் (Anaemia in Pregnancy) இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரத்த சோகை ஏன் இவ்வளவு பேரை பாதிக்கிறது?. எதனால் இந்த பிரச்னை வருகிறது? இந்தப் பதிவில் இதைப் பற்றிப் பார்க்கலாம்.

முதலில் ஹீமோகுளோபின் பற்றித் தெரிந்தால் ரத்தசோகை பற்றிப் புரிந்து கொள்ள முடியும்.

  • ஹீமோகுளோபின் (Hemoglobin) என்பது புரதம் (Protein), சிவப்பு ரத்த அணுக்களில் இந்த ஹீமோகுளோபின் எனும் புரதம் இருக்கும்.
  • நுரையீரலிலிருந்து ஆக்ஸிஜனை உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கும் கொண்டு செல்லும்.
  • சிவப்பு ரத்த அணுக்களின் தோற்றத்தை சரியாக பராமரிப்பதற்கும் ஹீமோகுளோபின் முக்கியம்.

இரத்த சோகை (Anemia) என்றால் என்ன?

இரத்தத்தில் ஹீமோகுளோபின் என்ற புரதத்தின் அளவு, சிவப்பு ரத்த அணுக்களில் சரியாக இல்லையென்றாலோ குறைவாக இருந்தாலோ, உடலுக்குத் தேவையான அளவு ஆக்சிஜனை இரத்த சிவப்பு அணுக்களால் கொண்டு செல்ல முடியாது. இந்த பிரச்னையைதான் இரத்த சோகை நோய்’ என்கிறார்கள்.

இதையும் படிக்க : கரு பத்திரமாக இருக்க கர்ப்பிணிகள் எதையெல்லாம் செய்ய கூடாது?

pregnancy-anemia

Thirukkural

இரத்த சோகை ஏன் வருகிறது?

இரத்தத்தில் இரும்பு சத்து (Iron), விட்டமின் பி (Vitamin B) சத்துகள் குறைவாக இருந்தாலோ இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைந்து காணப்பட்டாலோ, இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவதாலோ இரத்த சோகை ஏற்படுகிறது.

உடலுக்கு கொண்டு செல்லும் ஆக்சிஜனை உடலின் மற்ற உடல் உறுப்புகள் மற்றும் அனைத்து பாகங்களுக்கும் எடுத்து செல்லாமல் தடை ஏற்பட்டு விடுகிறதல்லவா இதனால்தான் இதை ‘இரத்த சோகை நோய்’ என்கிறார்கள்.

100 மி.லி இரத்தத்தில் இருக்கவேண்டிய ஹீமோகுளோபின் அளவு (HB Level)

  • கர்ப்பிணி பெண்கள் – 11 கிராம்
  • 1 மாத குழந்தை முதல் பள்ளி செல்லாத குழந்தைகள் வரை – 11 கிராம்
  • 5-11 வயதுள்ள சிறுவர்கள் – 11.5 கிராம்
  • பெண்கள், வளர் இளம் பருவத்தினர் மற்றும் தாய்ப்பால் கொடுப்பவர்கள் – 12 கிராம்
  • 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் – 13 கிராம்

இதையும் படிக்க : கர்ப்பக்கால சர்க்கரை நோய் வராமல் தவிர்க்க… சாப்பிட வேண்டிய 22 உணவுகள்…

இரத்த சோகை-யால் ஏற்படும் பாதிப்புகள் 

pregnancy-anemia

  • பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்களாலும் ரத்த இழப்பாலும் பெண்களின் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. அதற்கு காரணம் இரத்த சோகை.
  • மரபியல் வழியாகத் தாய் குள்ளமாக இருப்பதாலும் இரும்புச்சத்து குறைபாட்டால் இரத்த சோகை ஏற்பட்டு தாய் பிரசவத்தின் போது இறக்கும் அபாயம் (Maternity Death) அதிகரிக்கிறது. இந்த பிரச்னைகளால் ஏற்படும் இறப்பு விகிதம் 20%.
  • இரத்த சோகையால் பாதித்த தாயின் கரு பலவீனமாக இருக்கும். அதனால் அந்த தாய் குறை பிரசவம் (Early delivery) அல்லது குறைந்த எடையுள்ள குழந்தையை (under weight babies) பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
  • இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஒரு யூனிட் அளவு அதிகரித்தால் குழந்தை இறக்கும் அபாயம் 24% சதவிகிதம் குறையும் என ஒரு ஆய்வு கூறுகிறது.
  • இரத்த சோகை உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளாக இருக்கவும் நோய்கள், தொற்றுக்கள் வருவதுமான பிரச்னைகள் அதிகமாக இருக்கும்.
  • பல்வேறு ஆய்வுகளின் படி, ஒரு நாடு அல்லது ஒரு மாநிலம் இரத்தசோகையின் காரணமாக தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1-4% வரை இழக்கும்.
  • இரும்பு சத்து குறைபாடு (Iron deficiency) காரணமாக ஏற்படும் உடல் ரீதியான மற்றும் அறிவு ரீதியான இழப்புகளை ஒட்டு மொத்தமாக கணக்கிட்டால் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.05%.
  • வளரும் நாடுகளில் இரும்பு சத்து குறைவு, அயோடின் குறைபாடு (Iodine deficiency) மற்றும் விட்டமின் ஏ குறைபாடு (Vitamin A deficiency) ஆகியவற்றை சேர்த்து கணக்கிட்டால் அவற்றின் பொருளாதார செலவு உள்நாட்டு உற்பத்தியில் 5% அளவு இருக்கும் என உலக வங்கி கணக்கிட்டுள்ளது.

Source : UNICEF

இதையும் படிக்க : குழந்தைகள், கர்ப்பிணிகள், பெண்கள்… ரத்தசோகையை 100% விரட்டும் உணவுகள்… 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

டைம் சேவிங் முறையில் குழந்தைகளை அசத்தும் 5 வகையான அல்வா ரெசிபி…

tamiltips

0-2 வயது குழந்தைகளுக்கு ஏன் பசும்பால் தரக்கூடாது?

tamiltips

ஃபீடிங் பாட்டில் சுத்தம் செய்யும் முறைகள் மற்றும் டிப்ஸ்…

tamiltips

யாருக்கு கருச்சிதைவு நடக்கலாம்? காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள்…

tamiltips

குழந்தைகளுக்கான ஹோம்மேட் வேப்பர் ரப் செய்வது எப்படி?

tamiltips

‘டவுன் சிண்ட்ரோம்’ – நோயல்ல, குறைபாடு! கருவில் கண்டுபிடிக்க முடியுமா?

tamiltips