Tamil Tips
குழந்தை பெற்றோர்

உணவு உண்பதில் உள்ள 8 முக்கிய பிரச்னைகள்… வாந்தி எடுக்கும் குழந்தையா?

உங்கள் குழந்தைக்கு நீங்கள் ஊட்டும் உணவை அவர்கள் சரியாக உண்ணாமல் இருக்கிறார்களா… வாயில் உணவை வைத்துக் கொண்டு அதை வெளியில் துப்புகிறார்களா… இப்படி உணவை உண்ணாமல் அட்டகாசம் செய்யும் குழந்தைகளை எப்படி சமாளிப்பது? உணவை உண்ண வைப்பது எப்படி என இப்பதிவில் பார்க்கலாம்.

உணவு உண்ணாமல் சேட்டை செய்வது குழந்தைகள் செய்யும் இயல்பான விஷயம்தான். ஆனால், இது தாய்மார்களுக்கு மிக பெரிய வருத்தத்தை அளிக்கும்.

உணவு ஊட்டுவது என்பது குழந்தைக்கும் தாய்க்கும் உள்ள அற்புதமான ஓர் உறவை எடுத்துக்காட்டும் ஒரு விஷயம்.

உணவை உண்ணாமல் துப்புவது, அடம் செய்வது, வாயில் வைத்துக் கொண்டு விழுங்காமல் இருப்பது, சாப்பிட்ட உடனே மலம் கழிப்பது போன்ற பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு உண்டு.

உணவு உண்ணாமலே இருந்தால் என்ன பிரச்னைகள் வரும்?

  • அசிடிட்டி
  • ரிஃப்ளக்ஸ் பிரச்னை
  • வாயு சேரும்
  • உடலில் நீர் வறட்சி குறையும்.

எனவே எதனால் உங்கள் குழந்தை சாப்பிட மறுக்கிறது எனக் காரணத்தைத் தெரிந்து கொண்டால் பிரச்னையை சுலபமாக தீர்த்துவிடலாம்.

Thirukkural

8 முக்கிய பிரச்னைகள்

#1.உணவை துப்புவது

ஒவ்வொரு முறையும் உணவைத் துப்பினால் அது பிரச்னைதான். இது பொதுவான பிரச்னைதான். குழந்தையால் நேராக உட்கார முடியாத நிலையில் இப்படி துப்புவார்கள்.

சாப்பிட்ட உடன் உடனே படுக்க வைத்துவிட்டால், உணவு மேலோங்கி வந்து இப்படி துப்ப நேரிடும்.

உணவை ஊட்டும் போதும் ஓரளவுக்கு சாய்வான நிலையில் ஊட்ட வேண்டும்.
அதுபோல தாய்ப்பால் கொடுக்கும்போதும் அப்படிதான் செய்ய வேண்டும்.

குழந்தை வேகமாக சாப்பிட்டாலோ வேகமாக உணவை விழுங்கினாலும் இந்த பிரச்னை வரும்.

குழந்தை மிக மிக அதிக பசியுடன் இருந்தால் உணவைப் படுக்க வைத்தபடி ஊட்ட கூடாது. சாய்வாக வைத்தோ உட்கார வைத்தோ ஊட்டலாம்.

கைக்குழந்தையை உணவு ஊட்டிய பின் லேசாக சாய்த்து, முதுகில் தட்டுங்கள்.

ஒருவேளை ரிஃப்ளக்ஸ், உணவு மேலோங்கி வாந்தி போல வந்தால் அவசியம் மருத்துவரிடம் காண்பியுங்கள்.

vomiting problem

#2.உணவை வாந்தி எடுப்பது

உணவை உண்டதும் வாந்தி எடுக்கும் பிரச்னையும் இயல்பான ஒன்றுதான்.

சாப்பிட்ட உடனே வாந்தி எடுத்தால், வைரல் பிரச்னை, தொற்று ஏதேனும் இருக்கிறதா எனக் கவனியுங்கள்.

வயிற்றில் ஏதாவது கழிவு அடைப்பாக இருந்தாலும் இப்படி வாந்தி எடுக்க நேரலாம்.

உடல்நலக் குறைபாடு ஏதேனும் இருக்கிறதா எனக் கவனியுங்கள்.

வாயுத் தொடர்பான பிரச்னை இருந்தால், நீர்த்த உணவுகள், திரவ உணவுகளைக் குழந்தைக்கு அடிக்கடி கொடுக்கலாம்.

வயிறு வலி, 12 மணி நேரமாக தொடர்ந்து வாந்தி எடுத்தல், ரத்தம் கலந்து வாந்தி எடுத்தல் போன்ற பிரச்னை இருந்தால் உடனே மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்.

இதையும் படிக்க: 0-12 மாத குழந்தைகளுக்கு தரவே கூடாத 9 உணவுகள்…

#3.அதிகமாக உணவைக் கொடுத்தல்

குழந்தை அழும்போதெல்லாம் பால் கொடுப்பது, உணவுக் கொடுப்பது என இருந்தால் அது அதீத உணவைக் கொடுக்கும் பிரச்னை ஆகும்.

பசி இல்லாத போதும் உணவைக் கொடுப்பதும் தவறு.

அதிகமாக உணவு கொடுத்தால் வயிற்றுப்போக்கு, வாந்தி, துப்புதல், உடல்பருமன் போன்ற பிரச்னைகள் வரும்.

பசி இல்லாத போது அழுதால், உணவைத் தராமல் குழந்தையின் கவனத்தை விளையாட்டு பக்கம் திருப்புங்கள்.

#4.சரியாக உணவு தராமல் இருக்கும் பிரச்னை

சரியாக சாப்பிடாமல் இருக்கும் குழந்தைகள் கொஞ்சம் பலவீனமாகவே இருக்கும்.

சில குழந்தைகள் சாப்பிடவும் விழுங்கவுமே கஷ்டப்படும்.

உணவு ஊட்டுவதில் நீங்கள் எதாவது தவறு செய்கிறீர்களா எனக் கவனியுங்கள்.

ஃபார்முலா மில்க் ஏதேனும் கட்டி கட்டியாக இருக்கிறதா எனப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

பசியுடன் குழந்தையை ரொம்ப நேரம் காத்திருக்க செய்கிறீர்களா என்றும் கவனியுங்கள்.

சரியான ஃபார்முலா மில்கை தேர்ந்தெடுத்துக் கொடுங்கள்.

வலுவில்லாமல் ஊட்டச்சத்து இல்லாமல் இருந்தால் சத்தான உணவுகள், சரியான ஃபார்முலா மில்க், அவசியம் தாய்ப்பாலும் கொடுங்கள்.

feeding problems

#5.உடலில் நீர் வறட்சி ஏற்படுவது

திரவ உணவுகளும் தாய்ப்பாலும் சரியாக குழந்தை குடிக்கவில்லை என்றால் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும்.

இதன் அறிகுறியாக வாய் வறண்டு காணப்படுதல், உதடு வறட்சியாகுதல், சுறுசுறுப்பின்றி இருத்தல், தூக்க கலக்கமாக இருப்பது, கண்ணீர் இல்லாமலே அழுவது, குறைவாக சிறுநீர் கழிப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

தீவிர நீர்ச்சத்து குறைபாடு இருந்தால் குழந்தையின் நிலை இன்னும் மோசமாகும்.

எனவே, போதிய தாய்ப்பால், தேவையான திரவ உணவுகளைக் குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.

இதையும் படிக்க: சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தையை சாப்பிட வைப்பது எப்படி?

#6.எப்போதுமே பசி

எவ்வளவு தாய்ப்பால் கொடுத்தாலும் பசியுடனே குழந்தை இருந்தால் குழந்தைக்கு தாய்ப்பால் போதவில்லை.

மாற்று வழிகள் என்னென்ன எனப் பாருங்கள். மருத்துவர் பரிந்துரைத்த ஃபார்முலா மில்க், அதிகமாக தாய்ப்பால் சுரக்க நீங்கள் சத்தான உணவை உண்பது போன்ற முயற்சிகளை எடுக்கலாம்.

வாயில் புண், வாய் வறட்சியாக இருந்தாலும் தாய்ப்பால் போதவில்லை. உண்ணும் உணவு போதவில்லை என அர்த்தம்.

தாய்ப்பால் எவ்வளவு மணி நேரத்துக்குள் எத்தனை முறை எப்படி கொடுக்க வேண்டும் என கற்றுக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்க: பிறந்த குழந்தைகளின் இறப்பைத் தடுக்க… தாய் கட்டாயமாக செய்ய வேண்டிய 2 டெக்னிக்

வாயில் வெள்ளை வெள்ளையாகத் திட்டுகள் ஏதேனும் தெரிந்தால் மருத்துவரிடம் காண்பியுங்கள்.

#7.சாப்பிட்ட உடனே தூங்கி விடுதல்

சாப்பிட்ட உடனே தூங்கி விட்டாலும் பிரச்னை சாப்பிட்ட பின்னும் தூங்காமல் இருந்தாலும் பிரச்னை.

சாப்பிடாமலே தூங்கிவிட்டால் லேசாக கால் கட்டைவிரலை ஆட்டி மீண்டும் தாய்ப்பால் கொடுக்கலாம்.

சாப்பிட்டதும் தூங்கவில்லை என்றால் தூக்கம் வரவைக்க சில வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

இதையும் படிக்க: குழந்தைகளை ஈஸியான முறையில் தூங்க வைக்க டிப்ஸ்…

#8.சாப்பிட்ட உடன் மலம் கழித்தல்

தாய்ப்பால் குடித்தவுடனோ உணவை சாப்பிட்டவுடனோ மலம் கழித்தால் லாக்டோஸ் அலர்ஜி ஏதேனும் பாதித்து இருக்கிறதா எனக் கவனியுங்கள்.

அலர்ஜி ஏதேனும் உள்ளதா என மருத்துவரிடம் ஆலோசனைக் கேளுங்கள்.

லாக்டோஸ் அலர்ஜி ஏற்படுத்தாத உணவுகளுக்கு மாறுங்கள்.

இதையும் படிக்க: எந்தெந்த உணவுகளால் குழந்தைக்கு அலர்ஜி ஏற்படுகிறது?

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அறிவை உயர்த்துவதில் உணவின் பங்கு என்ன? 10 சிறந்த உணவுகள்…

tamiltips

குழந்தைகளுக்கான பல் வலியை நீக்கும் வீட்டு வைத்திய முறைகள்…

tamiltips

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் 6 வீட்டு வைத்தியம்…

tamiltips

சாம்பல், மண், சாக்பீஸ், சிலேட்டு குச்சி சாப்பிட்டால் என்ன ஆகும்? பக்க விளைவுகள் என்ன?

tamiltips

3 வகையான பேபி மசாஜ் எண்ணெய் செய்வது எப்படி?

tamiltips

பிறந்த குழந்தையின் தலை உருண்டை வடிவம் பெற சில குறிப்புகள்

tamiltips