pampering baby

குழந்தைக்கு எந்த அளவுக்கு செல்லம் கொடுக்கவேண்டும்?

ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை வாய்ந்தது என்பதால் மற்றவர்களின் அனுபவத்தை அப்படியேஏற்றுக் கொள்ள முடியாது. குறிப்பாக முன்னோர் இப்படித்தான் செய்தார்கள் என்று குழந்தைக்கு எதுவும் செய்ய வேண்டாம். குழந்தை கவனிப்பை தனித்தன்மையுடன் செய்யுங்கள். இதனால்  தவறுகள்செய்துவிட நேரிடலாம். ஆனால் அவையும் இயல்பே என்று வாழ்வில் பாடம் கற்றுக்கொண்டு பயணம்செய்ய வேண்டும். குழந்தை வளர்ப்பில் ஒழுக்கம் பேணுவதற்குக் கண்டிப்பு தேவை, அதேநேரம் செல்லமும் தேவை. ஒரே பிள்ளை என்பதற்காக வேண்டியதை எல்லாம் வாங்கிக்கொடுப்பதும், அழவிடாமல் வளர்ப்பதும் சரியல்ல. அளவு கடந்த கண்டிப்பும் மிரட்டலும் கொண்டு வளர்க்கப் படும் குழந்தை ஒழுக்கமாக நடந்து கொள்ளலாம். ஆனால், அதில் ஏற்படும் பயமும், உள்மனக் காயங்களும் ஆற்ற முடியாதவை. குழந்தையின் இயற்கையானதுறுதுறுப்பும், உற்சாகமும் குலைந்து விடக்கூடும்.
Read more