இவை ஒவ்வொன்றும் மருத்துவ
வகையில் நமக்கு பல நன்மைகளைத் தருகின்றன.
மாணிக்கம்: சரீராதி சுரங்கள், சந்நிபாத தோஷங்கள், ரோகம், வாதப்பிரமேகம், கண்ணோய் ஆகியவை தீரும் வசீகரமுண்டாகும்.
வைரம்: ஆறு வகை வைரங்கள் உள்ளன. அவற்றில் மகாரசங்கள் தங்கியிருப்பதால், நேத்திர ரோகம் முதலான ரோகங்கள் நீங்கும். உடலுக்கு அழகைக் கொடுக்கும்.
வைடூரியம்: சிலேஷ்ம வாத தோஷம், கபம், புளியேப்பம், வருத்துகின்ற கீல்பிடிப்பு, வாதகுன்மம், பைத்தியம் முதலிய சப்த தோஷங்கள் நிவர்த்தியாகும்
கோமேதகம்: பித்தம், மலபந்தம், சுரத்தால் பிறந்த துர்க்குணம் ஆகியவற்றை நீக்கும். பளபளப்பைத் தரும்.
புஷ்பராகம்: சுக்கில விருத்தியும், நல்லறிவும், கீர்த்தியும் உண்டாகும். மேகம் முதலான நோய்கள் நீங்கும்.
பவழம்: சூட்சையின் விகாரம், கபம், சந்நிபாத சுரம், இருமல், கீடவிஷம், சுக்கில ஷீணம், நாவில் சுரசுரப்பு ஆகியவை விலகும். சரீர காந்தி உண்டாகும்.
முத்து: ஜீவரத்தினம் எனும் முத்தினால் வீக்கம், அரோசகம், மெலிவு, கண்நோய் அக்கினி கீடவிஷம், குரல்வளையில் சந்திக்கின்ற கோழை, அதைரியம் ஆகியவை நீங்கும்.
மரகதம்: இனிப்புள்ள மரகதம் விந்துவை அதிகரிக்க செய்யும். பதினெட்டு வித பூத பைசாசங்கள் விரணம், விஷங்கள், மதுமேகம் ஆகியவற்றை நீக்கும்.
நீலம்: குதிகால் வலி, மேகநீர், அதிக பித்தம், மனச்சோர்வு ஆகியவை போகும். நல்லறிவும் அதிக சுக்கிலமும் உண்டாகும்