இந்திய குடும்பங்களை பொருத்தவரை ஆண் குழந்தையும் சரி பெண் குழந்தையும் சரி 5 முதல் 6 வயது ஆகும் வரை பெற்றோர் தங்கள் அருகிலேயே படுக்க வைத்துக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது. இந்த சூழலில் குழந்தைகள் உறங்கிய பிறகு தாயும் தந்தையும் உடலுறவு வைத்துக் கொள்வது என்பது இந்திய குடும்பங்களில் நடைபெறும் சாதாரணமான ஒரு நிகழ்வு.
இரவு குழந்தைகள் உறங்கி விட்டதை உறுதி செய்து கொண்டு கணவனும் மனைவியும் கலவியில் ஈடுபடுவர். ஆனால் இந்த இடத்தில்தான் ஒரு பிரச்சனை இருக்கிறது என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்.
வெளியிலிருந்து பார்க்கும்போது குழந்தைகள் உறங்கி விட்டதாகவே பெற்றோருக்கு தெரியும். மேலும் பாலியல் தேடல் அவசரத்திலிருக்கும் ஆணும் சரி பெண்ணும் சரி குழந்தை தூங்காத நிலையிலும் தங்களுக்குள்ளேயே குழந்தை தூங்கி விட்டதாக ஒரு எண்ணத்தை ஏற்படுத்திக் கொண்டு உடல் உறவில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறுகின்றனர் மனோதத்துவ நிபுணர்கள்.
இதே போல் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தை எப்போது எழும் எழுந்தவுடன் அதனை தாய் தந்தையிடம் தெரிவிக்கும் என்றும் கூற முடியாது. பெரும்பாலான குழந்தைகள் சிறிய அசைவிலேயே விழித்துக்கொண்டு தந்தையும் தாயும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று ரகசியமாக கண்காணிக்க வாய்ப்பு உள்ளது.
ஓரளவு விவரம் தெரிந்த குழந்தைகள் தந்தை தனது தாயை துன்புறுத்துவதாகவும் கொலை செய்ய முயல்வதாகவும் கூட கருதிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது. இதேபோல் பெண் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் உடலுறவு என்றாலே எரிச்சலும் கோபமும் ஏற்படுவதற்கான வாய்ப்பும் தாய் தந்தை உடலுறவில் ஈடுபடுவதை காணும்போது ஏற்பட்டுவிடும்.
எனவே குழந்தையுடன் ஒரே அறையில் உடலுறவில் ஈடுபடுவதை தாயும் சரி தந்தையும் சரி தவிர்க்க வேண்டும் என்பதே மனோதத்துவ நிபுணர்கள் சுட்டிக் காட்டும் ஒரு விஷயம்.