உடல் எடை குறைப்பிற்கு மிளகாயில் கேப்சாசின் என்ற மசாலாப் பொருள் உன்று உள்ளது. இப்பொருளானது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தினை சரிவர நடைபெறச் செய்து உடலின் எடையினைக் குறைக்கிறது.
மேலும் கேப்சாசின் உடலின் அதிக கலோரிகளை எரித்து உடல் எடையினைக் குறைக்கிறது. புற்றுநோயைத் தடுக்க மிளகாயில் உள்ள பைட்டோநியூட்ரியன்கள் புற்றுசெல்களின் வளர்ச்சியைத் தடைசெய்கிறது.
மேலும் ஏற்கனவே புற்றுநோயால் பாதிப்பட்ட செல்களையும் பாதுகாக்கிறது. இக்காயில் டானின் புற்றுச்செல்களின் வளர்ச்சியைத் தடைசெய்கிறது. மிளகாயின் புற்றுநோய் எதிர்ப்பு பண்பானது நுரையீரல், கல்லீரல் மற்றும் இரைப்பை புற்றுநோயைத் தடைசெய்கிறது.
மேலும் இக்காயில் உள்ள மெக்னீசியம் இரத்த ஓட்டத்தைச் சீராக்கி ஆக்ஸிஜன் அதிகம் உள்ள இரத்தத்தை திசுக்களுக்கு அனுப்பி வைக்கிறது. நோய் தடுப்பாற்றலை அதிகரிக்க இக்காயில் உள்ள விட்டமின் சி-யானது உடலின் நோய் தடுப்பாற்றலை அதிகரித்து சளி, இருமல் உள்ளிட்ட நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. நோய்த் தடுப்பாற்றலானது சிதைந்த மூளைச் செல்களை சரிசெய்கிறது.
நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் மிளகாயில் உள்ள கேப்சின் என்ற மசாலாப் பொருள் பாக்டீரியா மற்றும் பூஞ்ஞை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே மிளகாயானது உணவினைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. சைனஸ் உள்ளிட்ட சுவாச நோய்களுக்கு மிளகாயில் உள்ள கேப்சிகன் வெப்பத்தினை அதிகரித்து மூக்கில் உள்ள சளியை வெளியேற்றுகிறது.
இதனால் ஆஸ்த்துமா, சைனஸ், நாள்பட்ட மூக்கு அழற்சிநோய் உள்ளிட்ட சுவாச நோய்களை சரிசெய்கிறது. புகைப்பிடிப்பதால் உருவாகும் பென்சோபிரைன் என்ற பொருளானது விட்டமின் ஏ-வினை உடலில் அழித்து விடுகிறது. மிளகாயில் உள்ள விட்டமின் ஏ-வானது புகைப்பதால் உண்டாகும் நுரையீரல் அழற்சி மற்றும் எம்பிசிமா நோயினை சரிசெய்கிறது.
இயற்கையின் அற்புதமான மிளகாயினை அளவோடு உணவில் பயன்படுத்தி வளமான வாழ்வு வாழ்வோம்.