Tamil Tips
லைஃப் ஸ்டைல்

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்திய இன்ஸ்பெக்டர்! சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் பலியான பரிதாபம்!

அத்துடன் யாரிடமும் எந்தவித கையூட்டும் பெறாமல் நேர்மையாகப் பணியாற்றக் கூடியவர் என்கிற பெயரைப் பெற்றவர். கடந்த 3-ம் தேதி சென்னை ஐ.சி.எஃப் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராகப் பொறுப்பேற்ற அவர், தனது பணிகளைத் திறமையாகச் செய்து வந்தார். கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்த அவருக்கு சில தினங்களாகக் கடுமையான தலைவலி இருந்துள்ளது. கடந்த 8-ம் தேதி ராமையா பணியில் இருந்தபோது தலைவலியால் அவதிப்பட்டுள்ளார்.

அதனால் அவர் பணிக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். ஆனால், அங்கும் தலைவலி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்ததால் தாங்க முடியாமல் துடித்துள்ளார். காவல் நிலையத்துக்கு ரவுண்ட்ஸ் வந்த அயனாவரம் உதவி கமிஷனர் பாலமுருகன், அங்கே இன்ஸ்பெக்டர் இல்லாதது குறித்து காவலர்களிடம் விசாரித்தபோது அவர்கள் நடந்த விவரத்தைக் கூறியுள்ளனர். அதனால் உதவி கமிஷனர் பாலமுருகன், அங்கிருந்து ராமையா வீட்டுக்குச் சென்று அவரிடம் நலம் விசாரித்துள்ளார்.

அப்போது அவர் தலைவலியால் துடித்ததைப் பார்த்தது, அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காட்டியுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், இன்ஸ்பெக்டர் ராமையாவின் மூளைக்குச் செல்லும் நரம்பில் கோளாறு இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். அதை உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். அந்த சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்ஸ்பெக்டர் ராமையாவின் மருத்துவ செலவுக்குப் போதிய பணம் இல்லை.

மேலும், புதிய இடத்துக்கு மாறுதலாகி வந்ததால் பணத்தை ஏற்பாடு செய்வதிலும் குடும்பத்தினருக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவரைத் தனியார் மருத்துவமனையிலிருந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். ஆனால், அவருடைய உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் நேற்று (18-ம் தேதி) இரவு அவர் மரணம் அடைந்தார். அவருடைய உடல் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு இன்று தகனம் செய்யப்பட்டது

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

10ம் வகுப்பு பாஸ்! பிளஸ் ஒன் சேரும் மாணவர்கள் கட்டாயம் செய்ய வேண்டியவை!

tamiltips

ரயில் பயணமா? 20 நிமிசம் முன்னாடியே ஸ்டேசனும் போகனும்! இல்லனா ரயில்ல போக முடியாது!

tamiltips

கணவனும் மனைவியும் மனம்விட்டு பேசினாலே மறைந்துவிடும் கஷ்டங்கள்..பிறந்துவிடும் சந்தோஷங்கள்..தெளிவான விளக்கங்களுடன்..

tamiltips

சைனஸ் பிரச்சனையால் பெரும் அவதிப்படுவோர்க்கு சில சிறந்த வீட்டு வைத்தியங்கள்!

tamiltips

நகத்தின் நிறம் மாறுகிறதா..? என்ன நோய் என்று அறிந்துகொள்ளுங்கள்.

tamiltips

மருத்துவமனையில் ஒரு கையில் சேமிப்பு பணம்! மறு கையில் காயம் பட்ட கோழிக்குஞ்சு! உருகச் செய்த சிறுவனின் மனிதநேயம்!

tamiltips