• பொதுவாக
மூன்று அல்லது
நான்கு குழந்தைகள்
வயிற்றுக்குள் இருக்கும்போது
ஏற்படும் சிக்கல்களை
தவிர்ப்பதற்காக, அவை
இரட்டைக் குழந்தைகளாக
மாற்றப்படுகின்றன.
• மிகவும்
அனுபவமும் தகுதியும்
வாய்ந்த மருத்துவர்கள்
மூலமே இந்த
சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும்,
மேலும் மருத்துவமனையில்
அனைத்து வசதிகளும்
இருக்கவேண்டும்.
• பொதுவாக
மருந்து செலுத்தி
கரு கரைப்பதையே
மருத்துவர்கள் மேற்கொள்கிறார்கள்.
அதேபோல் இருப்பதில்
பலவீனமான கருவே
கலைக்கப்படுகிறது.
• எந்தக்
கரு பரிசோதனைக்கு
ஏற்றவகையில் பக்கத்தில்
இருக்கிறதோ, அந்த
கருவை கரைப்பதும்
நடைமுறையில் இருக்கிறது.
இந்த நடைமுறையினால்
தாய்க்கும் குழந்தைகளுக்கும்
நிறையவே நன்மைகள்
உண்டு. அதேநேரம்,
திடீரென ஒட்டுமொத்த
கருக்களும் கலைந்துபோகும்
அபாயமும் சிறிய
அளவுக்கு உண்டு
என்பதை அறிந்திருக்க
வேண்டும்.