உடலுறவுக்கு என்று எந்த ஒரு விதிமுறைகளும் தனியாக இல்லை என்பது தான் உண்மை. இது முற்றிலுமாக ஆண் பெண் அவர்களின் சூழ்நிலை மற்றும் ஆரோக்கியத்தை பொறுத்து அமையும். என்னதான் உடலுறவு இருவரது ஆர்வத்தின் அடிப்படையில் அமைந்தாலும் நம்மில் பலருக்கும் எத்தனை முறை உடலுறவு கொள்வது என்றும் எவ்வளவு நேரம் அதில் நிலைத்து நிற்க வேண்டும் எனவும் பல கேள்விகள் எழும். பாலியல் ஆர்வலர்களின் கூற்றுப்படி, தம்பதிகள் உடலுறவு கொள்வது அவர்களின் தனிப்பட்ட ஆர்வத்தின் அடிப்படையில் அமையும் என்றும் ஆனால் வாரத்திற்கு பலமுறை அவர்கள் உடலுறவில் ஈடுபடுவது என்பது கடினம் என்றும் கூறியுள்ளனர்.
இதற்கு மிக முக்கியமாக அவர்கள் கூறுவது நேரமின்மை ஆகும். ஆனால் பாலியல் ஆர்வத்தின் அடிப்படையில் அவர்கள் தங்களால் முடிந்த வரை எத்தனை முறை வேண்டுமென்றாலும் உடலால் இணையலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர். மேலும் உடலுறவு கொள்பவர்கள் மத்தியில் எடுக்கப்பட்ட சர்வேக்களும் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் விதமாக அமையவில்லை. ஏனெனில் சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வேயில், தம்பதியினர் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை வரை உடலுறவு கொள்வதாக கூறியுள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கையானது அவர்களின் வயதை பொறுத்து முற்றிலும் மாறுபடுகிறது.
உதாரணத்திற்கு 50 வயதில் இருக்கும் தம்பதியினரை 30 வயதில் இருக்கும் தம்பதியினருக்கு ஒப்பிடுகையில், 30 வயதில் இருக்கும் தம்பதியினருக்கு சற்று அதிகமான ஆர்வம் உடல் உறவில் இருக்கும். அதுவே 50 வயது தம்பதியினரை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு சற்று குறைவான ஆர்வம் தான் உடலுறவில் இருக்கக்கூடும். அதிலும் ஒருசில மிகுந்த ஆர்வம் கொண்ட ஜோடிகளும் இருப்பர். இவர்கள் அந்த லிஸ்டில் விதிவிலக்கானவர்கள் என்று தான் கூற வேண்டும். ஆர்வம் மட்டும் அல்லாமல் உடல் ஆரோக்கியம் மற்றும் நம்மை சுற்றியிருக்கும் சூழ்நிலைகள் ஆகிய அனைத்தையும் மையப்படுத்திதான் தம்பதியினர் உடலுறவில் ஈடுபடுகின்றனர்.
ஆரோக்கியத்தை பொறுத்தவரையில் 50 வயது கொண்ட தம்பதியினர் உடலுறவில் ஈடுபடும் போது பொதுவாக ஆண்களுக்கு அந்த நேரத்தில் விறைப்புத்தன்மை பிரச்சனை உருவாகக்கூடும். இதைப் போல் பெண்களுக்கும் மாதவிடாய் நிற்கும் காலங்களில் உடலுறவில் அதிக ஆசை இல்லாமல் போக வாய்ப்புகள் அதிகம் உண்டு. இது உடலுறவில் அவர்கள் ஈடுபடும் எண்ணிக்கையை முற்றிலும் குறைக்கும் வாய்ப்பு உள்ளது. இன்னும் சொல்லப்போனால் புதிதாக பாலியல் வாழ்வில் இணைந்தவர்கள் பல ஆண்டுகளாக இணைந்து அவர்களைக் காட்டிலும் இதில் சற்று சுறுசுறுப்பாகவும் ஆர்வத்துடனும் செயல்படுவர். ஆகையால் அவர்கள் பலமுறை பாலியல் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருப்பர்.
உடலுறவில் மிகவும் முக்கியமானது உடல் உறவின் கால அளவுதான். கால அளவுதான் இருவரது உச்சகட்ட நிலையையும் தீர்மானிக்கும். ஆய்வுகளின் முடிவு அடிப்படையில் ஆறு நிமிடத்திற்கும் குறைவாக உடலுறவில் ஈடுபட்டால் அது பெண்களின் உச்சகட்டத்தை அடையும் நிலைக்கு உதவாது என்று கூறியுள்ளனர். ஆகையால் அவர்கள் உச்சக்கட்டத்தை அடைவது கடினம் ஆகும். இதன் மூலம் தம்பதியினருக்கு இடையே பிரச்சினைகள் எழுவதற்கு கூட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆகையால் பெண்களுக்கு 5 முதல் 7 நிமிடங்கள் உச்சகட்ட கட்டத்திற்கான கால அவகாசம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
பலமுறை உடலுறவில் ஈடுபட்டாலும் ஒரு முறையாவது ஒழுங்கான முறையிலும் உற்சாகமான முறையிலும் உடலுறவு கொள்வது சிறந்தது. ஆகையால் எண்ணிக்கையை விட ஆர்வத்தையும் உற்சாகத்தையும் அதிகரித்துக்கொண்டு உடலுறவில் ஈடுபடுவது சிறந்ததாகும். இது தம்பதியர்களின் சிறப்பான வாழ்விற்கு வழிவகுக்கும் .