ஆனால், அப்படி நடப்பதற்கு யாரும் விடுவதில்லை. பால் கொடுக்கும் பெண் நிறைய சாப்பிட வேண்டும் என்று பெரியவர்கள் மீண்டும் நிறைய உணவுகளை கொடுப்பார்கள். மேலும் சத்தான உணவு வேண்டும் என்று கொழுப்பு உணவுகளைக் கொடுப்பார்கள்.
குழந்தை பெற்றவர்கள் மருத்துவர் ஆலோசனையுடன் எளிய
உடற்பயிற்சிகளைச் செய்ய
வேண்டும். ஆனால், அதற்கும் நம் சமூகம் அனுமதிப்பதில்லை. பச்சை உடம்பு என்று ஆடாமல் அசையாமல் வைத்திருப்பார்கள். இதுதவிர தைராய்டு
சுரப்புகளில் குறைபாடு,
ஹார்மோன் சமன்பாட்டில்
பாதிப்பு, கர்ப்பகாலச்
சர்க்கரை நோய்
போன்ற சில
காரணங்களாலும் உடல்
பருமன் ஏற்படலாம்.
ஆனால் சமச்சீர்
உணவு, மிதமான
உடற்பயிற்சி, வாழ்க்கைமுறை
மாற்றம் ஆகியவற்றின்
மூலம் கர்ப்பக்
காலத்தில் அதிகரித்த
கூடுதல் உடல்
எடையை மூன்றே
மாதங்களில் குறைத்துவிட
முடியும் என்பதுதான் உண்மை. மூன்று மாதங்களில் உடல் எடை குறையவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை சந்தியுங்கள். ஒன்றிரண்டு வருடங்கள் கழித்து மருத்துவரை சந்திப்பதால் எந்த பிரயோஜனமும் இருக்காது என்பதைப் பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும்.