உலக அழகி ஐஸ்வர்யாராய் என்றால் தமிழர்களுக்கு எப்போதுமே கிரேஸ் உண்டு. அன்பே இருவரும் பொடிநடையாக அமெரிக்காவை வலம் வருவோம் என டாப் ஸ்டார் பிரசாந்தோடு சேர்ந்து ஆடும் போதும் சரி எந்திரனில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான போதும் சரி..தமிழ் ரசிகர்கள் ஐஸ்வர்யா ராயின் படங்களை வெற்றிகரமாக்கியவர்கள்.
உலக அழகிகள் பலர் இருந்தாலும் ரசிகர்கள் மனதில் எப்போதும் இதய சிம்மாசனம் இட்டு அமர்ந்திருப்பவர் ஐஸ்வர்யா தான். அமிதாப்பச்சனின் மருமகளான இவர் இப்போது தன்மகளோடு சேர்ந்து அடிக்கடி டிக்டாக் வீடியோவும் வெளியிட்டு வருகிறார்.
இதோ இப்போது அச்சு அசலில் நடிகை ஐஸ்வர்யா ராயை அப்படியே உரித்து வைத்ததுபோல் இருக்கும் ஒரு பெண்ணின் வீடியோ கடந்த சில தினங்களாக சோசியல் மீடியாக்களை கலக்கிவருகிறது. இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள். 42 வினாடிகள் தான். நீங்களும் அசந்துபோவீர்கள்..
— HBD Thangachi Loga 🎊💕மச்சக்கன்னி ❣ (@zoya_offcl) June 2, 2020