Tamil Tips
குழந்தை பெற்றோர்

குழந்தைகளின் எடையை அதிகரிக்க உதவும் 20 உணவுகள்…

ஒவ்வொரு குழந்தையும் முதல் ஒரு ஆண்டிற்குள் சரியான எடையை எட்ட வேண்டும் என்பது அவசியம். அதற்கு சத்தான உணவுகளைத் தரவேண்டும். குழந்தையின் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க முயற்சிப்பதே சரியான முயற்சி. எப்படி குழந்தையின் எடையை இயற்கையாகவே ஆரோக்கியமான முறையில் அதிகரிப்பது என இப்பதிவில் பார்க்கலாம்.

எடையை அதிகரிக்கும் 20 சிறப்பான உணவுகள்

#1. தாய்ப்பால்

குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் கொடுப்பது மிக மிக முக்கியம். நான் ஒல்லியான தாய் எனக்கு பால் சுரக்கவில்லை போன்ற தவறான கருத்துகளை விட்டுவிடுங்கள். தாய்ப்பால் அனைத்து தாய்மார்களுக்கும் சுரக்கும். தாய்ப்பால் சுரக்கும் உணவுகளை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்க : உணவுகள் மூலம் தாய்ப்பாலை அதிகமாக சுரக்க வைப்பது எப்படி? 

குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் அவசியம் கொடுக்க வேண்டும். 6 மாதத்துக்கு பிறகு திட உணவுகளும் தாய்ப்பாலும் கொடுப்பது அவசியம்.

#2. வாழைப்பழம்

ஒரு வாழைப்பழத்தில் 100 + க்கும் மேற்பட்ட கலோரிகள் உள்ளன. இயற்கையாகவே அதிக எனர்ஜி தரும் பழம் இது.

Thirukkural

மாவுச்சத்து, பொட்டாசியம், நார்ச்சத்து, விட்டமின் சி, பி6 ஆகியவை நிறைந்துள்ளன.

6 மாதம் தொடங்கிய பின்னரே உங்கள் குழந்தைக்கு நீங்கள் வாழைப்பழம் கொடுக்கலாம்.

பச்சை வாழைப்பழத்தை தவிர்க்கலாம். குழந்தைகளுக்கு மலம் கட்டும். மற்ற அனைத்து வாழைப்பழங்களும் குழந்தைக்கு நல்லது.

8 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வாழைப்பழத்தை நீங்கள் கேக்காகவோ, புட்டிங்காகவோ செய்து தரலாம்.

#3. ராகி – கேழ்வரகு

ragi idli for babies

Image Source :  Youtube

குழந்தைகளுக்கு முதல் உணவாக தருவதில் மிக சிறந்த உணவு, கேழ்வரகு.

6 மாத குழந்தைகள் முதல் அனைவரும் சாப்பிட ஏற்றது, இந்த கேழ்வரகு சிறுதானியம்.

கால்சியம், புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, விட்டமின் பி1, பி2, தாதுக்கள் ஆகியவை உள்ளன.

குழந்தைக்கு ராகி எளிமையாக செரிமானமாகும். ராகி கஞ்சி, ராகி கூழ், ராகி இட்லி, ராகி தோசை, ராகி ரொட்டி, ராகி புட்டு, ராகி லட்டு, ராகி கேக், ராகி குக்கீஸ் போன்ற வகைகளில் ராகியை கொடுப்பது நல்லது.

#4. கேரளா நேந்திர பழ கஞ்சி

கேரளத்தின் பாரம்பர்ய உணவு. குழந்தைகளுக்கான மிகசிறந்த உணவு.

இந்த கஞ்சி பவுடரை எப்படி செய்வது மற்றும் இந்த பவுடரை வைத்து கஞ்சி செய்வது எப்படி எனத் தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்க : குழந்தையின் எடையை அதிகரிக்கும் நேந்திரம் பொடி செய்வது எப்படி? 

#5. பசு நெய்

அதிக ஊட்டச்சத்துகள் கொண்டது, பசு நெய். உடல் எடையை அதிகரிக்க உதவும்.

8 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, நெய் சேர்த்த உணவுகளைக் கொடுக்கலாம்.

கிச்சடி உணவுகளை நெய் சேர்த்துக் கொடுப்பது நல்லது.

பொங்கல், உப்புமா போன்றவற்றில் நெய் சேர்த்து குழந்தைக்கு கொடுக்கலாம்.

பருப்பு சாதம், சப்பாத்தி, பராத்தா போன்றவற்றிலும் நெய் சேர்க்கலாம்.

#6. உருளைக்கிழங்கு

இதில் மாவுச்சத்து நிறைந்துள்ளது. விட்டமின் சி, பி6, பாஸ்பரஸ், மாங்கனீஸ் ஆகியவை உள்ளன.

வேகவைத்துத் தோல் உரித்து, நன்கு மசித்து குழந்தைக்கு கொடுக்க மிக சிறந்த உணவு இது.

நொறுக்கு தீனியாக, ஃபிங்கர் ஃபுட்டாக, ப்யூரியாக, கட்லெட் போல உருளைக்கிழங்கை குழந்தைகள் உணவில் அவசியம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

#7. சர்க்கரைவள்ளி கிழங்கு

sweet potato for babies

Image Source : Super Healthy Kids

6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்த ஸ்வீட்டான சர்க்கரைவள்ளிகிழங்கை தரலாம்.

இதை வேகவைத்து மசித்துத் தரலாம். உடல் எடை கூடும்.

செரிமானமாவதும் எளிதாகும்.

ஃபார்முலா மில்க் அல்லது தாய்ப்பால் கலந்து சர்க்கரைவள்ளிகிழங்கு கூழ் செய்து கொடுக்கலாம்.

சூப், கிச்சடி, பான்கேக், அல்வா போன்றவற்றிலும் இந்த சர்க்கரைவள்ளிகிழங்கை சேர்த்துக்கொள்ளுங்கள்.

#8. பருப்புகள்

6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் பருப்புகளை வேகவைத்துத் தரலாம்.

பாசி பருப்பு, துவரம் பருப்பு, உளுந்து ஆகியவை குழந்தைக்கு நல்லது.

பருப்பு வேகவைத்த தண்ணீரை குழந்தையின் முதல் உணவாகவே தரலாம். அவ்வளவு நல்லது.

புரதம், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னிஷியம் ஆகியவை ஊட்டச்சத்துகள் உள்ளன.

கொழுப்பு குறைவு. புரதமும் நார்ச்சத்தும் அதிகம்.

பருப்பு கிச்சடி, பருப்பு தண்ணீர், பருப்பு சூப், பருப்பு சாதம், பருப்பு பாயாசம் எனக் குழந்தைகள் உணவில் பருப்பை சேர்த்துக் கொள்ளுங்கள்.

#9. நட்ஸ் பவுடர்

நட்ஸ் முழுமையாக கொடுத்தால் குழந்தையின் தொண்டையில் மாட்டிக் கொள்ளும்.

அதனால் நட்ஸை அரைத்துக் கொடுக்கலாம். அதாவது பொடி செய்து பவுடராக சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

ஜூஸ், ஸ்மூத்தி, ப்யூரி, கேக், பான்கேக் போன்றவற்றில் நட்ஸ் பவுடர் சேர்த்து குழந்தைகளுக்கு தரலாம்.

இதையும் படிக்க : குழந்தைகளுக்கான ஹோம்மேட் நட்ஸ் பவுடர் செய்வது எப்படி? 

#10. கிச்சடி உணவுகள்

காய்கறி, பருப்பு, நெய், அரிசி, சிறுதானியம் ஆகியவை சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுவதால் கிச்சடி குழந்தைகளுக்கான பெஸ்ட் உணவு.

ஒரு பவுல் கிச்சடியில் புரதம், மாவுச்சத்து, விட்டமின், தாதுக்கள், கொழுப்பு ஆகியவை இருப்பதால் சமச்சீர் உணவு இது.

உடல் எடை அதிகரிக்க, ஆரோக்கியமாக இருக்க பெஸ்ட் சாய்ஸ் இவை.

#11. அவகேடோ

avacado for babies

வெண்ணெய் பழம் என்பார்கள். வெண்ணெய் போல திரண்டு வரும்.

நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. நார்ச்சத்தும் அதிகம்.

6 மாத குழந்தை முதலே இதைக் கொடுக்கலாம்.

ப்யூரி, ஸ்மூத்தி, டசர்ட் போல செய்து கொடுக்கலாம்.

#12. யோகர்ட்

பால்தான் ஓர் ஆண்டுக்கு முன் தரக்கூடாது. 7-8 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு யோகர்ட் தரலாம்.

கால்சியம், கலோரிகள், விட்டமின், தாதுக்கள், நல்ல கொழுப்பு ஆகியவை நிறைந்துள்ளன.

குழந்தைக்கு எளிதில் செரிமானமாக உதவும். அதே சமயம் எடையும் அதிகரிக்கும்.

பழங்களால் செய்யப்பட்ட ப்யூரியில் யோகர்ட் கலந்து கொடுக்கலாம்.

ஸ்மூத்தியில் யோகர்ட் சேர்த்துக் கொடுக்கலாம்.

#13. புரோட்டீன் ஸ்மூத்தி

ஹோம்மேட் புரோட்டீன் பவுடர், டேட்ஸ் சிரப் செய்யும் முறையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்க : ஹோம்மேட் புரோட்டீன் பவுடர் செய்வது எப்படி? 2 சிம்பிள் ரெசிபிகள்… 

இதையும் படிக்க : ஹோம்மேட் டேட்ஸ் சிரப், டேட்ஸ் ப்யூரி செய்வது எப்படி? 

சாக்லேட் வாழைப்பழ நட்ஸ் ஸ்மூத்தி

1 வாழைப்பழம், 2 ஸ்பூன் ஹோம்மேட் புரோட்டீன் பவுடர், 1 ஸ்பூன் ஹோம்மேட் டேட்ஸ் சிரப் ஆகியவற்றை கலந்து மிக்ஸியில் அடித்து குழந்தைக்கு கொடுக்கலாம்.

ஆப்பிள் யோகர்ட் ஸ்மூத்தி

ஒரு ஆப்பிள், ½ கப் யோகர்ட், 2 ஸ்பூன் ஹோம்மேட் புரோட்டீன் பவுடர், 1 ஸ்பூன் ஹோம்மேட் டேட்ஸ் சிரப் கலந்து மிக்ஸியில் அரைத்து ஸ்மூத்தியாக குழந்தைக்கு கொடுக்கலாம்.

அவகேடோ வாழைப்பழ ஸ்மூத்தி

½ அவகேடோ, 1 வாழைப்பழம், 2 ஸ்பூன், ஹோம்மேட் புரோட்டீன் பவுடர் கலந்து மிக்ஸியில் நன்றாக அரைத்து குழந்தைக்கு தரலாம்.

1 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான எடை கூட உதவும் உணவுகள்

#14. முட்டை

அனைத்து அமினோ அமிலங்கள், புரதம், கொழுப்பு, தாதுக்கள், விட்டமின் ஏ, பி 12 ஆகியவை உள்ளன. குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும்.

நரம்பு மண்டலம் சீராக வேலை செய்ய, மூளை வளர்ச்சி சீராக இருக்க கொலைன் சத்து உதவும்.

குழந்தைக்கு முட்டை கொடுத்து, அலர்ஜி ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் காண்பிக்கவும்.

அலர்ஜி ஏற்படவில்லை என்றால், வாரம் 3 நாள் முட்டை கொடுக்கலாம்.

வேகவைத்த முட்டை, ஸ்க்ராபிள்ட் முட்டை, முட்டை ஆம்லெட், முட்டை சாதம், ஃப்ரெஞ்ச் டோஸ்ட் கொடுக்கலாம்.

இதையும் படிக்க: பாரம்பர்ய அரிசியில் செய்ய கூடிய இனிப்பு தோசை ரெசிபி

egg for babies

#15. வெண்ணெய்

அதிக கொழுப்பு, அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன.

பருப்பு, கிச்சடி, கஞ்சி, கூழ், பான்கேக், சூப் ஆகியவற்றில் ஒரு டீஸ்பூன் கொடுக்கலாம். அதற்கு மேல் தரகூடாது.

அதிகமாக வெண்ணெயை எடுத்துக்கொள்ள கூடாது.

#16. மீன்

புரதம், விட்டமின் டி, ஓமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளன.

மூளை வளர்ச்சிக்கு உதவும்.

விட்டமின் சி சத்து கிடைக்கும்.

அலர்ஜி இல்லையென்றால் 10 -11 மாத குழந்தை முதலே மீன் கொடுக்கலாம்.

குழம்பு மீன் தருவது நல்லது. மீனை பொரிக்க வேண்டாம்.

#17. பால்

பசும்பால் கிடைத்தால் தினமும் ஒரு டம்ளர் பசும் பால் தருவது நல்லது. எருமைப்பால் தவிர்த்துவிடுங்கள்.

பாலாக குடிக்க பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடுங்கள். குழந்தைகளை கட்டாயப்படுத்திக் கொடுக்க வேண்டாம்.

ராகி, கீரைகள், எள்ளு, ஆரஞ்சு, கொய்யா, உருளை, அத்தி, பாதாம், நட்ஸ், கொண்டைக்கடலை ஆகியவற்றிலிருந்து குழந்தைகளுக்கு கால்சியம் கிடைக்கும்

இதையும் படிக்க: வீட்டிலே செய்யலாம் ஹோம்மேட் ராகி பூஸ்ட் பவுடர்…

#18. சீஸ்

பிரெட் டோஸ்ட், கட்லெட், பான்கேக், கேக், சாண்ட்விச், ஃபிங்கர் ஃபுட் இவற்றில் சீஸ் சேர்த்து குழந்தைகளுக்கு தரலாம்.

#19. நட்ஸ் மற்றும் விதைகள்

குழந்தைகள் மென்று சாப்பிட பழகி இருந்தால் மட்டுமே நட்ஸ் தரலாம். 3 வயதுக்கு மேல் நட்ஸ் தரலாம்.

பாதாம், முந்திரி, உலர்திராட்சை, பிஸ்தா, ஆப்ரிகாட், வால்நட், பூசணி விதைகள், வெள்ளரி விதைகள், சூரியகாந்தி விதைகள் ஆகியவைத் தரலாம்.

#20. இறைச்சி

சிக்கன், மட்டன் நன்றாக வேகவைத்து காரம் குறைவாக சேர்த்துக் கொடுக்கலாம்.

குழந்தைக்கு தேவையான இரும்புச்சத்துகள் கிடைக்கும்.

சிக்கன் சூப், மட்டன் சூப் கொடுக்கலாம். கொஞ்சமாக சாதத்தில் சிக்கன் கறி, மட்டன் கறி சேர்த்து பிசைந்து கொடுக்கலாம்.

நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை

  • தாய் வழி, தந்தை வழி போன்ற மரபியல் காரணமாகவும் குழந்தைகள் ஒல்லியாக இருக்கலாம். எனவே அவர்களுக்கு குண்டாக அதிக உணவைத் தர கூடாது.
  • குழந்தை ஒல்லி, குண்டு எனப் பார்க்காமல் சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக இருக்கிறார்களா எனப் பாருங்கள்.
  • குண்டு குழந்தைதான் ஆரோக்கிய குழந்தை என நினைப்பது தவறு.
  • கொழுப்பு உணவுகளைவிட ஆரோக்கிய உணவுகள் மீது அதிக கவனம் செலுத்துங்கள்.
  • குழந்தையின் பசியை அதிகரிக்க, குழந்தையை நன்கு விளையாடவிடுங்கள்.
  • குழந்தையை கட்டாயப்படுத்தி எந்த உணவையும் கொடுக்காதீர்கள்.
  • அதிக அளவு உணவைக் கொடுத்து பழக்க வேண்டாம். போதுமான அளவு உணவைக் கொடுக்கலாம்.

இதையும் படிக்க: ஹோம்மேட் ஹெல்த் டிரிங்க் பவுடர் செய்வது எப்படி? 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஹோம்மேட் ஓட்ஸ் மீல் சோப் தயாரிப்பது எப்படி?

tamiltips

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான ‘லஞ்சு பாக்ஸ்’ ரெசிபிகள்! (2 to 5 வயது)

tamiltips

கோபம் வந்தால் இதையெல்லாம் செய்யுங்க… தாய்மார்களுக்கான டிப்ஸ்…

tamiltips

பாதாம் பயன்கள்: குழந்தை முதல் பெரியவர்கள் வரை!

tamiltips

ஃபீடிங் பாட்டில் சுத்தம் செய்யும் முறைகள் மற்றும் டிப்ஸ்…

tamiltips

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை ஏற்படாமல் தடுக்க, என்ன கற்றுத்தர வேண்டும்?

tamiltips