Tamil Tips
குழந்தை பெற்றோர்

பாரம்பர்ய விளையாட்டுகளால் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

உடலைக் காக்கும் விளையாட்டுகள் நம் பாரம்பர்ய விளையாட்டுகள் எனப் பெருமையாக சொல்லலாம். ஒவ்வொரு விளையாட்டுகளிலும் பல நன்மைகள் இருக்கின்றன. பாரம்பர்ய விளையாட்டுகளால் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். மூளைத்திறன், கவனத்திறன், பார்வைத்திறன், வர்ம புள்ளிகள் தூண்டப்படுவது, அக்கு புள்ளிகள் இயக்கம் பெறுவது என ஒவ்வொரு விளையாட்டும் பல்வேறு மருத்துவ பலன்களைத் தருகின்றன.

அப்படி ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் தரும் விளையாட்டுகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பாரம்பர்ய விளையாட்டுகளால் கிடைக்கும் நன்மைகள்…

செலவு குறைந்தவை. சில விளையாட்டுகளில் சிறிதளவுகூட செலவே இல்லை. ஆனால் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் மிக மிக அதிகம்.

மூளை, கை, கால், கண், வாய் என அனைத்துக்கும் பயிற்சியாகும்.

பல வகை விளையாட்டுகள் இருப்பதால், ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விளையாட்டில் வெற்றி பெற முடியும். இதனால் பொறாமை எண்ணமும் தவிர்க்கப்படும்.

Thirukkural

பாடி கொண்டே, சத்தம் செய்து கொண்டே விளையாடுவதால் பேச்சு திறன் மேம்படும்.

வெறும் காலால் விளையாடும் விளையாட்டுகளால் நடைத்திறன் சிறக்கும்.

பெரும்பாலான விளையாட்டுகள், மாலை வேளையில் விளையாட மாலை வெயிலின் மருத்துவ குணங்கள் கிடைக்கும்.

பரமபதம்

ஏணி, பாம்பு என இரண்டு படங்கள் வைத்து, 100 எண்ணிக்கை கொண்ட கட்டங்கள் இருக்கும்.

தாயக் கட்டையில் விழும் எண்களை வைத்து, காயை நகர்த்த வேண்டும்.

இந்த விளையாட்டால், கணிப்பு திறன், கணித திறன் கிடைக்கும்.

வெற்றி, தோல்வி, ஏற்றம், இறக்கம் பற்றிய அறிவு கிடைக்கும்.

பல்லாங்குழி

12 குழிகளில் புளியங்கொட்டை போட்டு, வரிசையாக எடுத்து விளையாடும் விளையாட்டு.

எண்களை சொல்லிக் கொண்டே விளையாட வாய்ப்பாகும்.

சிந்தனைத்திறன் மேலோங்கும்.

கைவிரல்களுக்கு நிறைய வேலைக் கிடைக்கும். குழந்தைகளின் மோட்டார் ஸ்கில்ஸ் நன்கு செயல்பட உதவும்.

மியூசிக் சேர்

பாடலை ஒலிக்க விட்டு, சுற்றி வைத்திருக்கும் சேர்களை சுற்றி ஓடும் விளையாட்டு.

குழந்தைகளுக்கு உடலுழைப்பு கிடைக்கும்.

ஓடுவது, உட்காருவது, கவனிப்பது போன்றவை இந்த விளையாட்டில் அதிகம்.

குண்டு குழந்தைகள் இளைக்க வாய்ப்பு உண்டு.

கால் தசைகளுக்கு வலு கிடைக்கும்.

traditional games for kids

Image Source : youtube

googletag.cmd.push(function() { googletag.display(‘div-gpt-ad-1528202144377-0’); });

கபடி அல்லது சடு குடு

2 டீம் இருப்பார்கள். இவர்களுக்கு இடையே ஒரு பெரிய கோடு இருக்கும்.

ஒரு நபர் எதிர் டீமில் உள்ள ஒரு நபரை தொட வேண்டும். கபடி கபடி எனச் சொல்லி கொண்டே இருக்க வேண்டும்.

உடலுழைப்பு தரும் விளையாட்டு இது.

மூச்சுப்பயிற்சிக்கு இணையான பலன்கள் கிடைக்கும்.

பேச்சுத்திறன் மேலோங்கும்.

நுரையீரல் நன்கு செயல்படும்.

பச்சக்குதிரை

ஒரு நபரை கீழே குனிய வைத்து, மற்றொருவர் தனது இரு கைகளையும் குனிந்தவரின் முதுகில் வைத்து தாண்டி ஆடும் ஆட்டம்.

கை, கால்களுக்கு மிகுந்த பலம் கிடைக்கும்.

கை, கால்கள் நன்கு ஸ்ட்ரெச் ஆகும். வளைவுத்தன்மை கிடைக்கிறது.

பலமுடன் மற்றொருவரை தாங்கும் வாய்ப்பு கிடைக்கிறது. பலம் தரும் விளையாட்டு.

இதையும் படிக்க: தங்கை/தம்பிக்காக அக்கா/அண்ணாவைத் தயார்ப்படுத்துவது எப்படி? சூப்பர் சீக்ரெட்ஸ்…

பாண்டி ஆட்டம்

செவ்வகம் வரைந்து, அதில் கட்டங்கள் வரைந்து ஒரு காலை மடக்கி, இன்னொரு காலால் நொண்டி அடிப்பது போல் நடந்து கொண்டு விளையாடும் ஆட்டம்.

கால்களின் தசை நரம்புகளுக்கு சீரான இயக்கம் கிடைக்கிறது.

கால்களுக்கு மிகுந்த பலம் கிடைக்கிறது.

உடல் சமநிலை சீராகிறது.

கில்லியாட்டம்

ஒரு சின்ன கட்டையை தரையில் வைத்து, அந்த கட்டையை பெரிதான கட்டையைக் கொண்டு அடித்து, எறிந்து, விளையாடுவது கில்லி விளையாட்டாகும்.

உடல் இயக்கங்கள் சீராக நடைப்பெறும்.

கும்மி ஆட்டம்

முளைவிட்ட தானியங்களை, ஒரு மண் பாண்டத்தில் போட்டு, நன்கு வளர்ந்து இருக்கும். அதனை முலைப்பாரி என்று கூறுவர்.

இதை நடுவில் வைத்து, பெண்கள் தங்கள் இரண்டு கைகளையும் தட்டி, கும்மிப்பாட்டு பாடுவர்.

இதனால் கைகளுக்கு ரத்த ஓட்டம் சீராக கிடைக்கிறது.

பம்பரம்

traditional games for kids

ஒரு வட்டத்தில் 3 பம்பரங்கள் வைக்கப்படும். வட்டத்துக்குள் உள்ள 3 பம்பரத்தை, தன் பம்பரத்தால் சுற்றி, விளையாடி பம்பரத்தை வெளியே வர செய்ய வேண்டும்.

பார்வைத்திறன், கவனத்திறன் மேலோங்கும்.

கோலிக்குண்டு

கோலியை ஒரு முனையில் ஒருவர் வைத்துக்கொள்ள, மற்றொருவர் தன்னுடைய கோலி குண்டை தனது ஆட்காட்டி விரலைக் கொண்டு குறிப்பார்த்து அடிக்க வேண்டும்.

குழந்தைகளின் பார்வை திறன் மேலோங்கும்.

கவனிப்பு திறன் அதிகரிக்கும்.

கைகளில் உள்ள வர்மப்புள்ளிகள் தூண்டப்படும்.

பருப்பு சாதம்

அடம் பிடிக்கும் குழந்தைகள்

அழும் குழந்தைகள்

உணவை உண்ணாமல் தவிர்க்கும் குழந்தைகள்

இவர்களை பெற்றோர் தன் குழந்தையின் கையை பிடித்து, தனது முழங்கையை கொண்டு பருப்பு சாதம் கடைவது போல் கடைந்து, குழந்தையின் ஒவ்வொரு விரலாக மடக்கி அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அக்கா, அண்ணா என விளையாட்டு காட்டி சோறு ஊட்டுவார்கள்.

குழந்தையை சாப்பிட வைக்கும் ஒரு முறை இது.

இதையும் படிக்க: குழந்தைகள் உள்ள வீட்டில் இருக்க வேண்டிய 7 முக்கியமான வீட்டு வைத்தியம்

நடை வண்டி ஓட்டம்

பனங்காய் அல்லது மரக்கட்டையைக் கொண்டு, 3 சக்கரங்கள் செய்து, ஒரு சிறிய வண்டி போல் அமைத்து, அதில் தன் காலை வைத்து தள்ளிக்கொண்டே ஓடும் விளையாட்டு.

நடைத்திறன் மேலோங்கும்.

நடை பழகாத குழந்தைகள் கூட நன்கு நடக்க தொடங்குவார்கள்.

குலை, குலையாய் முந்திரிக்காய்

இரண்டு பேர் கைகளை மேலே உயர்த்தி, கோர்த்து நின்றுக் கொள்வர்.

மற்றொரு குழந்தை உயரே தூக்கி வைத்திருக்கும் கைகளுக்கு அடியில் ஒவ்வொரு முறையாக சென்று வருவர்.

தங்கள் கைகளுக்கு உள்ளே வரும் நபரை பிடித்துக்கொண்டால், அந்த நபர் வெளிவர முடியாமல் மாட்டிக்கொண்டால் அவர் அவுட்.

மகிழ்ச்சி தரும் விளையாட்டு இது.

கூ… கூ… ரயில் வண்டி…

குழந்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக தங்களது தோள்ப்பட்டையை பிடித்துக்கொண்டு கூ..கூ… எனக் கத்தி கொண்டே வரிசையாக ஓடுவர்.

கால்களுக்கு நல்ல பயிற்சி தரும் விளையாட்டு.

உடல் இயக்கங்கள் சீராக இருக்கும்.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கு ஏற்ற 4 வகை ஹெல்தி, டேஸ்டி பான்கேக் ரெசிபி…

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தை பிறக்கும்போது என்னவெல்லாம் தயாராக வைத்திருக்க வேண்டும்?

tamiltips

உங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? இதை முதலில் செய்யுங்கள்…

tamiltips

குழந்தையின் வயிறு வலியை நீக்கும் வீட்டு வைத்திய முறைகள்…

tamiltips

3 வகையான பேபி மசாஜ் எண்ணெய் செய்வது எப்படி?

tamiltips

அத்திப்பழம் தரும் அசத்தல் நன்மைகள்

tamiltips

குழந்தைகளின் துணிகளை இப்படி பராமரித்தால் கிருமிகள் தாக்காது..! 21 வழிகள்

tamiltips