Tamil Tips
குழந்தை பெற்றோர்

குழந்தைகளுக்கு என்னென்ன பொம்மைகள் வாங்கி தரலாம்?

குழந்தைகளுக்கு பாதுகாப்பான பொம்மைகளை வாங்கி தருவது முக்கியம். குழந்தைகளின் வாழ்வில் சில காலத்துக்கு நாயகர்களாக இருப்பது அவர்களின் பொம்மைகள்தான். வயதுக்கு ஏற்ற படி நிறைய பொம்மைகள் கிடைக்கின்றன. எது பாதுகாப்பானது? எதை வாங்கி தரலாம் என இங்கு பார்க்கலாம்.

0-6 மாத குழந்தைகள்

குழந்தைகள் தங்களிடம் நெருங்கும் நபர்களைத்தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

அவர்களின் கண்களைத்தான் அதிகமாக குழந்தைகள் பார்ப்பார்கள்.

முகம், கண், கைகள் அசைவு, பளிச் நிற உடைகள் ஆகியவற்றை பார்ப்பார்கள்.

தன் கை, கால்களால் என்ன செய்ய முடியுமோ அதைக் கவனித்து கொண்டிருப்பர்.

Thirukkural

தலையைத் தூக்குவது, சத்தம் எழுப்புவது, வாயில் கை வைப்பது இதைத்தான் அதிகம் செய்வார்கள்.

கைகளில் பிடித்துக்கொள்ள ஏற்றதாக இருப்பதை, குழந்தைகள் வாயில் வைத்து சப்புவார்கள் என்பதால் பெரிய பொம்மைகளாக வாங்கி கொடுக்கலாம்.

சத்தம் வரக்கூடிய பொம்மைகளை வாங்கி தரலாம்.

பெரிய ரிங், ராட்டில்ஸ், ஸ்குவீஸ் டாய்ஸ், டீத்திங் டாய்ஸ், சாஃப்ட் டால்ஸ், டெக்ஸ்சர் பால்ஸ், வினைல், போர்ட் புக்ஸ் போன்றவை வாங்கி கொடுக்கலாம்.

ரைம்ஸ் உள்ள சிடி போடுவது, சின்ன சின்ன மியூசிக் சிடி, தூங்க வைக்கின்ற தாலாட்டு பாடல்கள் போன்றவை வாங்கி ஒலிக்க செய்யலாம்.

சிறிய பொருட்களை வாங்கி தர கூடாது. வாயில் வைத்து விழுங்கும் அபாயம் உள்ளது.

7-12 மாத குழந்தைகள்

இந்தப் பருவத்தில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர கூடியவர்கள்.

உட்காருவது, புரள்வது, தவழ்வது, நிற்பது, நடப்பது, கத்துவது, அழுவது, இழுப்பது போன்றவற்றை செய்வார்கள்.

அவர்களின் பெயர் அவர்களுக்கு தெரியும்.

பொதுவாக ஓரளவு வார்த்தைகளை அவர்கள் புரிந்து வைத்திருப்பார்கள்.

தண்ணீர் டாய்ஸ், சக்கரம் உள்ள மரக்கட்டை பொம்மைகள், பிளாஸ்டிக் பொம்மைகள், பப்பட்ஸ், பெரிய பந்து, பெரிய சாஃப்ட் பிளாக்ஸ், கட்டையால் ஆன சதுரங்கள், தவழ்ந்து வரும் பொம்மைகள், எடை இல்லாத பொம்மைகள் வாங்கி கொடுக்கலாம்.

முன்பு பயன்படுத்திய மரத்தால் தயாரித்த நடை வண்டி வாங்கி கொடுக்கலாம். வாக்கர் தவிர்க்கவும்.

choosing safe toys

Image source : Indya connects

இதையும் படிக்க: குழந்தையின் நகம் கடிக்கும் பழக்கம்… தீர்வுகள் என்னென்ன?

1 வயது குழந்தைகள்

போர்ட் புக்ஸ் – சின்ன, எளிமையான படங்கள் இருப்பது.

நிறைய நிஜ படங்கள் இருக்கும் புத்தகங்கள் வாங்கி தரலாம்.

வாஷ்ஷபிள் மார்க்கர்ஸ், கிரெயான்ஸ், பெரிய பேப்பர், நச்சுகள் இல்லாத கலர்ஸ் வாங்கி தரலாம்.

பொம்மை ஃபோன், பெண், ஆண், குழந்தை பொம்மைகள், குழந்தைகளுக்கான பர்ஸ், ஸ்கார்ஃப், பொம்மை பேக், விலங்கு பொம்மைகள், பொம்மை வண்டிகள் வாங்கி கொடுக்கலாம்.

மரகட்டை பிளாக்ஸ், கார்ட் போர்ட் ஆகியவை வாங்கி தரலாம்.

பசல்ஸ், பெரிய பெக் போர்ட்ஸ், ஓவிய புத்தகம், கலர் பெயின்டிங்ஸ் கொடுக்கலாம்.

2 வயது குழந்தைகள்

மொழியை வேகமாக கற்கும் பருவத்தில் இருப்பார்கள்.

உயரத்திலிருந்து குதிப்பார்கள், எதிலாவது ஏறுவார்கள், எதையாவது பிடித்துக்கொண்டு தொங்குவார்கள், முரட்டுத்தனமாக விளையாடவும் செய்வார்கள்.

கைகள், தன் விரல்களால் சின்ன சின்ன பொருட்களைகூட அழகாக எடுத்து விளையாடுவார்கள்.

பிளாக்ஸ், மர பொம்மைகள் ஏற்றது.

பிளாக் பில்டிங் – நிறைய தீம்களில் வரும். வீடு கட்டுதல், ரயில் வண்டி கட்டுதல், கிச்சன் செட், நாற்காலி போன்ற மூளைக்கு வேலை தரும் பொம்மைகள் நல்லது.

பொம்மைகளுக்கு உடை அணிவது, அலங்கரிப்பது, மண், தண்ணீரில் விளையாட அதற்கு ஏற்ற பொம்மைகளும் கிடைக்கின்றன.

சாக், போர்ட், பெரிய கிரெயான், டிராயிங் புக்ஸ் கொடுக்கலாம்.

படங்கள் நிறைய இருக்க கூடிய புத்தகங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

மியூசிக், ரைம்ஸ் நிறைந்த சிடி, டிவிடி கொடுக்கலாம்.

இந்த வயதில் மூன்று சக்கர வண்டி வேண்டாம்.

இதையும் படிக்க: உங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? இதை முதலில் செய்யுங்கள்…

choosing safe toys for kids

Image source : Educational toys expert

3-6 வயது குழந்தைகள்

பள்ளிக்கு செல்லும் வயது இது. ப்ரீகேஜி, எல்.கே.ஜி சேரும் வயது.

நிறைய கேள்விகளை கேட்பார்கள்.

நண்பர்களுடன் விளையாட அதிகம் விரும்புவார்கள்.

12 -20 பீஸ் உள்ள பசல்ஸ் கொடுத்து விளையாட வைக்கலாம்.

இந்த வயதுக்கான பெரிய பொம்மைகள், பில்டிங் பிளாக்ஸ் வாங்கி கொடுக்கலாம்.

களி மண் கொடுத்து உருவங்கள் செய்ய சொல்லலாம்.

வரைதல், கிறுக்குவது மிகவும் பிடிக்கும்.

கீபோர்ட் வாசிப்பது, சத்தம் வர கூடிய கருவிகள் வாங்கி தரலாம்.

வயதுகேற்ற படங்கள் உள்ள புத்தகங்கள் வாங்கி தரலாம்.

மூன்று சக்கர வண்டி வாங்கி தரலாம்.

கவனத்தில் கொள்ளவேண்டியவை

லெட் கலந்த பொம்மைகள் தவிர்க்கலாம்.

உரிந்து வரக்கூடிய தரமற்ற பொம்மைகள் வேண்டாம்.

3 வயது வரை சின்ன பொம்மைகள் தவிர்க்கலாம்.

பீட்ஸ் வாங்கி தரக்கூடாது. தவறுதலாக வாயில் போடும் வாய்ப்பு அதிகம்.

கூர்மையான பொம்மைகள், அதிக எடையுள்ள பொம்மைகள் தவிர்க்கலாம்.

வாக்கர் வாங்கி தர வேண்டாம். குழந்தைகளின் இயல்பான சில பருவ காலத்தையும், மைல்கற்களையும் மாற்றி விடும். முன்பு பயன்படுத்திய மரத்தால் தயாரித்த நடை வண்டி வாங்கி கொடுக்கலாம்.

இதையும் படிக்க: பாரம்பர்ய விளையாட்டுகளால் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சண்டை போடும் குழந்தைகள்… சரிப்படுத்தும் வழிமுறைகள்…

tamiltips

குழந்தைகளுக்கு உண்டாகும் மலச்சிக்கலைப் போக்கும் வீட்டு வைத்தியம்

tamiltips

பிறப்புறுப்பு பகுதியில் வரும் பிரச்னைகள்… எதெல்லாம் நார்மல் அறிகுறிகள் அல்ல?

tamiltips

சமைக்க வேண்டாம்… 5 வகையான இன்ஸ்டன்ட் கிச்சடி ரெசிபி…

tamiltips

கர்ப்பம் முதல் பிறப்பு வரை… பச்சிளம் குழந்தைகளின் மரணங்களைத் தடுப்பது எப்படி?

tamiltips

பல நோய்கள் வராமல் தடுக்கும் ஒரே ஒரு மருந்து… இது நம் பாரம்பர்ய பொக்கிஷம்…

tamiltips