இதனால் வைட்டமின் டி குறைபாடு என்பது தசை பிடிப்பு அல்லது வலி, நரம்பு மண்டலத்தில் எரிச்சல் போன்றவை ஏற்பட காரணமாக இருக்கிறது. உங்களுக்கு நீண்ட நாட்களாக காரணமே தெரியாமல் உடலில் வலி இருந்தால் அதற்கு வைட்டமின் டி குறைபாடு காரணமாக இருக்கலாம்.
கால்சியத்தை உறிஞ்சி எலும்பை பலப்படுத்த வைட்டமின் டி உதவுகிறது. வைட்டமின் டி குறையும் போது கால்சியம் கிரகிக்கப்படும் தன்மை குறைந்து எலும்புகள் பலவீனம் அடைகின்றன. இதனால் புற்றுநோய், ஆஸ்டியோபெராசிஸ் போன்ற பிரச்னை வருவதற்கு காரணமாகிவிடுகிறது.
வைட்டமின் டி குறைபாட்டை எப்படி கண்டறிவது? எளிய ரத்தப் பரிசோதனை மூலம் வைட்டமின் டி குறைபாட்டை கண்டறிந்துவிடமுடியும். ஒருவேளை நீங்கள் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தால் முதல்கட்டமாக உங்கள் மருத்துவரை ஆலோசித்து அவர் பரிந்துரையின் பேரில்,
வைட்டமின் டி சத்து மாத்திரையையை குறைந்தது மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் மருத்துவர்தான் நீங்கள் எவ்வளவு அளவு மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறமுடியும்.
ஆறு மாதம் கழித்து வித்தியாசத்தை மீண்டும் ஒரு ரத்த பரிசோதனை மூலம் கண்டறியலாம். இதுதவிர, வைட்டமின் டி அதிக அளவில் நிறைந்துள்ள முட்டை, பால், மீன், மீன் எண்ணெய், காளான் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். தினமும் காலை நேரத்தில் ஒரு 10 நிமிடங்கள் சூரிய ஒளியில் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.